Category: குடி அரசு 1926

மௌலானா அப்துல்பாரி 0

மௌலானா அப்துல்பாரி

உத்தம தேசபக்தரும், முஸ்லீம்களுள் சிறந்த ஞானவான் எனக் கொண்டாடத்தக்கவருமாகிய மௌலானா அப்துல்பாரி அவர்கள் சமீபத்தில் மரணமடைந்தாரெனக் கேள்விப்பட மிகவும் வருந்துகிறோம். இவருடைய பெருத்த ஆதரவைக் கொண்டே கிலாபத் இயக்கமாகிய மத விஷயத்தில் மகாத்மா காந்தி தலையிட்டுழைக்கும்படியாயிற்று. காலஞ் சென்ற மௌலானா அவர்கள், முஸ்லீம்களின் மத கல்வி விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தை கொஞ்சமல்ல. இத்தகைய பெரியார் காலஞ்சென்றது மகமதிய சமூகத்துக்கே பெருத்த நஷ்டமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ( ப – ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 31.01.1926

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 0

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் என்னுமிடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறும் விஷயத்தைப் பற்றி இதற்கு முன் நமது பத்திரிகை மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதை வாசகர்களறிவார்கள். அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் விஷயத்தையும் இந்த இதழ் 3-வது பக்கம் பிரசுரித்திருக்கிறோம். வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்து வெகுநாட்களாகிவிட வில்லை. அதற்குள்ளாக மற்றோர் இடத்தில் சமத்வத்தை நிலைநாட்ட தோன்றியுள்ள சத்தியாக்கிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். அநீதியும், அக்கிரமமும் தொலைய வேண்டுமானால் வெறும் சட்டங்களா லும், எழுத்தாலும், பேச்சாலும் முடியாதென்றும், சத்தியாக்கிரகமும், தியாக முமே உற்ற சாதனமாகுமென்றும் பல தடவைகளில் வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் ஜாதிக் கொடுமையும், பிறவியினால் உயர்வு – தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும். இக்கொடு மைகளை ஓர் பக்கத்தில் வைத்துக்கொண்டே, ஜம்பமாக தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுதுவதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும் தன் மனசாக்ஷி அறியச் செய்யும் மகத்தான அக்கிரமமேயன்றி...

கதரின் தற்கால நிலை 0

கதரின் தற்கால நிலை

சென்ற மாதம் “யங் இந்தியா” பத்திரிகையில் இந்தியா ஒட்டுக்குமாக கதர் உற்பத்தியும் செலவும் குறிக்கப்பட்டிருந்தது. (அதில் உற்பத்தியை விட செலவு அதிகமாகக் காட்டப்பட்டிருந்த போதிலும் அதற்குக் காரணம் சில புள்ளிகளில் ஏதாவது கணக்குத் தவறுதலாக இரட்டிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.) அக்கணக்கில் இந்தியாவில் மொத்தம் சென்ற வருடத்திற்கு கதர் உற்பத்தி ரூ. 19 லக்ஷம். இப்பத்தொன்பது லக்ஷத்தில் சில பாகம் சிலோன், மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலிய இந்தியாவை விட்டு வெளி நாடுகளுக் குப் போன வகையில் லக்ஷ ரூபாய் கழித்தாலும் 18 லக்ஷத்திற்குக் குறையாமல் இந்தியாவில் செலவாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஜனத்தொகை 31 1/2 கோடி. இவர்களுக்கு வருஷம் ஒன்றுக்கு தேவையுள்ள துணி ஏறக் குறைய 130 கோடி ரூபாய் பெறுமானமுள்ளது. இவற்றில் 65 கோடி ரூபாய் பெறுமான முள்ள துணி அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டும், 65 கோடி ரூபாய் பெறுமான துணி இந்தியாவிலேயே யந்திர நூலைக்...

தனித்தமிழ் கட்டுரைகள் 0

தனித்தமிழ் கட்டுரைகள்

இப்பெயர் கொண்ட புத்தகமொன்று வரப்பெற்றோம். இஃது பல்லா வரம், வித்யோதயா மகளிர் கல்லூரியின் தமிழாசிரியர் ஸ்ரீமதி நாகை நீலாம் பிகை அம்மையாரால் எழுதப்பட்டது. தமிழ் பாஷையின் வளர்ச்சி தினே தினே குறைந்துகொண்டுவரும் இக்காலத்தில் வடமொழி கலவாது, தனித் தமிழில் கட்டுரைகள் வரையப்பட்டு, அதுவும் ஓர் புத்தக ரூபமாக வெளி வந்திருப்பது தமிழுலகுக்கு ஓர் நல்விருந்தென்றே கூறுவோம். இத்தகைய புஸ்தகங்களே தமிழ் வளர்ச்சிக்கு உற்ற சாதனங்களாகும். நமக்கு அநுப்பப் பட்டுள்ள இப்புத்தகத்தின்கண் வடமொழிச் சொற்கள் எங்கணும் கண்டோ மில்லை. அதன் அருமை பெருமையை நன்கு விளக்குவான் வேண்டி “தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது” என்னும் கட்டுரையை இதனடியில் பிரசுரித்திருக்கின்றோம். இப்புத்தகத்தின் விலை ஒரு ரூபா நான்கணாவாகும். இத்தகைய பல புத்தகங்களை வெளியிடுமாறு கடவுள் அநுக்கிரகம் இச் சகோதரிக்குக் கிடைக்குமாக. குடி அரசு – நூல் மதிப்புரை – 31.01.1926

மௌலானா மகம்மதலியும்                    வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் 0

மௌலானா மகம்மதலியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும்

ஸ்ரீமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அவர்கள் சமீபத்தில் தனது பத்திரி கையில் “மௌலானா மகம்மதலி அவர்கள் மகாத்மா காந்தியுடன் கொஞ்சக் காலம் தேசீய நோக்கத்தோடு வேலை செய்த பிறகு மறுபடியும் தன்னுடைய பழைய குணப்படி ஹிந்து – முஸ்லீம் வேறுபாட்டைக் கருதுகிறார்” என்று எழுதியதற்கு விடையாக மௌலானா அவர்கள் எழுதிய கீழ்க்கண்ட பாகத்தை தமிழர்களுக்கு அறிவுருத்துகிறோம். “ வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமானது ஏட்டுச் சுறக்காய் அல்லவென்று ஸ்ரீமான் சாஸ்திரியாருக்கு நான் வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன். நம்முள் குறைந்த தொகுதியாயுள்ள வகுப்பாருக்கு நம்மிடத்திலுள்ள அவநம்பிக் கையும், நாம் முற்காலத்தில் செய்த அநீதிகளுடைய கர்ம பலனும்தான் இவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமென்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவநம்பிக்கை ஏற்படுகிற இடங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்தே தீர வேண்டும். ஸ்தல ஸ்தாபனங்களென்றாவது பள்ளிக்கூடங்க ளென்றாவது இக்கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால், இவ்வவநம்பிக்கை எவ்வளவு காலம் நீடித்திருக்க வேண்டுமென்பது பெரு வாரியான மற்ற சமூகங்களின் கையில்தானிருக்கிறது. முதலாவதாக ஹிந்துக் கள் தங்கள் மதத்தைச் சேர்ந்த...

