Tagged: மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தின் பொது வாழ்வக வளாகத்தில் நவம்பர் 26 அன்று மேதகு பிரபாகரன் பிறந்த நாளும் அன்று மாலையிலிருந்து நவம்பர் 27 வரை மாவீரர் நாளும் புரட்சிகர பாடல்கள் கருத்துரைகளுடன் நடைபெற்றன. நவம்பர் 26ஆம் தேதி காலை செங்கொடி நினைவகத்துக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காலை 8 மணிக்கு புலிக்கொடியை பேராசிரியர் சரசுவதி ஏற்றினார். மாலையில் கலை நிகழ்ச்சி மற்றும் கருத்துரை நிகழ்வுகள் இடம் பெற்றன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குனர் களஞ்சியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலரும் வீரவணக்க உரையாற்றினர்.  

காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’

தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’...

நவ.27 – மாவீரர் நினைவு நாள் தேசியத் தலைவரின் வழிகாட்டும் உரைகள்!

1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம், ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது மேதகு பிரபாகரன், இந்திய இராணுவத்தின் தீவிரத் தேடுதலில் இருந்தார். தமிழீழக் காடு ஒன்றில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அங்கிருந்து தான் முதன்முதலாக ‘மாவீரர் நாள்’ திட்டத்தை அறிவித்தார். “இந்த வருடத்திலிருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக ஒரு வருடத்தில் நினைவு கூர்ந்த அந்த நாளையே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவது வீரச்சாவு அடைந்த சங்கரின் நினைவு தினமான இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர்களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலை காலத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்துப் பார்த்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லா போராளிகளும் சமம்...

மாவீரர் நாள் கொளத்தூர் 2016 – காணொளிகள்

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பயிற்சி எடுத்த இடத்தில் தளபதி ரோய் நினைவிடமும், தளபதி பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடமும் அமைந்துள்ள புலியூர் பகுதியில், ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டு 27-11-2016 அன்று முன்னால் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யூ டியூப் வீடியோ லிங்க் மாவீரர் நாள் 2016 நிகழ்வு https://www.youtube.com/watch?v=chwrDdNQ8wg கொளத்தூர் மணி உரை https://www.youtube.com/watch?v=Y93bnQUde6A விடுதலை ராசேந்திரன் உரை https://www.youtube.com/watch?v=HrjlY09zLUc சுப்புலட்சுமி ஜெகதீசன் உரை https://www.youtube.com/watch?v=tF_n1Nv5gNE

பிரான்சில் மாவீரர் நாள் – கழகத் தலைவர் உரை

தமிழீழ மக்களின் ஏற்பாட்டில் பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் கழகத்தலைவர் அண்ணன் கொளத்தூர்மணி அவர்கள் கலந்துக்கொண்டு 27112015 அன்று மாவீரர் தின உரை நிகழ்த்தினார்.. (உரை ஒலிப்பதிவு கேட்க) பின்பு பாரீசில் புலிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் 

கொளத்தூர் புலியூரில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு! கொளத்தூர் புலியூரில் ! திராவிடர் விடுதலைக் கழகம் வீரவணக்கம் செலுத்தியது. 27.11.2015 மாலை 6.05 மணிக்கு மாவீரர் வீரவணக்க பாடல் ஒலிக்க மறைந்த மாவீரர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் கொளத்தூர் கும்பாரப்பட்டி புலியூரில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள தளபதி ரோய் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி 27112015

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி நடைபெற்றது. மன்னார்குடி நவ 27 இளமை சுகங்களை எல்லாம் துறந்து விட்டு, எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்தோர் பல்லாயிரக்கணக்கானோர். ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடின்றி, ஏழை, பணக்காரன் என்கிற பொருளிய வேறுபாடுகளின்றி, உயர்சாதி ரூ கீழ்சாதி என்கிற சமூக வேறுபாடுகளின்றி, தரைப்படை, வான்படை, கடற்படை, தற்கொலைபடை என உலகின் எந்த நாட்டு விடுதலைப்படைக்கும் இல்லாத தனிச்சிறப்புகளுடன் களம் கண்டு மாண்ட அம்மாவீரர்கள் நினைவைப்போற்றும் நாளே நவம்பர் 27. 1982ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரபாகரனின் மடியில் தலைவைத்தபடியே உயிர்விட்ட சங்கர் என்கிற சத்தியநாதன் முதற்களப்பலியான அம்மாவீரனின் மறைந்த நாளே (நவம்பர் 27) மாவீரர் நாள். அந்நாளில் இலட்சியத்துக்குத் தன்னையே ஈந்தரூநாட்டு விடுதலைக்கு உயிரை கொடுக்க முன்வந்த – தமிழ்மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வை இழந்த மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் மரியாதை செலுத்திட உலகம்...

மாவீரர் நாள் வீரவணக்கம்

இளமை சுகங்களை துறந்து, எதிர்கால சந்ததிகளக்காக, தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்து, தம் இன்னுயிரை ஈகம் செய்த… மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் வீரவணக்கம்!   தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம், புலியூர் பிரிவு, கொளத்தூர் மாலை 5 மணி, நவம்பர் 27

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது. ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட...