இராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்
இயக்குனர் ரஞ்சித் உருவாக்கிய ‘காலா’ திரைப்படம் பம்பாய் ‘சேரிப் பகுதி’ மக்களின் குடியிருப்பையும் நிலங்களையும் பெரும் தொழில் நிறுவனம் அரசியல் அதிகாரத்தோடு கைப்பற்றுவதை எதிர்த்து மக்கள் நடக்கும் போராட்டத்தை ‘இராம-இராவண’ப் போராட் டத்தின் பின்புலத்தில் சித்தரித்தது. பெரும் முதலாளி இராமர் பஜனை செய்வார்; மக்களுக்காகப் போராடும் ‘காலா’, ‘இராவண காவியம்’ பேசுவார். தமிழ் ஊடகங்கள் இப் பிரச்சினையை விவாதத்துக்குக் கொண்டு வரா மல் பதுங்கி விட்டாலும் பல தெலுங்கு தொலைக்காட்சிகளில் இது குறித்து விவாதங்கள் நடந்தன. அண்மைக்காலமாக கடவுள் மதத்தை மறுக்கும் நாத்திகராக தன்னைத் துணிவுடன் வெளிப்படுத்தி வரும் தெலுங்கு ஆவணப்பட இயக்குனர் ‘கத்தி’ மகேஷ், இந்த விவாதங்களில் பங்கேற்று ‘இராம’னுக்கு எதிராகப் பேசினார். சங்பரிவார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் தந்தன. உடனே அய்தராபாத் காவல்துறை பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. கடந்த 2018 ஜூலை 8ஆம் தேதி இரவு அவரை கைது செய்ததோடு 6 மாதங்களுக்கு...