பொன்னம்பல சுவாமி மடம் 0

பொன்னம்பல சுவாமி மடம்

ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் குரு பூஜை மகோற்சவம் சென்ற இரத்தாஷி வருடம் தை µ 24-ந் தேதி விதேகமுக்தி எய்தின, ஸ்ரீ காசி வாசி சிதம்பர சுவாமிகளின் குருபூஜை மகோற்சவம், நாளது தை µ 13 – தேதி மங்களவாரம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருட குருபூஜை வைபவத் திருநாள் நடைபெறும். அன்பர்கள் யாவரும் வந்திருந்து இருமை நலன் பெற்று உய்ய திருவருளை விழைகின்றோம் என ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடத்து ஸ்ரீபரஞ்சோதி சுவாமிகள் எழுதுகிறார். நமது குறிப்பு:- தென்னாட்டிலுள்ள பல்வேறு மடங்களிலும் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடமானது வைதீகப் போர்வை போர்த்த லௌகீக மடமாயிராமல், உண்மையில் ஜீவன்களிடத்தில் அன்பும், சமரசத் தன்மையும் கொண்டு விளங்குவதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். அதற்குத் தற்கால மடாதிபதி யாயிருக்கும் ஸ்ரீ பரஞ்ஜோதி சுவாமி அவர்கள் நமது மகாத்மா அவர்களின் கொள்கையைச் சிரமேற்கொண்டு அநுபவத்தில் நடைபெற உழைத்து வருபவர். அத்துடன் மடத்தில் கதர் உற்பத்தியும், பிரசாரமும் நடைபெற்று...

ஈழவர்களின் கோயிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி 0

ஈழவர்களின் கோயிலுக்குள் செல்ல புலையருக்கு அனுமதி

கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களில் சென்ற சில வருடங்களாக கவர்ன்மெண்டாரது பரிபாலனத்துக்கு உட்பட்டிருக்கும் ஆலயங்களுக்கும் சென்று தொழ தங்களுக்கு அநுமதியளிக்க வேண்டுமென்று ஈழவர்கள் கிளர்ச்சி செய்து வந்த விஷயத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. எனினும், இவர்களுக்குச் சொந்தமான கோயில்கள் கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்களிலிருந்தபோதிலும், இவர்கள் தங்களிலும் கீழ்ப்பட்டவர் களாகக் கருதப்படும் புலையர்களை அவற்றுள் அநுமதிக்கிறார்களா என்கிற சந்தேகம் பொதுஜனங்களுக்கு இருந்து வந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுவதற்காக அவர்கள் தங்களுடைய எல்லா கோவில்களுக் குள்ளும் புலையர் முதலிய தாழ்ந்த ஜாதியார் என்போரை விட முயற்சி செய்து வருகின் றார்கள். அல்லாமலும் ஏற்கனவே சில கோயில்களுக்குள் புலையர்கள் செல்ல அநுமதி யளித்து விட்டனர். மற்ற கோயில்களிலும் இதே மாதிரி புலையர்களை அநுமதிக்கும்படி வைதீக கோஷ்டியாரைத் தூண்ட சீர்திருத்தக் கோஷ்டியார் சகல முயற்சிகளையும் செய்து வருகின்றார்கள். பல்லுருத்தி பவானீஸ்வர கோவிலுக்குத் தெற்கே, ஸ்ரீமான் கே. நாராண னுக்குச் சொந்தமான ஈழவக் கோயிலுக்குள் செல்ல புலையர்களுக்கு முதல்...

ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார் 0

ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார்

“கள்ளின் வெற்றியே வெற்றி” என்ற தலைப்பின் கீழ் “அரசாங்கத்தார் நடத்திவரும் பொல்லாத கள்ளுக்கடைகளை மூட வழி தேடுங்கள்” என்று சொன்னேன். அதற்கு வகுப்புவாரிக்காரரும் ஜஸ்டிஸ் கக்ஷியாரும் இன்னும் சிலரும் தன்னைப் பற்றி சந்தேகப்படுகிறார்கள் என்று சொல்லுகிறார். ஆனால், கக்ஷியார்கள் இவர்பேரில் சந்தேகப்படுவதற்கு சொல்லும் காரணங்களுக்கு மாத்திரம் பதில் சொல்லுவதில்லை. சந்தடி சாக்கில் ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றி சொல்லும் போது “நியாயக் கட்சி (=பிராமணரல்லாதார் – ஜஸ்டிஸ் கக்ஷி) என்று பெயர் வைத்துக் கொண்டு சிறு வகுப்பார்களை (=பிராமணர்களை ) அநியாயமாய் (= யோக்கியமான பிராமணர்களின் மேல் அபாண்டமான பழிகளைச் சொல்லி) பசு பலத்தால் (= மிருக பலத்தால்) ஒடுக்கியாள (=அவர்களுக்கு மேலே போக) முயலும் (=வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கேட்கும் ) கக்ஷியாரை (= பிரசாரம் செய்யும் கக்ஷியாரை) நான் ஆதரிப்பதாய் (=பிராமணராகப் பிறந்த நான் ஆதரிப்பதாய்) ஏன் எண்ணுகிறீர்கள்(=பிராமணர்களே பயித்தியக் காரத்தனமாய் ஏன் எண்ணுகிறீர்கள்) என்று எழுதுகிறார்.” இதிலிருந்தே ஸ்ரீமான் ஆச்சாரியாரின்...

“அதனால்தான் உங்கள் வீட்டின்மேல்     காகம் பறந்தது” 0

“அதனால்தான் உங்கள் வீட்டின்மேல் காகம் பறந்தது”

சிறு பிள்ளைகள் ஒருவருக்குகொருவர் சண்டை போட்டுக் கொள்ளும் போது – சரியான தோஷம் சொல்லுவதற்கு வழியில்லாதபோது கோபத்தில் வெறியால் ஏதாவதொன்றைச் சொல்லி வைவதற்கு ஒருவன் மற்றவனைப் பார்த்து அதினால்தான் உங்கள் வீட்டின் மேல் காக்காய் பறந்தது என்று சொல்வதுண்டு. அதுபோலவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தைப் பற்றி குற்றம் சொல்ல வகை இல்லாமற் போனால் ஏதாவது சொல்லித் தீர வேண்டிய நிலைமைக்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் வந்துவிட்டதால், சென்ற வாரத்திற்கு முந்தின பத்திரிகையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் என்கிற தலைப்பின் கீழ் முஸ்லீம் லீக் தீர்மானத்தைப் பற்றி எழுதிவிட்டு வகுப்பு வாரி தீர்மானம் தப்பு என்கிறதற்கு ஆதாரமாக முஸ்லீம் லீக்கில் மௌலானா முகமதலிக்கும், ஸர். அப்துல் ரஹீமுக்கும் ³ தீர்மான விஷயத்தில் ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தை எடுத்துக்காட்டி இவ்வித அபிப்பிராய பேதம் உண்டாவதால் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கூடாது என்கிறார். இருவருக் கும் அபிப்பிராயபேதம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமா? வேண் டாமா? என்கிற விஷயத்தில் இல்லவே இல்லை...

