சுயமரியாதை அகராதி

அடுத்த ஜென்மம் என்பது முடிச்சு மாறிகள் பேச்சு
ஆரியர் சூழ்ச்சி அறிவுக்கு வீழ்ச்சி
இதிகாசம் என்பது மதிமோச மயக்கம்
உண்மையைச் சொல்ல ஒருபோதும் தயங்காதே!
ஊழ்வினை என்பது ஊக்கத்தைக் கெடுப்பது
கருமாந்திரம் என்பது காசுபறிக்கும் தந்திரம்
கல்லைத் தெய்வமென்று கற்பிக்க வேண்டாம்
கோத்திரம் என்பது குலத்தைப் பிரிப்பது
சனாதன தர்மம் என்பது சரியான அதர்மம்
சாமி சாமி என்பது காமிகளின் உளறல்
சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி
திதியைக் கொடுப்பது நிதியைக் கெடுப்பது
தெய்வ வழிபாடு தேச மக்களுக்குக்கேடு
பார்ப்பனர்கள் என்போர் பகற்கொள்ளைக்காரர்கள்
புராணங்கள் என்பவை பொய்மைக் களஞ்சியங்கள்
பேதமென்பது வேதியருக்கணிகலம்
மகாபாரதம் என்பது பஞ்சமாபாதகம்
மடத் தலைவர்கள் மடமைத் தலைவர்கள்
மதக்குறி என்பது மடமைக்கு அறிகுறி
முக்தி முக்தி என்று புத்தியைக் கெடுக்காதே
விதி விதி என்பது மதியைக் கெடுப்பது
வேதம் என்பது சூதாய்ச் சொன்னது
ஜாதி வேறுபாடு ஜன சமூகக் கேடு
க்ஷேத்திரமென்பது சாத்திரப்புரட்டு!
– ‘குடிஅரசு’ 28.2.1930

You may also like...