Author: admin

அறிவு வளர்ச்சி

அறிவு வளர்ச்சி

எந்தக் காரியமானாலும், எந்த நிகழ்ச்சியானாலும் எதைச் செய்தாலும் அதற்குமுன், ‘‘இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்துவருகிறதா?’’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும். அப்படி இல்லாமல் பழக்கம், பழைமை, முன்னோர்கள் என்று போனால் அறிவு வளர்வதற்குப்பதில் முட்டாள்தனம்தான் வளர்ச்சியடையும். (வி.27.11.69;3:4)   அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னோருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள்! (கு.30.10.32;9)

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

மாற்றுக் கருத்தினரையும் மதித்த மாண்பாளர் பெரியார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. கருத்து மாறுபாடுகளையும் கடந்த பெருந் தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) சிறை குற்றவாளிகளிடம் கனிவு சிறைச்சாலையில் இருக்கும் பொழுது, அங்கிருந்த ஏழைக் குற்றவாளிகள் இவருடைய மீசை தாடியை பார்த்து இவர் ஒரு துறவியார் (சாமியார்) என்று நினைத்துக் கொள்வார்கள். எனவே அவ்வப்பொழுது அவர்கள் வந்து இவர் கால்களில் விழுந்து கும்பிட்டு, ஐயா! பெரியவரே! சாமி! நாங்கள் ஏதோ பெரிய தீவினை (பாவம்) பண்ணிவிட்டு, சிறையிலே வந்து சேர்ந்திருக்கிறோம்; எங்களுக்கு மன்னிப்பு உண்டா? கடவுள் எங்களது தீவினையை (பாவத்தை) நீக்குவாரா? நீங்கள் எங்களுக்கொரு நல்ல...

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு 30 உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை கள் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனை களுடன் ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். மூளைச் சாவு : தமிழ்நாட்டில், ‘மூளைச் சாவு அடைந்தோர் உடலுறுப்பு கொடைத் திட்டம்’ 2008, அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கிய பின் உடலுறுப்புகள் கொடை பெற்று பிற நோயாளிகளுக்குப் பொருத்தப் படுகின்றன. மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், இருதய வால்வுகள், கண்கள், தோல், இரத்தக் குழாய்கள் ஆகிய 10 உறுப்புகளை கொடையாகப் பெற முடியும். தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 676 பேர் தங்கள் உடலுறுப்புகளை கொடை அளித் துள்ளனர். தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு மூளைச் சாவு அடைந்த 15 முதல் 20 பேரின் உடலுறுப்புகளை அவர்களது உறவினர்கள் கொடையளிக்கின்றனர். ஆனால், மூளைச் சாவு...

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

செயற்கைக் கருத்தரிப்பிலும் ஜாதி வெறி

பண்டைய பீகார், கல்வியில் மிகவும் சிறந்து விளங்கியது. அங்கேதான் ‘நாளந்தா’, ‘விக்கிரமசீலா’ போன்ற பௌத்தப் பல்கலைக் கழகங்கள் இருந்தன. ஆனால் இன்று, கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது. வேலை கிடைக்காமல் பிழைப்பு தேடி, மாநிலம் விட்டு மாநிலம் அலையும் பீகாரிகளை எல்லா இரயில் நிலையங்களிலும் காண முடிகிறது. பீகாரிகளின் வாழ்க்கை அவலத்தை, சாதியக் கொடுமைகளைக் காண முடிகிறது. பௌத்த சமயம் வேர் ஊன்றிய பீகாரில் ஏன் இன்னும் சாதிப் பிரச்சினை அப்படியே இருக்கிறது? காரணம், நிலப்பிரபுத்துவம் அப்படியே இருக்கிறது. விவசாயக் கிராமங்களில் இன்றும் உயர்சாதியினரே தலைவர்களாக இருக்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை வெளிப்படையாகவே நடைபெறுகிறது. பாட்னாவில் உள்ள விந்து வங்கிகளில் சாதிவாரியாக விந்து சேகரித்து வைக்கப்பட்டள்ளது. ‘செயற்கைக் கருத்தரிப்பில்கூட சாதிக் கலப்பு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்’ என்கிறார் மருத்துவர் சின்ஹா. இதை உறுதிப்படத்துவதுபோல ஒரு சம்பவம் கயா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செயற்கைக் கருத்தரிப்பு செய்து, கர்ப்பம் தரித்த மாலா என்கிற...

