மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...