பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க வைக்க தமிழக மக்கள் மீது மின் கட்டணச் சுமையா? (2)
மத்திய அரசின் தனியார் மயக் கொள்கையை 1990 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த காங்கிரஸ் – மன்மோகன் கூட்டணியும், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை வாரியத் தின் (மின்சார வாரியத்திற்கான நீதிமன்றம்) நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு மின் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று கேட்கும் போதெல் லாம் அந்தத் தொகையையும், சில சமயங்களில் அதற்குக் கூடுதலான தொகையையும் மின்சார ஒழுங்குமுறை வாரியம் நம் மினசாரத் துறையிட மிருந்து வாங்கிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை பெரும்பாலான நமது நலனுக்குப் புறம்பாகவே அமைந்துள்ளது. நம்மைக் கடன் சுமையில் ஆழ்த்தும் செயலையே அது செய்திருக்கிறது. அதோடு நிற்காமல், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமான மின்சாரம் அளிப்ப தாலும், மிகச் சலுகை விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதாலும் ஏற்படும் நட்டம் அனைத்தையும் நம்மிடமிருந்து வசூலிக்கும் செயலிலும் அது ஈடுபட்டு வருகிறது. வேறு எவருக்காகவோ சலுகை அளிக்க...