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டக் கழக தோழர்களின் புதிய அணுகுமுறை செப்.17இல் இல்லம் தேடி சந்திப்பு

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் 17.9.2015 அன்று தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட கழகச் சார்பில் ஒரு நாள் முழுவதும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு என்றும், மாலை குடும்ப விழாவாகவும் கொண்டாடப் பட்டது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆலோசனைப்படி, இவ்விழாவினை கடந்த ஆண்டு 17.9.2014 அன்று தூத்துக்குடி பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, பாவூர் சத்திரம் பகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தோழர்கள், ஆதரவாளர்கள் சந்திப்பாக நடத்த திட்டமிட்டு, முதல் நிகழ்வாக, கீழப்பாவூர் பெரியார் திடலிலுள்ள பெரியார் சிலைக்கு கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா மாலை யணிவித்ததோடு தொடங்கியது. தோழர்கள் இரு சக்கர வண்டியில் கொடிகளை கட்டிக் கொண்டும் கார்களிலும் அணிவகுத்து வந்தது பொது மக்களை பெரிதும் கவர்ந்தது. தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்து கழக...

சுயமரியாதை அகராதி

சுயமரியாதை அகராதி

அடுத்த ஜென்மம் என்பது முடிச்சு மாறிகள் பேச்சு ஆரியர் சூழ்ச்சி அறிவுக்கு வீழ்ச்சி இதிகாசம் என்பது மதிமோச மயக்கம் உண்மையைச் சொல்ல ஒருபோதும் தயங்காதே! ஊழ்வினை என்பது ஊக்கத்தைக் கெடுப்பது கருமாந்திரம் என்பது காசுபறிக்கும் தந்திரம் கல்லைத் தெய்வமென்று கற்பிக்க வேண்டாம் கோத்திரம் என்பது குலத்தைப் பிரிப்பது சனாதன தர்மம் என்பது சரியான அதர்மம் சாமி சாமி என்பது காமிகளின் உளறல் சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி திதியைக் கொடுப்பது நிதியைக் கெடுப்பது தெய்வ வழிபாடு தேச மக்களுக்குக்கேடு பார்ப்பனர்கள் என்போர் பகற்கொள்ளைக்காரர்கள் புராணங்கள் என்பவை பொய்மைக் களஞ்சியங்கள் பேதமென்பது வேதியருக்கணிகலம் மகாபாரதம் என்பது பஞ்சமாபாதகம் மடத் தலைவர்கள் மடமைத் தலைவர்கள் மதக்குறி என்பது மடமைக்கு அறிகுறி முக்தி முக்தி என்று புத்தியைக் கெடுக்காதே விதி விதி என்பது மதியைக் கெடுப்பது வேதம் என்பது சூதாய்ச் சொன்னது ஜாதி வேறுபாடு ஜன சமூகக் கேடு க்ஷேத்திரமென்பது சாத்திரப்புரட்டு! – ‘குடிஅரசு’ 28.2.1930

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ‘நாத்திகம்’ இதழ் நிறுவனர் மறைந்த நாத்திகம் பி. இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், ‘எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; எங்கள் இளைய சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமாக 24.9.2015 அன்று ஆழ்வை சீரணி அரங்கில் ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, செ. செல்லத்துரை, கோ.அ. குமார், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் உரைக்குப் பின், கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் நாத்திகம் பி.இராமசாமியின் பணிகளை நினைவு கூர்ந்ததோடு, நாட்டில் நிலவும் கனிமவளக் கொள்ளை, சாதி ஆணவக்...

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதி பூசை என்பது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி – அதற்குச் சரசுவதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி இல்லாமல் சாமியை நம்பிக் கொண்டு இருக்கும்படிச் செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளி யாகிக் கொண்டு நம்மைப் படிப்பு வர முடியா ‘மக்குகள்’ என்று சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். முதலாவது, சரசுவதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரசுவதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு...

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

மக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கும் வரலாறுகள் எழுதப்படவேண்டும் – ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

“பார்ப்பனியத்தால் பிரிக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைகளை வலியுறுத்தும் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் வலியுறுத்தினார். திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படங்களை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்,...

திருப்பூர் S.P அலுவலகத்தில் நடந்த ஆயுத பூஜையை தடுத்து நிறுத்தி பார்ப்பானை துரத்திய தோழர்கள்

திருப்பூர் S.P. அலுவகத்திற்கு நேற்று மாலை கொடியேற்றுவிழா அனுமதிக் கடிதம் கொடுக்க திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தோழர்களுடன் சென்றிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பான் ஒருவனை காவல்துறை அலுவலகத்திற்குள் அழைத்துச்செல்வதை கண்ட தோழர் முகில்ராசு அவர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த பார்ப்பான் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். நேற்றைக்கு முந்தினம்தான் காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவகங்களில் மதவழிபாடு செய்வது தமிழக அரசாணைக்கு எதிரான செயல் எனவே அரசாணைக்கெதிரான செயலை செய்யக்கூடாது என திராவிடர் விடுதலைக் கழகம சார்பில் திருப்பூரில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதனையும் மீறி காவல்துறை அரசாணைக் கெதிராகவும், இந்திய மதசார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் செயல்பட்ட திருப்பூர் S.P. அலுவலக அதிகாரிகள் ஏற்பாடு செய்த ஆயுத பூஜைக்கு தோழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தோழர்...

சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம் – புத்தக வெளியீட்டு விழா !

புத்தக வெளியீட்டு விழா ! தோழர் பாலன் அவர்கள் எழுதிய ‘சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம்”. – ஈழத்தமிழ் அகதிகளின் துயரம் எனும் நூல் வெளியீட்டு விழா 16.10.2015 வெள்ளிகிழமை மாலை 5.00 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூல் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக ,பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் உரையாற்றினார்

‘அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! – திருப்பூர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று காலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் ‘அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு’ என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் தலைமை தாங்கினார்.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,தோழர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழக தோழர்கள் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர் சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! – கோவை

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! மதச்சர்ப்பின்மை கொள்கையை கேள்விக்கு உட்படுத்துகிற அரசையும் அரச அதிகாரத்தையும் கண்டித்தும் 1. தமிழக அரசு குறிப்பாணை எண்:7553/66 29.4.1968 2 .தமிழக அரசு செயலாளரின் கடித எண். 8472/LOB/94-1 18.8.1994 3. தலைமை காவல் இயக்குனரின் கடித எண். 96243/Bldgs(1)/2005 4. தமிழக அரசு செயலாளரின் கடித எண்.15844/4/2010 22.4.2010 ஆகிய வற்றை உதாசீனப்படுத்தி மத சர்ப்பின்மைக் கொள்கைக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை,பொதுத்துறை அலுவலகங்களில் மத விழாக்களும்,வழிபாடுகளும்,பூஜைகளும் அண்மைக் காலங்களில் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றது மதச்சார்பற்ற அரசு அலுலலகங்களில் மத வழிபாடுகளை நடத்துவது மேற்கண்ட உயர்அதிகாரிகளின் அரசாணைகளை அவமதிக்கும் தன்மையாகும் அரசின் கொள்கைகளுக்கும் விரோதமாகவும் அமையும் ஆகவே மேற்க்கண்ட அரசாணையை நடைமுறை படுத்தாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கழகப் பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, புறநகர் மாவட்ட தலைவர்...

மன்னார் குடியில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் ஆர்ப்பாட்டம் !

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளைநடைமுறைப்படுத்தக்கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்க-ளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உட்பட அனைத்து அலுவலகங்களுகும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுபொருட்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி புரோகிதர்களை அழைத்துவந்து...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! – ஈரோடு தெற்கு

ஆர்ப்பாட்டம் ! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று மாலை 5 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தின சாமி தலைமை தாங்கினார்,கழக மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி ராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் விநாயக மூர்த்தி,தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் குமரகுரு,தோழர் கோபி குணசேகரன்,மற்றும் ஆதரவு இயக்க தோழர்கள்...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

அசலாத        –        அகலாத அருந்தனமாய் –        அரிய செல்வமாய் அனுஷ்டானமாய்       –        ஒழுக்கம், வழக்கம், அனுஷ்டித்தல் –        கடைபிடித்தல், சடங்கு செய்தல் அபயாஸ்தம்   –        உள்ளங்கையை உயர்த்தி                                       ஆசீர்வதித்தல் ஆப்த   –        நம்பகமான ஆப்காரி இலாகா       –        மதுவரித்துறை ஆஸ்பதம்      –        இடம், பற்றுக்கோடு இட்டேரி        –        நில எல்லைகளில் செல்லும்                            குறுகிய வழி இதரர்கள்       –        மற்றவர்கள், பிறர் இலங்கிக்கொண்டு      –        விளங்கிக்கொண்டு உத்தாரணம்    –        முன்னேற்றம், ஏறுதல் உத்ரணித்தண்ணீர்      –        கரண்டித் தண்ணீர் கண்ணோக்கம் –        நோக்கம் சகோதரப்பாவம்        –        சகோதர மனப்பான்மை சந்தியா வந்தனம்       –        சூரியத் தோற்ற, மறைவு வேலை                              ...

