கரூர் மாவட்டத் தோழர்களின் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியான தோழர்கள் சந்திப்பின் நான்காம் கட்டமாக கரூர் மாவட்ட தோழர்கள் உடனான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 12.12.2021 மாலை 7.00 மணி அளவில் தெ.வெங்கிட்டாபுரம் முத்தமிழ் அரங்கில் நடைபெற்றது. தலைமைக் கழக பொறுப்பாளர்களின் பயணத்தின் நோக்கம் குறித்து அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி தொடக்கவுரையாற்றினார். தோழர்களை அறிமுகபடுத்தியும் கரூர் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாட்டையும் தொடர்ந்து நடைபெற உள்ள செயல்பாடுகள் குறித்தும் சின்னதாராபுரம் தோழர் சண்முகம் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி பெரியார் முழக்கம் இதழின் அவசியம் குறித்தும் அதற்கு சந்தா சேகரிப்பது குறித்து விளக்கமளித்துப் பேசினார். நிறைவாக கழக பரப்புரைச்செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் இந்த இயக்கத்தில் தோழர்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் தோழர்கள் ஒவ்வொருவரும் புரட்சிப் பெரியார் முழக்கம் எனும் வார இதழை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் குறைந்தது 25 நபர்களிடமாவது கொண்டு செல்லும் பிரச்சார இயக்கத்தை வரும் தமிழ் புத்தாண்டு வரை தொடர்ந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

பெரியார் முழக்க சந்தாவை விரைவுபடுத்தி டிசம்பர் இறுதிக்குள் முடிப்பது எனவும், பரப்புரை பயணங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சந்திப்பின் முன்னதாக பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பனையம்பாளையம், ஒத்தமாந்துறை, சின்னதாராபுரம் பேருந்து நிலையம், தெ.வெங்கிட்டாபுரம், ராஜபுரம் பிரிவு, எல்லமேடு ஆகிய இடங்களில் கழகக் கொடியேற்றி கொள்கை முழக்கங்கள் எழுப்பபட்டன. சந்திப்பில் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு ப. ரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், சின்னதாரபுரம் தி.க சண்முகம், பரமத்தி இரா.வடிவேல் ராமசாமி, தமிழன் சு.கவின் குமார், ர.ராகவன், பெ.ரமேஷ், சிலம்பம் கொ.சரவணன், பேபி வடிவேல், நிஜாமுதீன், திருமங்கலம் மணி, ஜெகதீஸ், பெ.குமரேசன், ப.அருண், ஆ. நாகராஜ், ஏமூர் மகாலிங்கம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர். புதிய தோழர்கள் அதிகம் பங்கேற்ற இச்சந்திப்பில் தோழர்களுக்கும் தலைமை கழக உறுப்பினர்களுக்கும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருந்தது.

செய்தி: அய்யப்பன் திருப்பூர்

பெரியார் முழக்கம் 23122021 இதழ்

You may also like...