தென்னிந்திய ரெயில்வே                     ஆலோசனை கமிட்டி 0

தென்னிந்திய ரெயில்வே ஆலோசனை கமிட்டி

இம்மாதம் 27-ந் தேதியன்று சென்னையில் நடைபெறப்போகும், தென்னிந்திய ரெயில்வே ஆலோசனைக் கமிட்டிக்கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்களை கொண்டுவரப் போவதாக, ³ கமிட்டி மெம்பர், கோய முத்தூர் ஸ்ரீ மான் . சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரவர்கள் தெரிவிக்கிறார். (1) ரெயில்வே பிளாட்பாரத்தில் பிரயாணிகளுக்கு தண்ணீர் கொடுப் பதில் எவ்வித வித்தியாசமும் பாராட்டக்கூடாது. (2) ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இங்கிலீஸ் உணவுச்சாலைக்கு, ஐரோப்பியர்களோ அன்றி இந்தியர்களோ சென்றால் அவர்கள் யாவரையும் ஒன்று போலவே நடத்தவேண்டும். மற்றும், ரெயில் வண்டியிலிருந்து கொண்டே உணவைத் தருவித்தாலும், அப்போதும் ஐரோப்பியர், இந்தியர் என்கிற வித்தியாசமின்றியே நடத்தவேண்டும். இங்ஙனம் செய்ய ³ உணவுச்சாலைகளை நிர்வகிக்கும் மெஸர்ஸ் ஸ்பென்ஸர் கம்பெனியாரை இச்சபை கேட்டுக்கொள்ளுகிறது. (3) ரெயில்வே ஸ்டேஷன்களிலுள்ள இந்திய உணவுச்சாலைகளில் எவ்வித ஜாதிவித்தியாசமும் பாராட்டலாகாது. ஜாதி வேற்றுமையைக் காட்டக் கூடிய – இப்போதுள்ள சாதனங்களை- உடனே நீக்கி விடவேண் டும். மேலும், ஒவ்வொரு போஜன சாலையிலும், சகல ஜாதியார்களிலும், மரக்கறி பதார்த்தங்கள் உட்கொள்ளுபவர்களுக்கென்றும், மாமிச...

கோயமுத்தூர் முனிசிபால்டியில் சுயராஜ்ஜியக்கட்சியும் தீண்டாமையும் 0

கோயமுத்தூர் முனிசிபால்டியில் சுயராஜ்ஜியக்கட்சியும் தீண்டாமையும்

கோயமுத்தூர் முனிசிபல் மீட்டிங்கு 18-1-26ந் தேதி நடந்தது. அன்று ஸ்ரீமான் காலஞ்சென்ற சுல்தான் சாய்ப்பு அவர்களுக்கு அநுதாபத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றினார்கள். இரண்டாவது ஒரு முக்கியமான தீர்மானம் ஆலோசனைக்கு வந்தது. பாப்பானாயக்கன்பாளையத்தில் இரண்டு இரவு பாடசாலை யிருந்து வருகிறது. ஒன்று “ஜாதி இந்துக்கள்” இரவு பாட சாலை, இன்னொன்று “பஞ்சமர்” இரவு பாட சாலை. இரண்டு பாடசாலையும் முனிசி பால்ட்டியால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. ஜாதி இந்துக்கள் இரவு பாட சாலைக்கு அதிக வாடகை வேண்டுமென்றும் இன்னொரு உதவி உபாத்தி யாயர் வேண்டு மென்றும், பஞ்சமர் பாடசாலைக்கு 5 ரூபாய் வாடகை வேண்டுமென்றும், அப்பாடசாலைக் கட்டிடக்காரர்கள், விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்விஷயம் மீட்டிங்கில் ஆலோசனைக்கு வந்த போது ஸ்ரீமான் வி. அருனாசலம் செட்டியாரவர்கள் பஞ்சமர் பாட சாலையில் 8 பிள்ளைகள் தானிருப்பதால் அதற்கு தனிப் பாடசாலை வேண்டியதில்லை யென்றும் ஜாதி இந்து பாடசாலையில் இந்த 8 பிள்ளை களைச் சேர்த்துக் கொண்டு ஒரு...

தென் ஆப்பிரிக்கா பிரதிநிதிகள் 0

தென் ஆப்பிரிக்கா பிரதிநிதிகள்

தென் ஆப்பிரிக்காப் பிரதிநிதிகள் நாளது 24-ந் தேதி கோயமுத்தூர் ஜில்லாவாகிய நமது ஜில்லாவுக்கு வரப்போவதாக அறிந்து மிகவும் சந்தோஷிப்பதோடு, மனப் பூர்த்தியாய் வரவேற்கிறோம். தென் ஆப்பிரிக்காக் கவர்ன்மெண்டார் தென் ஆப்பிரிக்காவிற்குக் குடியேறின இந்திய சகோதரர் களுக்குச் செய்து வரும் ஆணவம் பொருந்திய கொடுமைகள் சுயமரியாதை யுள்ள சமூகத்தாருக்குச் சகிக்க முடியாதிருப்பினும் – உயிரைத் துறந்தாவது தங்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசிய முள்ளதாயிருப்பினும், இக்கஷ்டத்தை நீக்குவதற்குத் தென் ஆப்பிரிக்கா இந்தியர்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்வதில் காதறுந்த ஊசியளவு பிரயோஜனமாவது உண்டாகுமாவென்பது நமக்குச் சந்தேகமாகவேயிருக் கிறது. ஆயிரம் தென்னாப்பிரிக்கா கவர்ன்மெண்டைக் கசக்கிப் பிழிந்து சத்து எடுத்ததற்குச் சமானமான தமிழ்நாட்டுப் பிராமணர்கள் சிலர், அதாவது, தமிழ் நாட்டில் தங்களுக்கு முந்தியுள்ள பூர்வீகக் குடிகளாகவும் தங்கள் நாட்டா ராகவும் இருக்கிற ஜனங்களைத் தொடக்கூடாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள், கண்ணில் தென்படக் கூடாதவர்கள், அவர்கள் தெய்வத்தைக் காணக் கூடாதவர்கள், அவர்கள் மத – வேத மென்பதைப்...

பிறப்புரிமை                                     சுயராஜ்யமா?  சுயமரியாதையா? 0

பிறப்புரிமை சுயராஜ்யமா? சுயமரியாதையா?

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமைச் செய்து வருவதின் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையை விட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும். நமது நாட்டில் சில வேஷக்காரர்கள் சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும், வாழ்க்கையை உத்தே சித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப் படாமல் காலங்கழிக்கப் பார்க்கின்றார்களேயல்லாமல், அதற்காகச் செய்ய வேண்டிய காரியங்களில் தங்களுக்குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டா லும் வேறு யாராவது...

ஸ்ரீமான் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் 0

ஸ்ரீமான் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

ஐயா, தாங்கள் தென் இந்தியா ரெயில்வே கம்பெனிக்கு யோசனை சொல்லும் கமிட்டியில் ஒரு அங்கத்தினராயிருப்பது பற்றி மிகவும் சந்தோ ஷமே. ஆனால், அதில் தாங்கள் இருந்து கொண்டு செய்கிற வேலைகள் ஒன்றும் புதிதாயாவது, முக்கியமானதாகவாவது தெரியவில்லை. அதாவது, கக்கூஸ் ரிப்பேர் செய்வதும், வண்டியில் சிற்றுண்டி வழங்கு வதும், வண்டியின் நேரங்களை மாற்றுவதுமான காரியங்கள் ஆகிய எதுவும் பொது ஜனங்களுக்கு விசேஷ நன்மை எதுவும் செய்துவிடாது. தங்கள் காலத்தில் ஏதாவது ஒரு நிரந்தரமான நன்மை செய்ததாயிருக்க வேண்டு மானால் – பெரும்பான்மையான ஜனங்களின் உணர்ச்சிகளைத் தாங்கள் மதித்தவர்களாயிருக்க வேண்டுமானால் – ஒரு காரியம் செய்தால் போதும். அதைச் செய்துவிட்டு தங்கள் வேலையை ராஜீநாமா செய்துவிட்டாலும் சரி அல்லது அந்தப்படி செய்ய தாங்கள் பிரயத்தனப்பட்டு முடியாமல் போனால், தாங்கள் ராஜீநாமா கொடுத்துவிட்டு வந்துவிட்டாலும் சரி. அதாவது, தென் இந்தியா ரெயில்வேகாரர்கள் ரெயில்வே இந்து பிரயாணிகளுக்கு உணவு வசதிக்காக முக்கியமான ஸ்டேஷன்களில் கட்டிடம் கட்டி ஓட்டல்...