பெரியார் கருத்துக்கருவூலம் மகத்தான தொகுப்புப்பணி

பெரியார் கருத்துக்கருவூலம் மகத்தான தொகுப்புப்பணி

பழைய “ குடிஅரசு ”, “பகுத்தறிவு”, “புரட்சி” ஆகியவற்றில் 1925 முதல் அய்யா அவர்கள் எழுதிய எழுத்துக்கள், பேச்சுக்கள், குறிப்புக்கள் ஆகியவற்றை ஆண்டுவாரியாகத் தொகுக்கும் அரிய பணி திருச்சியில் துவங்கியது. பகுத்தறிவுப் பேராசிரியர்களும், ஆசிரியர் அணி நண்பர்களும், பெரியார் நூற்றாண்டு வளாகக் கல்வி நிலையங்களின் செயலாளர் புலவர் கோ. இமயவரம்பனின் ஒத்துழைப்போடு இப்பணியை நடத்தினர். பெரியார் கருத்துக் கருவூலத் தொகுப்புப்பணியில் ஈடுபட்ட மானமிகு தோழர்கள். புலவர் கோ.இமயவரம்பன், பெரியார் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி முதல்வர் கோ. கலியராஜுலு, திருச்சி  பேராசிரியர் க. நெடுஞ்செழியன், பேராசிரியர் திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன், பகுத்தறிவு ஆசிரியர் அணிச் செயலாளர் நண்பர் மெ. ஆரோக்கியசாமி, பேராசிரியர் செ.ஆ.வீரபாண்டியன், திருச்சி ந.வெற்றியழகன், புதுக்கோட்டை வீ.செல்லப்பன், தஞ்சை பெ.மருதவாணன், தஞ்சை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.இரத்தினகிரி, தஞ்சை  இரா. பாண்டியன், லால்குடி ப. ஆல்பர்ட் ஆகியோர் தலைமையில், சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து) கீழ்க் கண்ட தோழர்கள் உதவியாளர்களாகப் பொறுப்பேற்றுச் செம்மையான பணியாக...

பிராமணரல்லாதார் மகாநாட்டைப்பற்றி பிராமணப் பத்திரிக்கைகளின் ஓலம்

பிராமணரல்லாதார் மகாநாட்டைப்பற்றி பிராமணப் பத்திரிக்கைகளின் ஓலம்

சென்னையில் இம்மாதம் 20, 21-ந் தேதிகளில் நடைபெற்ற பிராமணரல்லாத 9-வது மகாநாட்டு நடவடிக்கைகளைப்பற்றி, “சுதேச மித்திரன்”, “°வராஜ்யா” முதலிய பிராமணப் பத்திரிகைகள் ஆத்திரம் பொறுக்காமல் வயிறு வயிறாய் அடித்துக்கொண்டு ஓலமிடுகின்றன. அவற்றில் சுதேசமித்திரன் பத்திரிகை “வசவு மகாநாடென்று” தலையங் கமிட்டு அடியிற் கண்ட ஒப்பாரியைச் சொல்லிக்கொண்டு அழுகின்றது.  அவற்றில் முக்கிய மான சிலவற்றைக் கீழே குறிப்பிட்டு அதற்குச் சமாதானம் எழுதுவோம். “இந்த மகாநாட்டிற்கு ஜனங்கள் அதிகமாக வரவில்லையே யென்று ஸ்ரீமான். டாக்டர். சி. நடேசமுதலியார் சொன்னதால், இம்மகாநாட்டிற்கு பிராமணரல்லாதார் ஆதரவு இல்லை” யென்பது. “சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதி கனம் யாதவரும் கூடி பிராமணர்களை நன்றாகத் திட்டினார்கள்” என்பது. “இந்த மாகாணத்திலும் பம்பாய் மாகாணத்திலும் ஜ°டி° கட்சி அதிகாரப் பதவியிலிருக்கின்றது, ஜனங்களுக்கு இவர்களால் என்ன செய்யப் பட்டிருக்கிறது” என்பது. “பம்பாய் மாகாணத்தில் மதுவிலக்கு விஷயமாய் ஜ°டி° கட்சி யாரின் ஒரு லக்ஷியத்தை அந்த கவர்ன்மெண்டார் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இந்தியா கவர்ன்மெண்டார் அதை நிராகரித்துவிட்டனர்....

