வரி குறைப்பு எங்கே?
புரோகிதக் கூட்டத்தார் தேசாபிமானம் என்னும் போர்வையைப் போர்த்துக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பதவியடைவதற்குச் செய்த சூழ்ச்சிகளில் பெரியது சகல துறைகளிலும் வரிகளைக் குறைத்து விடுவதாகக் கூப்பாடு போட்டு மக்களை ஏமாற்றினதாகும். இந்தக் கூப்பாடுகள் நடக்கும் போதே இவை முழுப் புரட்டென்றும் மொத்தத்தில் ஒரு தம்பிடி வரிகூடக் குறைக்க இவர்களால் முடியாதென்றும் இவர்கள் மேலும் மேலும் வரிபோடத் தான் போகிறார்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்லிவந்தோம். அதுபோலவே இன்றைக்கு புரோகித ஆட்சி ஏற்பட்டு இந்த 2, 3 மாத இடையில் எவ்வளவோ காரியம் செய்துவிட்டதாகப் பறை அடித்தும் அவசரப்பட்டுச் செய்வதாக யாரும் ஆத்திரப் படக்கூடாது என்று பொது மக்களுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு இஷ்டப்படிக்கெல்லாம் ஆடிக் குதித்துக்கொண்டும் அகங்காரமாகவும் ஆணவமாகவும் பேசிக் கொண்டும் திரிகிற இந்தப் புரோகிதக் கூட்ட ஆட்சியானது வரி விஷயத்தில் ஏதாவது காரியம் செய்திருக்கிறதாவென்று பார்த்தால் அந்த விஷயத்தில் ஒரு காசுகூடக் குறைக்கவில்லை என்பதோடு இன்னமும் எந்தெந்தத் துறையில் புது...
