திருப்பூர் S.P அலுவலகத்தில் நடந்த ஆயுத பூஜையை தடுத்து நிறுத்தி பார்ப்பானை துரத்திய தோழர்கள்
திருப்பூர் S.P. அலுவகத்திற்கு நேற்று மாலை கொடியேற்றுவிழா அனுமதிக் கடிதம் கொடுக்க திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தோழர்களுடன் சென்றிருந்தார்.
அப்போது காவல்துறை அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பான் ஒருவனை காவல்துறை அலுவலகத்திற்குள் அழைத்துச்செல்வதை கண்ட தோழர் முகில்ராசு அவர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த பார்ப்பான் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
நேற்றைக்கு முந்தினம்தான் காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவகங்களில் மதவழிபாடு செய்வது தமிழக அரசாணைக்கு எதிரான செயல் எனவே அரசாணைக்கெதிரான செயலை செய்யக்கூடாது என திராவிடர் விடுதலைக் கழகம சார்பில் திருப்பூரில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இதனையும் மீறி காவல்துறை அரசாணைக் கெதிராகவும், இந்திய மதசார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் செயல்பட்ட திருப்பூர் S.P. அலுவலக அதிகாரிகள் ஏற்பாடு செய்த ஆயுத பூஜைக்கு தோழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் சோழன் மற்றும் மடத்துக்குளம் நாகராசன் ஆகியோரும் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக்கூடாது என மனு கொடுக்க வந்திருந்தனர்.
இந்த சம்பவத்தை கண்ட தோழர் சோழன் அவர்கள் தன் எதிர்ப்பை மிகக் கடுமையாக தெரிவிக்க காவல்துறை மேலும் நெருக்கடிக்கு உள்ளானது.
பார்ப்பானை உடனே வெளியேற்ற வேண்டும் அதுவரை நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என திவிக மற்றும் ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் கண்டிப்புடன் கூறியதை அடுத்து பூஜை செய்ய வந்த பார்ப்பான் வெளியேற்றப்பட்டான்.
இந்திய மதசார்பின்மை கொள்கையை மீறிய,தமிழக அரசானைக்கெதிராக நடந்த காவல்துறையை கண்டித்து பூஜை செய்ய வந்த பார்ப்பானை விரட்டி அடித்த தோழர்களுக்கு பாராட்டுக்கள் !