புது ஆண்டு சன்மானம்

புது ஆண்டு சன்மானம்

1926-ம் ஆண்டு பிறக்கப்போகிறது; வருடப் பிறப்பிற்காக “குடி அரசு” பத்திரிகைக்கு என்ன சன்மானம் செய்யப் போகிறீர்கள்? ஒன்றா, “குடி அரசு”க்கு அதன் நண்பர்கள் ஒவ்வொருவரும் 3 சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுங்கள் அல்லது நமது சமூகத்துக்கே கேடு சூழும்படியான பிராமணப் பத்திரிக்கைகளின் ஒரு சந்தாதாரையாவது குறையுங்கள்.  இதை நீங்கள் செய்தால், “குடி அரசுக்கு” மாத்திரமல்லாமல், நாட்டுக்கும், பிராமணரல்லாத சமூகத்துக்கும் விடுதலை அளிக்க உங்கள் கடமையைச் செய்தவர் களாவீர்கள். குடி அரசு – அறிவிப்பு – 27.12.1925

கோயமுத்தூரில் 17-ந்தேதி மாலை டவுண் ஹாலில் பொதுக் கூட்டம்

கோயமுத்தூரில் 17-ந்தேதி மாலை டவுண் ஹாலில் பொதுக் கூட்டம்

நமது நாட்டுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தைப் பற்றியும், காஞ்சீபுரம் மகாநாட்டு நடவடிக்கைகளைப் பற்றியும், நிர்மாணத் திட்டங்களைப்பற்றியும் எடுத்துச்சொல்லி வருகையில் அவர் முக்கியமாய்க் குறிப்பிட்டதாவது:- தற்சமயம் நமது தேசத்திலுள்ள பல கட்சிகளுக்கும் ராஜீய திட்டம் ஏறக்குறைய ஒன்றாகி விட்டது.  நிர்மாணத்திட்டத்தை நடத்திவைப்பதில், எந்தக் கட்சிக்காரராயிருந்த போதிலும், நிர்மாணத்திட்டம் நடத்துவதற்குப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.  காங்கிரசை ஒப்புக் கொள்ளாதவர் களும் காங்கிரசில் சேரப் பயப்படுபவர்களும் கூட நிர்மாணத்திட்டத்தை நடத்திக் கொண்டு போகலாம்.  காங்கிரஸில் சேர்ந்தால்தான் நிர்மாணத் திட்டத்தை நடத்தலாம், இல்லாவிட்டால் நடத்தமுடியாது என்னும் பயம் உங்களுக்கு வேண்டாம்.  மகாத்மாவின் நிர்மாணத்திட்டத்தை ஆதரிக்கக் கூடிய கட்சி எதுவாயிருந்தாலும் அவைகளெல்லாம் எனக்கு ஒன்றுதான்.  நிர்மாணத் திட்டமில்லாத எந்த ராஜீயக் கட்சியையும் தேசத்திற்கு அநுகூல மானதென்று சொல்லமாட்டேன்.  நிர்மாணத்திட்டத்தில்தான் தேசத்தின்  விடுதலை இருக்கிறது.  காங்கிரசிலும் நிர்மாணத்திட்டத்தின் ஆதிக்கமிருந்த தினால்தான் காங்கிரசிற்கும் மூலைமுடுக்குகளிலெல்லாம் மதிப்பு இருந்து கொண்டு வந்தது.  இப்போது நிர்மாணத் திட்டத்தின் ஆதிக்கம் ஒழிந்து, காங்கிரசினால் ஒரு...

கோயமுத்தூரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்க கிளை °தாபனம் திறப்புவிழா

