Tagged: நாமக்கல் திவிக

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை பெயரை நீக்க முயற்சி

நாமக்கல் நகராட்சி கட்டிடத்தின் பெரியார் மாளிகை என்கிற பெயரை நீக்கி, ‘அம்மா மாளிகை’என்று மாற்ற முயற்சிக்கும் அதிமுகவின் சதி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தால் தற்காலிகமாக முறியடிப்பு செய்தி – வைரவேல்

மாட்டுக்கறிக்கு எதிரான முற்றுகைப் போர் நாமக்கல் 31052017

மாட்டுக்கறி விற்பனைக்கு தடைவிதித்த பாஜக அரசைக் கண்டித்து, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க்கை முற்றுகையிட்டு போராட்டம். 21 பேர் கைது.

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் திருச்செங்கோடு 31052017

.. தடையைத் தகர்க்க ஒன்று கூடுவோம்.. நாள்: 31.05.2017 இடம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்பு, திருச்செங்கோடு. திராவிடர் விடுதலைக் கழகம்

திராவிடர் விடுதலைக் கழக கிளைக் கழக துவக்க விழா

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் 07.05.2017 ஞாயிற்றுக் கிழமையன்று  மாலை5.00 மணிக்கு கிளைக்கழக துவக்கவிழா நிகழ்வும் பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக அப்பகுதியில் கழகத்தின் கொடியை தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர் கா.சு வேலுச்சாமி ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கை விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவை இளவரசனின் “மந்திரமா தந்திரமா” அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தலைமைக் கழகப்  பேச்சாளர்  கா.சு.வேலுச்சாமி, பெரியாரின் கொள்கைகளை விளக்கி சிறப்பான உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு கழகத்தோழர் மணி தலைமை தாங்கினார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வை அப்பகுதியைச் சார்ந்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கொங்கு அமைப்புகளின் ஜாதி ஆதிக்கம் நிறைந்த இப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக...

மெரினாவில் காவல்துறை தாக்குதலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 30012017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதிகேட்டு…. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 30012017 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்.   செய்தி தோழர் வைரவேல்

திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! 27012017

நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! பொள்ளாட்சி,ஈரோடு,திருப்பூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட ஜாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்பு. (10 பெண்கள் உட்பட) நன்றி: •கா.சு.நாகராசு.ஒருங்கிணைப்பாளர். பெரியார் திக. •இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம். •சிவகாமி.மாநில அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்றம். •முல்லைவேந்தன்.மேட்டூர் •மணிமொழி.திவிக.பொள்ளாட்சி செய்தி வைரவேல்

பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 29122016

தந்தை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் 29122016 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருப்பரசன் நாடக குழுவினர் மிகச் சிறப்பாக பெரியாரிய கருத்துக்களால் உலுக்கிய எடுத்தார்.   கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 1 கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 2

ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு

ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு

நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் 06.10.2016 அன்று தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. குமார பாளையம் நகர கழகத் தலைவர் மீ.த.தண்டபாணி வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் முன்னதாக பாவலர் இரா.நிறைமதி தலைமையில் “தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது “மதமே” என்ற தலைப்பில் பொன் கதிரவன், “பெண்ணடிமையே”என்ற தலைப்பில் நா.அன்பழகன், “சமூக அநீதியே” என்ற தலைப்பில் மதுபாரதி, “ஜாதியே” என்ற தலைப்பில் பகலவனும் கவிதை நடையில் சிறப்பாக எடுத்துரைத்தனர். கவியரங்கம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக  துரை தாமோதரனின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது. சாமியார்களின் மோசடித்தனங்களை விளக்கி மக்களின் அறியாமையைப் போக்கும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது. பின்னர் பா.செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக் கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், செயலாளர் மு.சரவணன், அமைப்பாளர் மா.வைரவேல், ...

நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் இளைஞர் பலி

திருச்செங்கோட்டில் 13.10.2016 அன்று நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் வழுக்கி விழுந்து மூளைச்சிதறி சௌந்தர்ராஜன் எனும் இளைஞன் மரணமடைந்தார். சட்டவிரோதமாக நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பிற்கு காரணமான கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி திவிக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் வைரவேல், திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு,நாமக்கல் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகிய தோழர்கள் மனு அளித்தனர்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – குமாரபாளையம் 06102016

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தலைமை தோழர் கொளத்தூர் மணி நாள் 06102016 நேரம் மாலை 5 மணி முதல் இடம் நகர பேருந்து நிலையம் அருகில், குமாரபாளையம்   தோழர் பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமா தந்திரமா என்ற அறிவியல் நிகழ்ச்சி மற்றும் கவியரங்கம் நடைபெறும் தொடர்புக்கு 9944333855