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம் 0

‘சுதேசமித்திர’னின் ஞானோதயம்

ஜுலை µ 16 ² “மித்திர”ன் “இந்து மத தர்ம ஸ்தாபனங்கள் சரியாக நடக்கும்படி செய்யத்தக்க சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டு மென்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள்” என்று எழுதியிருக் கிறான். மதவிஷயத் தில் அரசாங்கத்தார் பிரவேசிக்கக் கூடாது என்று எழுதி இதுவரை பாமரர்களை ஏமாற்றி வந்த பார்ப்பன மித்திரனுக்கு இப்போதாவது சர்க்காரால் சட்டம் ஒன்று செய்யப்பட வேண்டும் என்று சொல்லும்படியான புத்தி வந்ததற்கு நாம் மகிழ்கிறோம். ஆனால் இந்தப்புத்தி தானாகத் தோன்ற வில்லை. ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடுகாரும், ஈ.வெ.இராமசாமி நாயக் கரும் தேவஸ்தானச் சட்டத்தை ஆதரித்தும் அதை எதிற்கும் பார்ப்பனர் களின் சூழ்க்ஷியைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ததின் பலனாகவும் இதை ஒப்புக்கொள்ளாவிட்டால் தங்களுக்கு ஓட்டுக்கிடைக்காமல் போகு மோ என்கிற பயமும் பார்ப்பன மித்திரனான “சுதேசமித்திர”னை “இந்துமத ஸ்தாபனம் சரியாக நடக்க ஒரு சட்டம் அவசியம்” என்று சொல்லும்படி செய்து விட்டது. ஆனால் “மித்திரன்” அதின் கீழாகவே “இந்த சட்டமானது தர்மங்கள்...

கதர் பரீiக்ஷயில் தவறு 0

கதர் பரீiக்ஷயில் தவறு

எல்லாம் நன்மைக்கே அந்தணர்பேட்டை கதர் விஷயமாய் கதர் போர்டு அதிகாரிகள் பரீiக்ஷ செய்துப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால், அவ் விடம் தயார் செய்யப்பட்ட கதர்த் துணிகளில் சிலது நூல் சன்னமாயும் ஒரே மாதிரியாயும் இருந்ததோடு, அதிகக் கெட்டியாகவும், பார்வைக்கு மில் துணி போலவும் இருந்தது. இவ்வளவு நல்ல துணி சுத்தமான கதர் துணியாய், இவ்வளவு குறைந்த அதாவது சாதாரண கதர்த் துணி விலைக்கு கொஞ்சம் ஏறக்குறைய இருக்குமா என்கிற சந்தேகத்தின் பேரில் அதை அநுபோக சாலிகளான இரண்டொருவருக்கு பரீiக்ஷக்காக அனுப்பப்பட்டது. பரீiக்ஷ யில், பரீக்ஷகர்கள் அது கதராயிருக்க முடியாதென்று அபிப்ராயப்பட்டதால், உடனே அதற்கு கதர் போர்டாரால் அளிக்கப்பட்டிருந்த நற்சாக்ஷிப் பத்திரத்தை வாப்பீசு அனுப்பும்படி எழுதிவிட்டு பத்திரிகைகளுக்கும் அந்தணர்பேட்டை கதர் சுத்தமான கதர் அல்ல என்பதாக அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகு அந்தணர்பேட்டைக் கதராலயத்தார் தங்கள் ஆவலாதியைத் தெரிவித்துக் கொண்டதன் பேரில், காரியதரிசி ஸ்ரீமான் ராமநாதன் நேரில் போய் பார்த்து அந்தணர்பேட்டைக் கதர்...

திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம் 0

திருவாங்கூரில் மறுபடியும் சத்தியாக்கிரகம்

தயார் – தயார் தமிழ்நாடு தனது கடமையைச் செய்யத் தயாராயிருக்கிறது ( டாக்டர் ஆ.நு.நாயுடு எழுதுகிறார்) திருவாங்கூர் சமஸ்தானத்தில் புண்ணிய nக்ஷத்திரங்களாக பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவைகளில் வடக்கே வைக்கமும், மத்தியில் திருவனந்தபுரமும், தெற்கே சுசீந்திரமும் முக்கிய nக்ஷத்திரங்களாகும். வைக்கம் சத்தியாக் கிரகத்தின் பயனாய் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள ரோட்டுகள் ஜாதி உயர்வு தாழ்வு இன்றி சகல பிரஜைகளுக்கும் சமமாய் உபயோகிக்க விட்டாய் விட்டது. மற்றும் சில ரோட்டுகளை சமமாய் உபயோ கிக்க அரசாங்கத்தார் வேண்டிய உதவி செய்திருக்கிறார்கள், ஆதலால் திருவாங்கூரிலும், சுசீந்திரத் திலும், கோயிலைச்சுற்றியுள்ள பொது ரோட்டு களில், மகாராஜாவின் எல்லாப் பிரஜைகளுக்கும் நடக்க உரிமை வேண்டு மென்று முயற்சிகள் நடந்து வரு கின்றன. இந்த தை µ 5-ந் தேதி மாலை 4 மணிக்கு சுசீந்திரம் கோவிலைச் சுற்றி சகல இந்து ஜாதியாரையும் அழைத் துச் செல்லுவதாய் தீர்மானம் செய்திருக்கிறது. இதைப்பற்றிச் சர்க்காருக்கும், கோவில் அதிகாரிகளுக்கும், மார்கழி µ...

விஷமப் பிரசாரம் – கதர் பக்தி 0

விஷமப் பிரசாரம் – கதர் பக்தி

டாக்டர் நடேசன் சேலத்தில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்ததினால் பிராமணர்கள் கட்சியான சுயராஜ்யக் கட்சியாருக்குப் பெரிய நடுக்கம் ஏற்பட்டுப் போய்விட்டது. ஏனென்றால் கதரின் பேரைச் சொல்லிக் கொண்டு, தாங்கள் வோட்டர்களை ஏமாற்றுவது போல, பிராமணரல்லாத கட்சியினரும் அதைப் பின்பற்றி விடுவார்களோவெனப் பயந்து கொண்டு ஸ்ரீமான் சத்திய மூர்த்தியும் அவர் கோஷ்டியாரும் ஒவ்வொரு பிரசங்கத்திலும், “டாக்டர் நடேச முதலியார் அந்நிய ஆடையை அணிந்து கொண்டு கதர்ச் சாலையைத் திறந்து வைத்தார். இது பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காகச் செய்த வேலை”யென்று ஓயாமல் பேசியும் வருகிறார்கள்; எழுதியும் வருகிறார்கள். இப்படிச் செய்வது வெறும் விஷமப் பிரசாரமே தவிர, இதில் யோக்கி யதை கொஞ்சமுமில்லை. முதலாவது, டாக்டர் நடேச முதலியார் கதர்ச் சாலையை திறந்து வைக்கும்போதே டாக்டர் வரதராஜுலு நாயுடு ஓர் சீட்டில் நீங்களேன் கதர் உடுத்தவில்லை என்று எழுதி அவரைக் கேட்டார். அதற்கு பதிலாய் டாக்டர் நடேச முதலியார் பேசுகையில், தான் அணிந்திருப்பது கதர் தானென்றும்,...