கோயமுத்தூரில் தென்னிந்திய நலஉரிமைச் சங்க கிளை °தாபனம் திறப்புவிழா

தான் இக்கூட்டத்திற்கு வரக்கூடுமென்றாவது, இதில் பேச சந்தர்ப்பம் கிடைக்குமென்றாவது ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லையென்றும், திறப்பு விழாவிற்கு வந்தவனை திடீரென்று அழைத்ததிற்காகவும், இங்கு பேசும்படி கட்டளையிட்டதற்காகவும், அழைத்தவர்களுக்கும், அக்ராசனாதிபதிக்கும், வந்தனம் செய்வதாகவும், இக்கூட்டத்திலுள்ள பிரமுகர்களெல்லாம் பழைய ஆப்த  நண்பர்களென்றும், இவர்களில் அநேகம் பேர் நெருங்கிய பந்துக் களைப் போன்றவர்களென்றும், ராஜீய அபிப்பிராயங் காரணமாக இங்குள்ள அத்தனை பேரையும் நாலைந்து வருட காலமாக தீண்டாதவர் போல் நினைத்து, தான் ஒதுங்கியிருந்ததாகவும், இப்பிரிவினை ஏற்படுவதற்கு முன் கோயமுத்தூருக்கு வந்தால் இங்குள்ள ஒவ்வொரு சிநேகிதர் வீட்டிலும் நாலு நாள், ஐந்து நாள் தங்கி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், கொஞ்சக் காலமாக இவ்வூருக்கு வந்தால் பிராமணன் ஹோட்டலுக்காவது போய்ச் சாப்பிடுவதேயொழிய, இந்த அருமையான சிநேகிதர்கள் வீட்டுக்குப் போகாமல் கூட தான் அவ்வளவு ராஜீய பத்தியமாய் இருந்ததாகவும், இப்பொழுது காங்கிரசில் சுயராஜ்யகட்சி தோன்றியபின், இவ்வளவு நாள் கொடுமையான பத்தியமாயிருந்தது அவசியமில்லாத தென்று தோன்றும்படி செய்து விட்டதாகவும், ஜ°டி° கக்ஷியின் ஆரம்ப  ராஜீய...

கோயமுத்தூர் ஸ்ரீ.தியாகராய செட்டியார் முனிசிபல் ஆ°பத்திரி                                     திறப்பு விழா

கோயமுத்தூர் ஸ்ரீ.தியாகராய செட்டியார் முனிசிபல் ஆ°பத்திரி                                     திறப்பு விழா

நமது பெரியாரும் பூஜிக்கத்தகுந்தவருமான காலஞ்சென்ற ஸர்.பி. தியாகராய செட்டியாரவர்களின் பேரால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை ஸர்.பி.தியாகராய செட்டியாரவர்களின் திருநாள் சமயத்திலேயே திறந்து வைக்கும் பெருமை எனக்கு அளித்ததற்கு நான் பெருமையடைவதோடு, என் மனப்பூர்வமான நன்றியறிதலையும் செலுத்துகிறேன்.  பெரியோர்களுடைய திருநாளைக் கொண்டாடுவது நமக்குப் பூர்வீகமான வழக்கம். ஆனால், அப் பெரியார்களைப் பின்பற்றுவதில் நாம் கிரமமாய் நடந்து கொள்வதில்லை.  ஸ்ரீமான். தியாகராய செட்டியாருக்கு, அவருடைய தேச சேவைக்காக இந் நாட்டு மக்கள் எல்லோரும் கடமைப்பட்டிருந்த போதிலும், சிறப்பாக பிராமண ரல்லாதார் என்போர் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்று சொல்லு வேன். தென்னாட்டில், பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்துக்குழைத்து, பிராமண ரல்லாதாரின் சுயமரியாதையை உணரும்படி செய்தவர், நமது தியாக ராயரே யாவார்.  அவர் கொஞ்சமும் சுயநலமில்லாமலும் அடிக்கடி மாறுபட்ட அபிப் ராயமில்லாமலும், விடா முயற்சியோடு உழைத்து வந்தவர்.  அப் பேர்ப் பட்ட வர் பேரால் இது போன்ற விஷயங்கள் மாத்திரமல்லாமல், இன்னுமநேக காரியங்கள் செய்யக்  கடமைப்பட்டிருக்கிறோம்.  அவருடைய பெருமை அவர்...

