ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு 30 உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை கள் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனை களுடன் ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.
மூளைச் சாவு : தமிழ்நாட்டில், ‘மூளைச் சாவு அடைந்தோர் உடலுறுப்பு கொடைத் திட்டம்’ 2008, அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கிய பின் உடலுறுப்புகள் கொடை பெற்று பிற நோயாளிகளுக்குப் பொருத்தப் படுகின்றன.
மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், இருதய வால்வுகள், கண்கள், தோல், இரத்தக் குழாய்கள் ஆகிய 10 உறுப்புகளை கொடையாகப் பெற முடியும். தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 676 பேர் தங்கள் உடலுறுப்புகளை கொடை அளித் துள்ளனர்.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு மூளைச் சாவு அடைந்த 15 முதல் 20 பேரின் உடலுறுப்புகளை அவர்களது உறவினர்கள் கொடையளிக்கின்றனர். ஆனால், மூளைச் சாவு அடைபவர்களின் எண்ணிக்கை இதைவிட பத்து மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. மூளைச் சாவு அடையும் அனைவரும் தங்கள் உடலுறுப்புகளை கொடையளிக்க முன்வருவதில்லை. மேலும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை களை மேற்கொள்ளும் மருத்துவமனை களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
தனியாரும் அரசும் : தமிழகத்தைப் பொருத்தவரை உடலுறுப்பு மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளே அதிகம் தகுதி பெற்றுள்ளன. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு 50-க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ மனைகள் தகுதி பெற்றுள்ள நிலையில், 5 அரசு மருத்துவ மனைகள் மட்டுமே அந்தப் பட்டியலில் உள்ளன. கல்லீரல் மாற்று அறுவைச் சிகச்சை அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாட்டிலேயே °டான்லி அரசு மருத்துவமனையில் மட்டும்தான் நடைபெறு கிறது. இருதயம், நுரையீரல், கணையம் ஆகிய முக்கிய உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சைகள் எதுவும் தமிழக அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவ தில்லை. ஆனால், அரசு மருத்துவமனை களில் மூளைச்சாவு அடைவோரின் உடலுறுப்புகள் அதிக அளவில் கொடை யாகப் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேவை அதிகம்: இது ஒருபுறம் இருக்க, உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக 2000 பேர் பதிவு செய்து காத்திருக் கின்றனர். ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 40 சிறுநீர கங்கள் கொடையாகக் கிடைக் கின்றன. ஆனால், ஒரு மாதத்துக்கு 60 முதல் 70 பேர் சிறுநீரக கொடைக்காக புதிதாக தங்கள் பெயரைப் பதிவு செய்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு மூளைச் சாவு அடைந்தோர் உடலுறுப்பு கொடைத் திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலோற்பவநாதன் கூறியதாவது:
தமிழகத்தில் மூளைச் சாவு அடைந் தோரிடம் இருந்து கொடையாகப் பெறப்பட்ட உடலுறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை கள் ஒரு மாதத்தில் 15 நடைபெறுகின்றன. தினசரி ஒரு உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை என்ற கணக்கில் மாதத்துக்கு 30 அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோக்கில் பணியாற்றி வருகிறோம். இதற் காக பல்வேறு மருத்துவமனைகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம். பல்வேறு தனியார் மருத்துவமனைகளை உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற் கொள்ள ஊக்குவித்து வருகிறோம்.
இதற்காக மாநிலம் முழுவதுமுள்ள மருத்துவமனைகளுடன் அடிக்கடி ஆலோ சனையில் ஈடுபட்டு வருகிறோம். பொது மக்களுக்கும் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது என்றார்.
3722 உடலுறுப்புகள் கொடை
தமிழகத்தில் 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 676 பேர் 3722 உடலுறுப்புகளை கொடை அளித்துள்ளனர்.