காஞ்சி மக்கள் மன்றத்தில் மாவீரர் நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தின் பொது வாழ்வக வளாகத்தில் நவம்பர் 26 அன்று மேதகு பிரபாகரன் பிறந்த நாளும் அன்று மாலையிலிருந்து நவம்பர் 27 வரை மாவீரர் நாளும் புரட்சிகர பாடல்கள் கருத்துரைகளுடன் நடைபெற்றன. நவம்பர் 26ஆம் தேதி காலை செங்கொடி நினைவகத்துக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காலை 8 மணிக்கு புலிக்கொடியை பேராசிரியர் சரசுவதி ஏற்றினார். மாலையில் கலை நிகழ்ச்சி மற்றும் கருத்துரை நிகழ்வுகள் இடம் பெற்றன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இயக்குனர் களஞ்சியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட பலரும் வீரவணக்க உரையாற்றினர்.

 

You may also like...