ஜமீன்தார்கள் வீட்டில் பிராமண எலிகள்

ஜமீன்தார்கள் வீட்டில் பிராமண எலிகள்

டில்லி ராஜாங்க சபைக்கு இவ்வருடம் நடந்த தேர்தல்களுக்கு அபேக்ஷகர்களிலொருவரான ஒரு பிராமணரல்லாத பிரபு கோயமுத்தூர் ஜில்லாவிலுள்ள பெரிய ஜமீன்தாரொருவருக்கு தனக்கு வோட் செய்யும்படி கேட்டு இரண்டு மூன்று கடிதங்கள் எழுதியிருந்தார்.  மற்றொரு பிராமண கனவானும் தனக்கு வோட் செய்ய வேண்டுமாய் ஒரு கடிதம் போட்டிருந்தார். தேர்தல் காலம் சமீபத்திலிருக்கும்போது  பிராமணரல்லாத கனவானுக்காக கோயமுத்தூரிலுள்ள ஒரு பிரபல யந்திரசாலையின் நிர்வாகி ஒருவர் வோட் கேட்பதற்கு ஜமீன்தாரிடம் நேரில் சென்று, விஷயத்தை எடுத்துச் சொன்னார்.  உடனே ஜமீன்தார் இதைப் பற்றி, தனக்குத் தகவலே தெரியாதே;  ஒரு பிராமணர்தான் கடிதம் எழுதியிருந் தார்;  அவருக்கு வோட் செய்வதாக நமது கும°தாவிடமும் சொல்லிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கும°தாவான பிராமணர் தங்களுக்கு நான்கு வோட் இருக்கிறது;  ஒரு வோட் தாங்கள் சொன்னபடி பிராமணருக்குச் செய்துவிட்டாலும், மற்றும் ஒரு வோட் செட்டியாருக்கும் கொடுக்கலா மென் றார்.  உடனே வோட்டுக் கேட்கப்போன கனவான் தங்களுக்கும் இது விஷயத்தைப்பற்றி 2, 3 ...

சுயராஜ்யக் கக்ஷியின் பேராசையும் அதன் முயற்சியும்

சுயராஜ்யக் கக்ஷியின் பேராசையும் அதன் முயற்சியும்

“எச்சில் சாப்பிட்டாலும் வயிறு நிறைய சாப்பிடவேண்டும், ஏய்த்து பலனடைவதானாலும் ஆசை தீர அடையவேண்டும்” என்று ஒரு பழமொழி யுண்டு, அதுபோலவே நமது சுயராஜ்யக் கட்சியார் ஆதியில் காங்கிரசை மீறிவிட்டு போனார்கள்; பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடக்க தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று காங்கிரசைக் கேட்டார்கள்.  பிறகு, தங்கள் மனச்சாக்ஷிப்படி நடப்பதை பிறர் ஆnக்ஷபிக்கக்கூடாது என்றனர். பின்பு தங்களுக்கு வேண்டிய உதவியைக் காங்கிர°, தனது மன சாக்ஷிக்கு விரோதமில்லாமல் செய்யவேண்டும் என்று கேட்டனர். பிறகு காங்கிரசில் தாங்களும் ஒரு சரியான பாகமாயிருக்க வேண்டு மென்று கேட்டனர். பிறகு காங்கிரசில் தாங்களே முக்கிய°தர்களாக வேண்டும் என்று கேட்டனர்.  இவ்வளவும் அடைந்தார்கள்.  இப்போது தாங்களே காங்கிரசாகி விட வேண்டும்; தங்களுக்கு பதவிகளும், உத்தியோகமும், காங்கிரசே வாங்கி கொடுக்க வேண்டும்; அப்படி காங்கிர°காரரே எல்லா பதவியும், உத்தியோ கமும் சம்பாதித்து கொடுப்பதானாலும், தங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது;  தங்கள் உத்திரவில்லாமல் காங்கிர°காரரும் அனுபவிக் கக் கூடாது;...

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியார்

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியார்

ஸ்ரீமான். முதலியார் தனது ‘நவசக்தி”யில் “எனது நிலை” என்ற தலைப்பிட்டு நமது “குடி அரசின்” 29 கேள்விகள் கொண்ட கட்டுரைக்கு மறுப்பு எழுதுவது போல் எழுதியிருக்கிறார்.  அதற்கு எமது குடி அரசிலும் எமது நிலை என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதக் கருதி, இவ்வாரம் “குடி அரசுக்கு” எனது நிலை ஸ்ரீமான் முதலியார் நிலை ஆகிய இருவர் நிலை முழுவதையும் விவகரிக்க இடம் போதானெக்கருதி இவ்வாரத்திய “குடி அரசு” பன்னிரன்டு பக்கத்தை, இதற்கென்றே பதினாறு பக்கமாக்கப்பட்டது.  வெளிப்படுத்த முடியாத பல இடங்களிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும், கடிதங்கள் வந்ததாலும், ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கும், எனக்கும் பொது வான நண்பர்கள் சிலர் நேரில் வந்து 144 தடை உத்தரவு போட்டதாலும், கருதிய படி நடக்கமுடியவில்லை. ஆனாலும், ஸ்ரீமான். முதலியாரின் மறுப்பில் காணும், விஷயங்களை சுமார் 30 கூறுகளாய் பிரித்திருந்தாலும், இரண்டு ஒன்றை மாத்திரம் பொது ஜனங்களுக்கு விளக்க நண்பர்களின் அநுமதி பெற்று ஓர் சிறு குறிப்பை...

