Tagged: பார்ப்பன பயங்கரவாதம்

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன. சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை...

சேலத்தில் 19122015 அன்று பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” திராவிடர் விடுதலைக்கழகம்,சேலம் மாவட்டம் நடத்தும் மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” ‘காலை முதல் இரவு வரை முழு நாள் மாநாடு’ நிகழ்சி நிரல். நாள் : 19.12.2015 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம் சேலம். தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கம். காலை 10 மணி – ‘கருத்தரங்கம்.’ நண்பகல் 2 மணி – ‘பட்டிமன்றம்.’ ———————————————————– மாலை 6 மணி, இடம் : போஸ் மைதானம் சேலம். இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கம், ”திறந்த வெளி மாநாடு.”

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...