நாமக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில்… நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமையில்,காவேரி நாகரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியில் சென்று நகரின் எட்டு இடங்களில் கழகக் கொடியேற்றப்பட்டது மற்றும் பெரியாரின் பொன்மொழி வாசகப் பலகை திறக்கப்பட்டது,பல்வேறு இடங்களில் பெண் தோழர்கள் கொடியேற்றினர்,இறுதியாக கத்தேரி சமத்துவபுரத்தில் வாகனப் பேரணி முடிவடைந்த்து,பின்பு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கினர்,இந்நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து பகுதி தோழர்களும் பங்கேற்றனர். திருச்செங்கோட்டில்… நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,நகரின் இரு பகுதிகளில் கழகத் தோழர்கள் வை.தனலட்சுமி,ச.ராஜலட்சுமி ஆகியோர் கழகக் கொடியேற்றினர்,பின்பு பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் கழகத் தோழர்கள்,ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில்… நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமையில்,பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர்...

பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்ட அய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,நகரத் தலைவர் பிரகாசு,நகர செயலாளர் சரவணன்,நகர பொருளாளர் கோபி ,நகர இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் மற்றும் குப்புசாமி, சங்கர்,தம்பிதுரை, தங்கராஜ், வேணுகோபால்,பிரகாசு,பாலண்,சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

நாமக்கல் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்,பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமை தாங்கினார். ,அ.முத்துப்பாண்டி மாவட்டச் பொருளாளர், மு.சாமிநாதன் மாவட்ட தலைவர் ,மா வைரவேல் மாவட்ட அமைப்பாளர் ,நன்றியுரை மு சரவணன் நகரச் செயலாளர் ,ஆ.பிரகாஷ் நகரச் தலைவர்,வெங்கட் ,குப்புசாமி மற்றும் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்

இடஒதுக்கீடு பற்றிய கலந்துரையாடல் திருச்செங்கோடு 26062016

திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 26062016 அன்று தோழர் பால் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு பற்றிய நீண்ட நெடிய கலந்துரையாடல் நிழற்படங்கள்

இடஒதுக்கீடு கலந்துரையாடல் – நாமக்கல் 26062016

இடஒதுக்கீடு நீண்ட நெடிய போராட்ட வரலாறு குறித்த கலந்துரையாடல் இடம் பெரியார் மன்றம், திருச்செங்கோடு நாள் 26062016 முன்பதிவு அவசியம்

ஜாதிவெறியர்களை கைதுசெய் – நாமக்கல் மாவட்டத்தில் கழகம் புகார் மனு

அருந்ததிய இளைஞரை காதலித்தால் கௌரவ (ஆணவ)கொலை செய்வோம் என்றும், அந்த இளைஞரையும் கொலைசெய்வோம் என்றும் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மாணவியை “அலைபேசி”யில்(யுவராஜ் பாணியில்)மிரட்டிய கவுண்டர் ஜாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைதுசெய்…! மாணவிக்கு தகுந்த உயிர்பாதுகாப்பு வழங்கு…! என்று நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையில் இன்று புகார் அளித்துவிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து செய்திகளை பதிவு செய்தோம்… உடன் மாவட்ட கழகசெயலாளர் சரவணன், பள்ளிபாளையம் நகரகழக செயலாளர் பிரகாசு, திருச்செங்கோடு நகரகழக செயலாளர் நித்தியானந்தம், நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு, ஒன்றிய அமைப்பாளர் சதீசு,கார்த்தி உள்ளிட்ட கழகத்தோழர்கள் வந்திருந்தனர் செய்தி வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்

கழகத் தோழர் மல்லை கண்ணன் முடிவெய்தினார்

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய அமைப்பாளர், ந.கண்ணன் உடல்நலக் குறைவால் 01.01.2016 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வு 02.01.2016 அன்று நடைபெற்றது. இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி மற்றும் மறுமலர்ச்சி திமுக, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர், தமிழ்ப் புலிகள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இறுதியாக நண்பகல் 12.30 மணியளவில் மல்லசமுத்திரம் பொதுமயானத்தில் கண்ணனின் உடல் எரியூட்டப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறந்த களப்பணியாளராக செயல்பட்டு வந்த கண்ணன் இழப்பு அவர் குடும்பத்தார்க்கு மட்டுமின்றி திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் மிகுந்த இழப்பு. கடைசியாக நடந்த சேலம் கழக மாநாட்டில் கலந்து கொண்டு கழகத் தோழர்களிடம் உரையாடினார். அதுவே...