மதுரைக் கோயில் பிரவேசம் 0

மதுரைக் கோயில் பிரவேசம்

லேடி கோஷனும் – நாடார்களும் மதுரை ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் என்கிற ஒரு பிராமணர் சென்னை கவர்னரின் மனைவியாரை, மதுரை மீனாக்ஷியம்மன் கோவிலுக்குள் அழைத்துப் போய் எல்லா இடங்களையும் கூட்டிக் காட்டினதாகவும், மிகுந்த மரியாதை செய்ததாகவும் அதற்கு நன்றியறிதலாய் அம்மையார், கோவிற் புத்தகத்தில் தம்மை மிக்க மரியாதையாக கோயிலுக்குள் அழைத்துச்சென்று பல இடங்களையும், நகைகளையும், பொக்கிஷங்களையும் காட்டின ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் முதலியோருக்கு நன்றி செலுத்துகிறேன் என்று எழுதி நற்சா க்ஷிப் பத்திரமும் கொடுத்துவிட்டுப் போனார்களாம். இதை நாம் ஆnக்ஷபிக்க வில்லை. ஆனாலும், அந்த அம்மையார் எவ்வளவு பெரிய அந்தஸ்து உடையவரானாலும், அந்நிய நாட்டார் – அந்நிய மதஸ்தர்- நமது மதத்தையும் சாமிகளையும் பார்த்து பரிகாசம் பண்ணுகிறவர்கள்- நமது மதத்துக்கு விரோதமாய் பிரசாரம் செய்து நம்மவர்களை தங்கள் மதத்துக்குச் சேர்க்கி றதை ஆதரிப்பவர்கள்- நம்மை அஞ்ஞானிகளென்று சொல்லுகிறவர்கள் – நம்மை அடக்கியாண்டு நமது இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஜாதியைச் சேர்ந்த வர்கள்...

வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்வம்

தேசபக்தர்களின் யோக்கியதை “வகுப்புவாரிப் பிரதிநிதித்வம்” என்கிற பதத்தை நாம் பொது ஜனங்களின் ஞாபகத்திற்குக் கொண்டுவந்தவுடனே, அதனால் பிரதிகூலம் அடையக்கூடிய ஜனங்கள், தங்களால் கூடிய தடைகளை யெல்லாம் செய்ய மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் என்கிற உரிமையைப் பற்றி நமது நாட்டில் வெளிப்படையாக நாம் அறிய சுமார் 20 வருட காலங்களுக்கு மேலாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்திருந்தாலும், சுமார் 10 வருடங்களுக்கு முன்பாகவே ராஜீய ஸ்தாபனங்களில் அது பிரவேசித்து முஸ்லீம் சமூகத்தாருக்கு நமது தேசீய காங்கிரசின் மூலமாகவே, அதாவது “தேசம்தான் பிரதானம்; வகுப்புகள் அதற்குப் பிற்பட்டது” என்கிற தத்துவத் தையே கொள்கையாக உடைய காங்கிரஸின் மூலமாகவே அதை ஒப்புக் கொண்டு சர்க்கார் மூலமாய் அதை அமுலுக்குக் கொண்டு வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்பொழுது புழக்கத்திற்கு வந்துவிட்டது. அதோடு மாத்திரமல்லாமல், காங்கிரஸ் ஸ்தாபனங்களிலேயும், அதி லுள்ள ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் அளிக்கப்பட்டும் வந்திருக்கிறது. அதாவது, காங்கிரஸ் என்பதை ராஜீய ஸ்தாபன நிர்வாகமாக வைத்துக்கொண்டால், அகில இந்திய...

கோயமுத்தூர் முனிசிபாலிட்டி 0

கோயமுத்தூர் முனிசிபாலிட்டி

கோயமுத்தூர் முனிசிபாலி ட்டியின் சென்ற வருடத்திய நிர்வாக அறிக்கை வெளியாகியிருக்கிறது. அவ்வறிக்கையிலிருந்து பொதுவாக கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் நிர்வாகம் ஒழுங்காய் நடைபெற்றிருப் பதாகவே காணப்படுகிறது. ரோடுகள் நன்றாயிருப்பதாகக் கலைக்டர் அபிப் பிராயப்பட்டிருக்கிறார். கல்வி விஷயத்தில் கல்வி கற்க வேண்டிய சிறுவர் களில் 100-க்கு 99 பேர் வீதம் வாசிக்கின்றார்களென்றும் பள்ளிக் கூடங்களில் சிறுவர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும் நூல் நூற்கவும் நெய்யவும், கற்றுக்கொடுக்கப்படுகின்றதென்றும், ஆயுள்வேத வைத்தியசாலை மிகவும் உபயோகப்பட்டு வருகின்றதென்றும், அதில் இவ்வருடத்தில் 20,000 பேர் களுக்கு மேலாக நோயாளிகள் உதவிபெற்றிருக்கின்றார்களென்றும், பிளேக் நோய் சென்ற வருடம் கோயமுத்தூருக்குள் வராமலே தடுக்கப்பட்டிருக் கின்றதென்றும், காலறா முதலிய தொத்து வியாதிகளும் முன்னைய வருடங் களைவிட மிகக் குறைவாய் இருந்திருக்கின்றதென்றும், முனிசிபல் செல்வ நிலை ஒழுங்காய் இருக்கின்றதென்றும், சப் கமிட்டியார்கள் ஊக்கத்துடன் வேலை செய்திருக்கின்றார்களென்றும், கவுன்சிலர்களும் சேர்மனும் ஒற்று மையாயிருப்பதால் கவுன்சிலில் சமாதானம் ஏற்பட்டிருக்கின்றதென்று கலைக்டர் எழுதியிருக்கின்றாரென்றும் மற்றும் பல விஷயங்களும் குறிப் பிட்டிருக்கிறது. இதற்காக சேர்மென்...

கதர் இலாகா சிப்பந்திகள் 0

கதர் இலாகா சிப்பந்திகள்

தமிழ்நாட்டில் கதர் ஸ்தாபனங்களுக்கு சம்பந்தப்பட்ட உத்தியோகங் களில் இருப்பவர்களில் சிலர் கதர் கட்டாமல் இருக்கிறார்கள் என்றும், கதர் கிளை டிப்போக்களில் கதர் விற்பவர்கள் கூட கதர் கட்டாமல் அன்னிய நாட்டுத் துணியை அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அடிக்கடி நமக்குப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்காலம் காங்கிரசிலிருப் பவர்கள் எப்போதும் கதர் அணிய வேண்டியது அவசியமில்லை என்று ஏற்பட்டு விட்டாலும் கதர் ஸ்தாபனங்களுக்கு அந்த சட்டம் எட்டும்படியான காலம் இன்னமும் வரவில்லை என்றே நினைக்கிறோம். அல்லாமலும் கதர் ஸ்தாபனங்களில் ஊதியம் பெற்றானாலும், ஊதியம் பெறாமலானாலும், தொண்டு செய்பவர்கள் கதர் உடுத்தியாக வேண்டும் என்கிற நிபந்தனை ஏற்படுத்துவது பாவமல்லவென்றே நினைக்கிறோம். ஆதலால், தமிழ்நாட்டு கதர் கவர்னர், கதர் ஸ்தாபன சிப்பந்திகளுக்கு இதைப்பற்றி ஓர் சுற்றுத்திரவு அனுப்ப வேணுமாய் கோருகிறோம். குடி அரசு – அறிக்கை – 10.01.1926

கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடிய  ஓர் பிராமண வக்கீல் 0

கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடிய ஓர் பிராமண வக்கீல்

இரண்டொரு வாரங்களுக்கு முன்புதான், சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல் ஸ்ரீமான் எம்.ஆர். சுந்தரம் ஐயர் என்கிறவர் ஆறுமாதக் கடுங்காவலும் 1000 ரூபாய் அபராதமும் பெற்றிருந்ததை எழுதியிருந்தோம். இந்த வாரம் மற்றொரு பிராமண வக்கீலின் தண்டனையைப் பற்றி எழுத நேர்ந்திருக்கிறது. அதாவது:- சென்னை ஐக்கோர்ட்டு வக்கீல் ஸ்ரீமான் ஏ. துரைசாமி ஐயர் என்பவர் தனது கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடியதாக அவர் மீது ஓர் வழக்கு ஏற்பட்டு ருசுவானதின்பேரில், அவர் இனிமேல், வக்கீல் வேலையே செய்ய லாயக்கில்லையென்று சொல்லி அவருடைய பெயரை வக்கீல் ஜாப்தாவிலி ருந்து நீக்கிவிடுமாறு ஐக்கோர்ட் ஜட்ஜ் தீர்ப்புச் செய்துவிட்டார். கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல், வக்கீல் வேலைக்கே லாயக்கில்லையென்று ஓர் பழமொழி சொல்லுவதுண்டு. அதற்கேற்றாற் போலவே நமது பக்கங்களில் கக்ஷிக்காரன் பணத்தைக் கையாடாத வக்கீல்கள் மிகவும் அபூர்வம். இப் பொழுது எத்தனையோ வக்கீல்கள் கக்ஷிக்காரர்களின் பணத்தைப் பல வழிகளிலும் சாப்பிட்டுவிட்டு, கல்லுப் போலிருக்கிறார்கள். அப்படியிருக்க, ஸ்ரீமான் ஏ. துரைசாமி ஐயருக்கு மாத்திரம்...

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும் 0

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ்விடத்திய வெள்ளைக் காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக்குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக்காரர்கள் சட்டம் செய் திருப்பதாகவும், இக்காரணங்களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லக்ஷம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்து கொடுக்கும்படி நமது தேசீய காங்கிரஸை கேட்டுக் கொள்வதற்காக சிலர் அங்கிருந்து வந்திருந்ததும், அதற்கிணங்கி நமது தேசீய காங்கிரசும் மகாத்மா அவர்களின் அபிப்ராயப்படி ஓர் தீர்மா னத்தையும் நிறைவேற்றி, வந்திருந்தவர்கள் கண்ணைத் துடைத்து அநுப்பி விட்டதும் வாசகர்கள் அறிந்த விஷயம். இதை அநுசரித்தே பிராமணரல்லாதார் காங்கிரசும் ஓர் தீர்மானத்தைச் செய்துவிட்டது. பத்திரிகைகளும் இதைப்பற்றி எழுதி தங்கள் கலங்களை நிரப்பிக் கொள்ளுவதற்கு ஓர் சந்தர்ப்பத்தையும் அடைந்து கொண்டது. முடி வென்ன? இவ்வித தீர்மானங்களால் வெள்ளைக்காரர்கள் பயப்படப் போகிறார்களா? அல்லது தேசீய காங்கிரசினிடமாவது வெள்ளைக்காரர்க ளுக்கு மதிப்பிருக்கப் போகிறதா? நமது தேசீய காங்கிரஸோ ஜாலவித்தைக் காரனுடைய செய்கைகள் போலாகிவிட்டது. ஜாலவித்தைக்காரன்...

செத்த பாம்பாட்டம் 0

செத்த பாம்பாட்டம்

தமிழ்நாட்டின் தேசீய பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தந்திரங் களையும், தமிழ்நாட்டு தேசீய பிராமணரல்லாதார் என்போருக்கு வெளி யாகும் படி செய்தது சேரன்மாதேவி குருகுலமேயாகும். அக்குருகுல இரகசி யத்தை வெளியாக்குவதற்காக நாம் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தமிழ் நாட்டிலுள்ள பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும் எவ்வ ளவோ இடைஞ்சல்கள் செய்துக் கொண்டு வந்திருந்தாலும், தமிழ்நாட்டி லுள்ள பிராமணரல்லாதார் பத்திரிகைகளும், பிராமணரல்லாதார் தலைவர் களும் எவ்வளவோ உதவி செய்ததின் பலனாய் முடிவில் வெற்றி கிடைத்த தோடு தமிழ் நாட்டிற்கே ஓர் புதிய உணர்ச்சியையும் உண்டாக்கி வைத்து சேரன்மாதேவி குருகுலமும் கலைந்து போய்விட்டது என்பது உலகமே அறியும். அப்படியிருக்க, செத்த பாம்பை எடுத்து ஆட்டுவது போல் குருகுலத்தால் வயிறு வளர்த்த சில பிராமணர்கள், குறிப்பாய் ஸ்ரீமான் தி.ரா. மகாதேவய்யர் கொஞ்ச காலத்திற்கு முன்பு பத்திரிகைகளுக்கு ஒரு விளம் பரம் அனுப்பியிருக்கிறார். அதில் குருகுலம் ஒழுங்காய் நடந்து வருகிற பாவனையாகவும், தானே அதில் ஆச்சாரியாராய் இருக்கிறது போலும், சுயராஜ்யக்...

பிராமணர்கள் சூழ்ச்சி 0

பிராமணர்கள் சூழ்ச்சி

“ஸ்ரீமான். சத்தியமூர்த்தியின் தன்னை அறியா மெய்யுரைகள்” ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அவர்களின் ராஜீய வாதத்தைப் பற்றி நாம் அநேக விஷயங்களில் மாறான அபிப்ராயம் கொண்டிருந்தாலும், அவருக்கு ஆவேசம் வரும் காலங்களில் தன்னை அறியாமலே ராஜ தந்திரத்தைக் கையாளாமல் உண்மையைக் கொட்டிவிடுகிறார் என்கிற சந்தோஷம் நமக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. சமீப காலத்திற்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் இரண்டு உண்மையை தாராளமாய் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று மிகவும் முக்கியமானது. இது பிராமணரல்லாத பொது ஜனங்கள் நன்றாய் அறிய வேண்டிய விஷயம். அதாவது, காங்கிரஸ் தினம் என்று டிசம்பர் 26- ² சென்னை சவுந்தர்ய மகாலில் ஸ்ரீமான். யூ.ராமராவ் அக்ராசனத்தின் கீழ் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பிராமணரல்லாதார் மகாநாட்டைப்பற்றி பேசுகை யில் ஒரு பெரிய ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார். அது வருமாறு:- “ஸ்ரீமான் யாதவர் இங்கு வந்து வகுப்புத் துவேஷத்தை மூட்டப் பார்த்தார். சட்ட மெம்பர் ( மனு.சர். ஊ.ஞ. ராமசாமி அய்யர்) தாம் பிராமண ரென்று பயந்து சட்டப்பிரகாரம் கவனிக்காது...

