Tagged: பொதுக்கூட்டம்

இளம் பிள்ளை கூட்டத்தில்   ஜாதி வெறியர் காலித்தனம்

இளம் பிள்ளை கூட்டத்தில் ஜாதி வெறியர் காலித்தனம்

19-07-2016 முங்கப்பட்டியிலும் , 23-07-2016 இளம்பிள்ளை அருகேயுள்ள அழகப்பம்பாளையம் புதூரிலும் ‘திராவிடர் விடுதலைக் கழகம் இளம்பிள்ளை’ நடத்திய “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” எனும் தலைப்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் நகர செயலாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் மோகன்ராஜ் வரவேற்புரையாற்ற ரமேசு, சந்திரசேகர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். தோப்பூர் கண்ணன், கோபிநாத் சிற்றுரையாற்றினர். தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடத்தி சிறப்புரையாற்றினார். அபுதூர் கூட்டத்தின் இறுதியில் காவல் துறையின் பாதுகாப்பையும் மீறி ஜாதி வெறியர்கள் பேச்சாளரை நோக்கி குளிர்பான பாட்டிலை வீசி தாக்கினர் இதில் தோழர் மோகன்ராஜ் தலையில் பாட்டில் பலமாக தாக்கியது. தோழர் சிகிச்சை எடுத்து வருகின்றார். ஜாதி வெறியர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி மோகன்ராஜ் வேளாண், கல்விக் கடனை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம் பேராவூரணி அருகில் ரெட்ட வயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும், கல்விக் கடனையும் விலக்கிக் கொள்ள வலியுறுத்தி...

தேன்கனிக்கோட்டை பொதுக்கூட்டம் ! 27032016

தேன்கனிக்கோட்டை பொதுக்கூட்டம் ! 27-03-2016 ஞாயிறு மாலை 4-00 மணி அளவில், கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகில், ‘திராவிடர் விடுதலைக் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. காவல்துறை கலை நிகழ்சிக்கு தடைவிதித்து, இரவு 7-00 மணிக்குள் கூட்டத்தை நிறைவு செய்யவேண்டும் என்ற நிபந்தனையோடு இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது. இப்பொதுக் கூட்டம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவினரின் மூடநம்பிக்கை – ஜாதி ஒழிப்பு பாடல்களோடு துவங்கியது. மாவட்ட பொருளாளர் மைனர் (எ) வெங்கிடகிரியப்பா கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். தோழர் பழனி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தி.க.குமார் முன்னிலை வகித்தார். கழக புதுவை மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன் நன்றியுரை ஆற்றினார்.

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

“சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுக” என இன்று 22.3.16 மாலை 5 மணிக்கு அம்பேத்கர் திடலில் தோழர் நல்ல கண்ணு தலைமையேற்க தோழர்கள் சுந்தர மூர்த்தி, செந்தில், தெய்வமணி, அருண பாரதி, தமிழ்நேயன், நாகை திருவளளுவன் உரையாற்றினர். அவரகளை தொடர்ந்து தோழர் பொழிலன் தமிழக மக்கள் முண்ணனி, பொதுச் செயலர், கோவை இராமகிருஷ்ணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் கழகம் உரையாற்றிய பின் நிறைவாக தோழர் தியாகு பேசிய பிறகு பொதுக் கூட்டம் இரவு 10.00 மணியளவில் நிறைவடைந்தது செய்தி குகநந்தன் லிங்கம்

ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக – பொதுக்கூட்டம் சென்னை 22032016

சென்னையில் பொதுக்கூட்டம் ! திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நட்டநடுத் தெருவில் சங்கர் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த காணொளி கண்டிருப்பீர்கள். சங்கரின் காதல் துணைவி கௌசல்யாவையும் கொடூரமாகத் தாக்கியது கௌசல்யாவின் தந்தை அனுப்பிய கூலிப்படை! இதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இதற்கு எதிராகத்தான் தனிச்சட்டம் கோருகிறோம். நம் கண்கள் கண்ட இப்படுகொலை நம்மையெல்லாம் நிலைகுலையச் செய்தது. படுகொலை செய்யப்படும் அளவுக்கு சங்கர் செய்த குற்றம் காதலித்ததும் அவரையே மணமுடித்ததும் எந்த அச்சுறுத்தலுக்கும் மீறி எதிர்காலத்தை காதல் துணையோடு எதிர்கொண்டதும் மட்டும்தான். மட்டும்தான். காதலித்ததிலிருந்து எதிர்கொண்டிருந்தது வரை இந்தச் சமூகம் எவ்வகையிலெல்லாம் அவர்களுக்குத் துணை நின்றது? குறிப்பாக சாதி ஒழிப்பை இலட்சியமாய்க் கொண்ட நாம் என்ன செய்தோம்? சாதி ஒழிப்பிலேயே அவரவர் காட்டும் வழிமுறைகளும் கண்ணோட்டங்களும் கோட்பாடுகளும் வேறு வேறாக இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் நமக்கும் மாறி மாறி விவாதித்துக்  கொண்டிருக்கிறோம். ஆனால், இளவரசனுக்குப் பிறகு, கோகுல்ராஜுக்குப் பிறகு காதலர்க்குத்...

பெரியார் நடத்திய போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலை பொதுக்கூட்டம் – 05032016 – நிழற்படங்கள்

பொள்ளாச்சி ஆனைமலையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பொதுக்கூட்டம் ! ”பெரியார் நடத்திய போராட்டங்களும்,தமிழர்கள் அடைந்த பலன்களும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு தோழர் அரிதாசு அவர்கள் தலைமை தாங்கினார்.தோழர்கள் அப்பாதுரை,இரா.ஆனந்த்,விவேக்சமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மாநில அமைப்புச்செயலாளர் ஈரோடு ரத்தினசாமி,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி,தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர் சூலூர் பன்னீர் செல்வம்,மடத்துக்குளம் மோகன்,நேருதாசு,நிர்மல், வே.வெள்ளியங்கிரி, த.ராஜேந்திரன்,சீனிவாசன்,யாழ்மணி,மணிமொழி,சுந்தரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். பள்ளத்தூர் நாவலரசு – மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப்பாடல்கள் இடம்பெற்றன. தோழர் கோ.சபரிகிரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.  

பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலையில் பொதுக்கூட்டம்

05.03.2016 ஆனைமலை, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம். ”பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும்” எனும் தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்களும், கழக பொதுச்செயலாளர் ‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’ அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். நாள் : 05.03.2016 சனிக்கிழமை ,மாலை 5.30 மணியளவில் இடம் : முக்கோணம்,ஆனைமலை (பொள்ளாச்சி). மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்கள் இடம்பெறும். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம்,ஆனைமலை தொடர்புக்கு : 99760 86033 – 98428 15340 – 99420 77390

பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டம் நம்பியூர் 13122015

ஈரோடு (வடக்கு) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ”எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்னும் பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டம், 13-12-2015 அன்று மாலை நம்பியூர் பேருந்து நிலைய திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நம்பியூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். தோழர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.மேட்டூர் டி.கே.ஆர். பகுத்தறிவு இசைக்குழுவினரின் சாதியொழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரோடு இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோ, பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினார். அந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற உறுப்பினர்களுக்கு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, கழகத் தலைவர் வழியாக வழங்கினார்.