ஒத்துழையாமையே மருந்து

ஒத்துழையாமையே மருந்து

ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், நிர்மாணத் திட்டத்தில் ஒன்றாகிய மதுவிலக்குக்கு சட்டசபையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு வந்திருப்பதாக அவர் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி யிருக்கும் கட்டுரைகளிலிருந்து வாசகர்களுக்கு விளங்கியிருக்கும். அத் தோடு தீண்டாமை ஒழிப்பதற்கும், கோர்ட்டுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பதாகக் கருதியிருப்பதாய் அவர் சென்ற சில தினங்களுக்கு முன் சித்தூர் ஜில்லா சப்டிவிஷனில் மாஜி°திரேட் கோர்ட்டில் ஓர் ஆதி திராவிட ஆலயப்பிரவேச வழக்கில் ஆஜராகி ஜெயம் பெற்றதன் மூல மாகவும் அறியலாம். இனி மகாத்மாவின் மூவகைப் பகிஷ்காரத்தில் முக்கிய மாயுள்ளது, சர்க்கார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடாது என்பதுதான். ஆனால் அது அநுபவத்தில் இப்போது அடியோடு  இல்லவே  இல்லை.  அதில் இப்போது நம்பிக்கை வரவேண்டிய அவசியமும் இல்லை. கோர்ட்டு, சட்டசபை ஆகிய இவ்விரண்டிலும் ஸ்ரீமான் ஆச்சாரியார் அவர் களுக்கு நம்பிக்கை வந்திருப்பது தற்கால நிலைமையில் அதிசயமுமல்ல, அது ஓர் வகையில் குற்றமுமல்லவென்றே சொல்லுவோம். ஆனால் காரியத்தில் இவையிரண்டும் தேசீய சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுமா...

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

  தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத் திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு  பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ் வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல. சரித்திர காலம் எப்படியிருந்தாலும்,   நம் கண்ணெதிராகவே சென்ற 10 வருடங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர்  நாயர் போன்றவர் களால் ஏற்படுத்தப்பட்ட, ஜ°டி° கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லா தாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் ஸ்ரீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமான சாக்ஷியம் சொல்லும்படி செய்தது மில்லாமல், ஜ°டி° கட்சியார் பிராமணரல்லாதவர்களுக்குப் பிரதிநிதி களல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச் செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட...

சென்னை தேர்தல் கலவரம்

சென்னை தேர்தல் கலவரம்

சென்னையில் நடந்த கார்ப்போரேஷன் தேர்தல்களின்போது, கலவரங்களும், பலாத்காரச் செய்கைகளும் நடந்ததாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் காணப்பட்டு வந்தன.  ஆனால் அவற்றின் உண்மையை ஜனங்கள் அறியாதபடி ஓர் கக்ஷியாரைப் பற்றியே குற்றமாய் நினைக்கும்படி சென்னை பிராமணப் பத்திரிக்கைகளும், சுயராஜ்யக் கக்ஷி பிராமணர்களும், சூழ்ச்சிப்பிரசாரம் செய்து வந்தனர்.  அதன்பின் இது சம்பந்தமாய் ஏற்பட்ட நீதி°தலத்தின் விசாரணையின் போக்கைக் கவனித்தவர்களுக்கு பலாத் காரத்துக்கும், குழப்பத்திற்கும் யார் பொறுப்பாளிகளாயிருந்தார்க ளென்பது விளங்கியிருக்கும்.  சுயராஜ்யக் கட்சியார் மீது, மற்ற கக்ஷியார் சென்னை பிரசிடென்ஸி மாஜி°திரேட் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த இரண்டு மூன்று விவகாரங்களின் முடிவினால் சுயராஜ்யக் கட்சியார்தான் அதற்குப் பொறுப் பாளிகளென்பதை விளக்கியிருக்கிறது. அதாவது:- கொஞ்ச நாளைக்கு முன் பைசலான ஒரு வழக்கில் சுயராஜ் யக் கட்சியார் ஒருவர் மற்றக் கட்சியாரைப் பிடித்துத் தள்ளியதும், திட்டியதும் ருஜுவானபோதிலும், தேர்தல்களில் இவைகளெல்லாம் நடப்பது சகஜந்தா னென தீர்ப்புச் சொல்லப்பட்டுவிட்டது. மற்றொன்றில், அடைத்து வைத்தது பற்றி விஷயங்கள் தெளிவான போதிலும், அதுவும் அவ்வளவு பெரிய...