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டதினாலேயே கலியாணம் நின்று போகுமா? 0

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டதினாலேயே கலியாணம் நின்று போகுமா?

நமது ‘குடி அரசு’ பத்திரிகைக்கு விரோதமாக சில பிராமணர்களும், பிராமணரல்லாத சில வாரப் பத்திராதிபர்களும், வயிற்றுக்கில்லாமல் கஷ்டப் படும் சில காங்கிரஸ் தொண்டர்களென்போருக்குப் பணம் கொடுத்தும், தங்களுடைய வாரப் பத்திரிகைகளை இலவசமாக அனுப்பிக் கொடுத்தும், ஆட்களை ஏவிவிட்டு நாம் ஜஸ்டிஸ் கக்ஷியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு பத்திரிகை நடத்துவதாகவும் ஜெயிலுக்குப் பயந்து கொண்டும் பதவிகளுக் காசைப்பட்டும் சர்க்காருக்கனுகூலமாய்த் திரும்பி விட்டதாகவும், இன்னும் பல இழிவான காரணங்களையும் சொல்லி அதனால் “குடி அரசை” வாங்கி வாசிக்கக் கூடாதென்றும் ஆங்காங்கு திண்ணைப் பிரசாரங்கள் நடத்தி வருவ தாய் அடிக்கடி நமக்குத் தகவல்கள் எட்டிக்கொண்டே வருகின்றன. இவற் றைப் பற்றி நமது உப பத்திராதிபர் இரண்டொரு இடங்களில் நேரிலும் பார்த் திருக்கிறார். “குடிஅரசு”க்கும் அதன் பத்திராதிபருக்கும் செல்வாக்கு குறைத்தும் போவதினாலேயே பிராமணரல்லாதாருடைய முன்னேற்றத்தை அடக்கி விடலாமென்று நினைப்பது “சீப்பை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டால் கலியாணத்தையே நிறுத்திவிடலாம்” என்று நினைக்கிற அறி வீனத்தைப் போற்தான் முடியும்....

கான்பூர் தேசீய காங்கிரஸ் தீர்மானம் 0

கான்பூர் தேசீய காங்கிரஸ் தீர்மானம்

கான்பூர் காங்கிரஸ் தீர்மானத்தைப் பற்றி தேசீயப் பத்திரிகைகளென்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகளெல்லாம் “கங்காதரா மாண்டாயோ! கங்காதரா மாண்டாயோ!” என்கின்ற கதைபோல் ஒரே மூச்சாக கொஞ்சமும் விசாரிக்காமலும் யோசனையின்றியும் “நல்ல தீர்மானம்! நல்ல தீர்மானம்!” என்றே எழுதிக்கொண்டு வருகின்றன. பொது ஜனங்களும் இவற்றைப் பற்றி சரிவரச் சிந்திக்காமல் பத்திரிகைகளை நம்பியே ஏமாந்து போகிறார்கள். காங்கிரஸ் தீர்மானத்தின் முக்கிய தத்துவங்களெல்லாம் இரண்டு, மூன்று விஷயங்களிலேயே அடங்கிப்போயிருக்கிறது. அதாவது, சட்டசபைகளைக் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டியது; அதற்காகக் காங்கிரஸ் பணத்தை உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது. சட்ட மறுப்புத்தான் நல்ல ஆய்தம்; ஆனால், தேசம் அதற்கு லாயக்கில்லை. நிர்மாணத் திட்டத்தைப் பொது ஜனங்களையே நிறைவேற்றி வைக்கச் சொல்லிவிட வேண்டியது. சர்க்காரை இறுதியாகச் சில விஷயங்களைக் கேட்பது, அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் சட்டசபைகளை விட்டு விலகிவிடுவதுமான விஷயங்கள் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. சட்டசபை செல்லும் நோக்கத்துடன் ஸ்ரீமான் தாஸ் தலைமையாக யிருந்து, காங்கிரஸுக்கு விரோதமான பிரசாரம் செய்து வரும் காலத்திலேயே சட்டசபை...

ஸ்ரீமான் சு. வீரய்யன் கிராமப் பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம் 0

ஸ்ரீமான் சு. வீரய்யன் கிராமப் பஞ்சாயத்து சட்டத்திற்கு திருத்தம்

தீண்டாதார் வகுப்புப் பிரதிநிதியாய் சர்க்காரால் நியமிக்கப் பட்ட சட்ட சபை மெம்பரான ஸ்ரீமான் ஆர்.வீரய்யன் அவர்கள் சென்னை கிராமப் பஞ் சாயத்து சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப் போவதாக சட்டசபைக்கு ஒரு முன்னறிக்கை அனுப்பியிருக் கிறார். அதாவது, அச்சட்டத்தின் ஒரு பாகத்தில் கிராமப் பஞ்சாயத்து மெம்பர்கள் ஸ்தானத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பாரிலிருந்து சில பிரதிநிதிகளை சர்க்கார் நியமிக்க வேண்டும் என்கிற வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளும்படி அதில் எழுதியிருக்கிறார். அதற்கு அவர் காரணம் சொல்லுகையில் தேர்தல்கள் மூலமாக தீண்டா தார் என்போர்கள் ஸ்தானம் பெற முடியாமலிருக்கிறபடியால் முனிசிபாலிட்டி, ஜில்லா, தாலூகா போர்டுகள் போல் கிராமப் பஞ்சா யத்து சபைக்கும் தீண்டாதா ருக்கும் சர்க்கார் நியமனம் கிடைத்தால் அல்லாமல் ஸ்தானம் பெற முடியா தாதலால் சட்டத்தில் இவ்வித திருத்தம் இருக்க வேண்டியது உடன் அவசிய மாகிறது என்று எழுதுகிறார். நமது குறிப்பு:- இவற்றை நாம் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். புருஷன் பெண் ஜாதியாய் வாழுகின்றவர்களே...

தமிழ் மாகாண கோ-வம்சத்தினரின் 0

தமிழ் மாகாண கோ-வம்சத்தினரின்

( கோவில் பண்டாரங்கள் ) இரண்டாவது மகாநாடு நாளது தை µ 11, 12 (1926 ஜனவரி 24,25) தேதி ஞாயிறு திங்கள்கிழமைகளில் கொடுமுடி மகுடேஸ்வர சுவாமி கோவிலுக் குப் பக்கத்தில் உள்ள சத்திரத்தில் காரமடை ஸ்ரீமான் சூ.கருப்பண்ண பண்டாரம் அவர்கள் தலைமையின் கீழ் தமிழ் மாகாண கோ – வம்சத்தினரின் 2-வது மகாநாடு நடைபெறும்:- அதே சந்தர்ப்பங்களில் ஸ்ரீமதி லக்ஷிமி அம்மாள் அக்ராசனத் தின் கீழ் ஸ்ரீகள் மகாநாடும், ஸ்ரீ கணபதி அக்ராசனத்தின் கீழ் மாணவர் கள் மகாநாடும் நடைபெறும். பலவிடங்களிலிருந்தும் அநேக பிரபலஸ்தர்கள் விஜயம் செய்வதாய் வாக்களித்திருக்கிறார் கள். ஆதலால் எல்லா குலாபிமானி களும் இதர சமூக கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டப்படுகிறார்கள்:- – கொடுமுடி வரவேற்புக் கமிட்டியார். நமது குறிப்பு: – நமது தாலூக்காவில் உள்ள சைவப் பண்டாரங்களின் முக்கிய கூட்ட மிதுவாகையால், இத்தாலூக்கா வேளாள சமூகத்தார் அனைவரும் விஜயம் செய்து அவர்கள் முன்னேற்றத்துக்கான...

கோவை ஜில்லா செங்குந்தர் மகாநாடு 0

கோவை ஜில்லா செங்குந்தர் மகாநாடு

நமது நாட்டில் செங்குந்தர் குலமானது தக்க பெருமையுடனும், செல்வாக்குடனும் இருந்து வருகிறது. ஆனாலும், அதில் பெண்களை கோவில்களின் பேரால் பொட்டுக்கட்டி தாசி வேசித் தொழில் செய்ய அநுமதிப்பதால் அக்குலத்திற்கு ஒரு இழிவு இருக்கிறது என்பது மறைக்க முடியாத காரியமானாலும், இச்சங்கம் ஏற்பட்ட சென்ற 10 வருஷங்களுக் குள்ளாக எவ்வளவோ சீர்திருத்தமடைந்துவிட்டது. இவ்வளவு தூரம் முன் னேற்றமடையும்படியான காரியம் வேறு எந்த குல சங்கமும் செய்யவே யில்லை. இக்குல முன்னேற்றத்திற்கு இச்சங்கத்தின் மூலமாய் பல குலாபி மானிகள் உண்மையில் பாடுபட்டதனால்தான் இந்த யோக்கியதைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இது மாத்திரம் போதாது. இக் குலத்தின் சில ஆண்களிடமும் உள்ள சில குறைவுகளையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதாவது, நமது நாட்டில் இக் குலத்தாரில் சிலர் மேளம் வாசிக்கும் தொழிலை ஜீவனமாய்க் கொண்டிருப்பதால் ஒரு குறைவான பெயர் இருந்து வருகிறது. இத் தொழில் காரணமாகவே ஆண்கள் சுயமரியா தையைக் கவனிக்காமல் தங்களுக்குள்ளாகவே சிலர் தங்களைத்...

பிராமணரல்லாதார் காங்கிரஸ் 0

பிராமணரல்லாதார் காங்கிரஸ்

சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணரல்லாதார் இயக்கம், தமிழ் நாட்டுப் பிராமணர்களால் சென்சார் வைத்து, வெளி மாகாணங்களுக்குப் போகாமலிருக்கும்படி தடுத்து வந்த பலத்த சூட்சிகளையும் தாண்டிக்கொண்டு இப்போது இந்தியா முழுவதுமே பரவி வருகிறது. அகில இந்தியா பிராமண ரல்லாத காங்கிரசுக்கு இது இரண்டாவது வருஷம். தேசீயக் காங்கிரஸ் ஆதியில் கூட்டப்பட்ட காலத்தில் அதற்கு இந்தியா முழுவதுக்குமாக 75 பேர்கள்தான் பிரதிநிதிகளாக வந்திருந்தார்கள். அது நாளுக்கு நாள் அடைய வேண்டிய வளர்ச்சியை அடைந்து மகாத்மா காலத்தில் 5000-கணக்கான பிரதிநிதிகளை அடைந்து, எவ்வளவு மேல் போக வேண்டுமோ அவ்வளவும் போய் இப்போது இறங்கு முகத்தில் இருக்கிறது. இது இவ்விதமிருக்க, இந்தியா முழுவதுக்குமே பிராமணரல்லாதார் மகாநாடு ஆரம்பித்து இரண்டு வருஷம்தான் ஆகிறது. ஆரம்ப முதல் வரு ஷத்தில், ஆதி தேசீயக் காங்கிரஸ் போல் பத்துக் கணக்காய் பிரதிநிதிகள் இல்லாமல், நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் பெல்காமில் கூடினார்கள். இரண் டாம் வருஷத்தில் அம்ரோடி என்னும் அமராவதியில் 5000 பிரதிநிதிகள் பதிவு...

தேசிய காங்கிரஸ் 0

தேசிய காங்கிரஸ்

இவ்வருடம் கான்பூரில் இந்தியாவின் விடுதலைக்கு உழைக்கும் சபையென்னும், இந்திய தேசிய மகாநாடாகிய காங்கிரஸ், கான்பூரில் கூடிக் கலைந்தது. இந்தியாவின் விடுதலைக்கும், இந்தியரின் சுயமரியாதைக்கும், அரசாங்கத்தை கொஞ்சமும் எதிர்பாராமலும், அவர்களின் அரசியல் மாய்கை களை உபயோகப்படுத்திக் கொள்ளாமலும், அவர்களோடு விலகியிருந்து நிர்மாணத்திட்டத்தை நிறைவேற்றி வைப்பதன் மூலமாகவே தியாகத்திற்கும் கஷ்ட நஷ்டத்திற்கும், துணிவுகொண்டு உழைப்பதுதான் உண்மையான சுயராஜ்ய மார்க்கம் என்கிற உறுதியைக் கொண்ட கூட்டத்தார், இவ்வாண்டு கான்பூர் காங்கிரஸில் சரிவரக் கலந்து கொள்ளவேயில்லை. மகாத்மா காந்தியும் தான் தனியாக நின்று நடத்துவதாய் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கதர் ஸ்தாபனமாகிய நூல் நூற்கும் சங்கத்தை ஏதாவது ஒழித்து விடுவார்களோ எனப் பயந்து அதைக் காப்பாற்றிக் கொள்ளும் வரை கூட இருந்து விட்டு, மற்றவைகளில் அவரும் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் மகாநாட்டுக்குக்கூட வராமல், மெல்ல நழுவி விட்டார். காக்கிநாடாவில் ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் “இன்னும் இரண்டு வருடத்தில் இந்த காங்கிரஸானது பழயபடி பேச்சை விற்றுப் பிழைக்கும் வக்கீல் கூட்டத்தார்...

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் 0

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார்

ஸ்ரீமான். இராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கைகளில், முதலில் காங்கிரஸ் தற்காலம் பொது ஜனங்களுக்குச் சேவை செய்ய எவ்விதத் திட்டத்தையும் உடைத்தாயிருக்கவில்லை என்றும், காங்கிரசிற்கு இப்போ திருக்கும் மதிப்பெல்லாம், அது சென்ற நான்கு, ஐந்து வருடங்களாக தேசத் துக்கு அநுகூலமான திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்காகப் பல தலைவர்களும், தொண்டர்களும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு பெரிய தியாகங்களையும் செய்து திட்டங்களை நிறைவேற் றப் பிரயத்தனப்பட்டதன் பலனாய் காங்கிரசுக்கு ஏற்பட்ட மதிப்பை வைத்துக் கொண்டு, காங்கிரசின் மூலமாய் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாகும் படியான எவ்விதத் திட்டமும் அதில் இல்லாமல், பழைய நிலையின் வாசனை யையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, காங்கிரஸ், காங்கிரசென்று சிலர் சொல்லி வருகிறார்கள். இப்படியே காங்கிரஸ் இருக்குமேயானால், இனிக் கொஞ்சக் காலத்தில் காங்கிரஸ் மதிப்பே போய்விடும் என்றும் எழுதிவிட்டு, காங்கிரஸிற்கு பூரண மது விலக்கையாவது திட்டமாய் வைத்து அதை ஓட்டர்களுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் ஒரே வருடத்தில்...