Tagged: செயலவை

மேட்டூரில் செயலவை கூடியது

மேட்டூரில் செயலவை கூடியது

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 25.6.2016 அன்று பகல் 11 மணியளவில் மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் கூடி கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் – கழக வளர்ச்சி குறித்த திட்டங் களை விரிவாக விவாதித்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழக முழுதுமிருந்தும் கழகச் செயலவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். கொளத்தூர் குமார் – கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூற, சேலம் மேற்கு மாவட்ட செய லாளர் கோவிந்தராசு அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக சென்னை யில் தலைமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள், கழக அமைப்புகளை மேலும் வலிமையாக்கவும், பரவலாக்கு வதற்குமான திட்டங்கள், பெரியாரியலை சமகாலச் சூழலில் மேலும் வளர்த்தெடுப் பதில் கழகம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்துப் பேசியதோடு, தீர்மானங்களையும் முன் மொழிந்தார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், முகநூல் பொறுப்பாளர்...

ஆக.8 முதல் 12 வரை நான்கு முனைகளிலிருந்து புறப்படுகிறது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கழகத்தின் பரப்புரைப் பயணம்

ஆக.8 முதல் 12 வரை நான்கு முனைகளிலிருந்து புறப்படுகிறது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கழகத்தின் பரப்புரைப் பயணம்

மேட்டூரில் கூடிய கழக செயலவையில் மூட நம்பிக்கைளுக்கு எதிரான பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒரு குடிமகனின் அடிப்படை கடமை என்று அரசியல் சட்டம் கூறுகிறது.  ஆனால் சமுதாயத்தில் அறிவியலுக்கு எதிராக சமூகத்தைப் பாதிக்கும் மூட நம்பிக்கைகள் ஏராளமாக மக்களிடத்தில் படிந்திருக்கின்றன. பெண் சிசுக்கொலை, இளம்வயது திருமணம், பெண்களை ஏமாற்றி கெடுக்கும் சாமியார்களின் மோசடி, பேய், பில்லி, சூனிய நம்பிக்கைகளில் அச்சம், அதனால் சந்திக்கும் இழப்புகள், நரபலி போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக விளக்கி தன்னம்பிக்கையை விதைக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது. 7-8-2016 அன்று சென்னை, கோவை, மயிலாடுதுறை, சத்திய மங்கலம் ஆகிய நான்கு முனைகளிலிருந்து புறப்பட்டு கிராமம் கிராமமாக 5 நாட்கள் பரப்புரை செய்யப்படும். திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய பெயரோடு...

ஜூன் 25இல் மேட்டூரில் கழக செயலவை கூடுகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு 12.6.2016 காலை 10 மணியளவில் சென்னையில் கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடியது. கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 24.1.2016 அன்று திருச்சியில் கூடிய கழகச் செயலவை கூட்டத்துக்குப் பிறகு கழக அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் கழகம் அறிவித்த போராட்டங்களை நடத்திய – நடத்தாத கழக அமைப்புகள் குறித்தும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு பணிகளில் கழகத்தினர் செயல்பாடுகள் குறித்தும் அடுத்த செயல் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மேட்டூரில் கழக செயலவைக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

உற்சாக உணர்வலைகளோடு நடந்த கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் திருச்சியில் கரூர் புறவழிச் சாலையிலுள்ள இரவி ‘மினி ஹாலில்’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கியது திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி, கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். முடிவெய்திய கழகத் தோழர் மல்ல சமுத்திரம் கண்ணன், மூத்த பெரியார் தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம், ரோகித் வெமுலா ஆகியோர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, நிகழ்ச்சிகள் தொடங்கின. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக கடந்த ஜூலை மாதம் நடந்த தர்மபுரி செயலவைக்குப் பிறகு, கழக நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கழகக் கொள்கைகளை வெகு மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு...

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

  எதிர்வரும் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ( நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும்) திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்க, கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற  உள்ளது. அனைத்து செயலவை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் பொருள்: இந்துத்துவ எதிர்ப்புப் பரப்புரை பரப்புரை வாகனம் வாங்குதல் மய்ய அரசுப் பணிகளில் தென்னாட்டுக்கு வஞ்சனை பல்கலைக் கழகங்களில் சோதிடக் கல்வி பகுத்தறிவு பரப்புரை தொடர் கூட்டங்கள் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை திட்டம் எதிர்கால வேலைத் திட்டம் கொளத்தூர் மணி   விடுதலை இராசேந்திரன் (தலைவர்)    (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 20032014 இதழ்

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

29.3.2014 அன்று மயிலாடு துறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை – செயலவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்தது. நாகை மாவட்ட கழகத் தலைவர் மகா லிங்கம், ‘கடவுள்-ஆத்மா’ மறுப்பு களைக் கூற, தஞ்சை மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் இளைய ராசா வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். பொருளாளர் இரத்தினசாமி, கழகப் பரப்புரைக்காக 30 பேர் பயணிக்கக்கூடிய பயன்படுத்தப் பட்ட வாகனம், கழகத் தலைவர் ஒப்புதலுடன் வாங்கப்பட் டுள்ளதையும், அதற்குத் தேவை யான நிதி குறித்தும் விளக்கினார். ஒவ்வொரு மாவட்டக் கழகமும் வாகனத்துக்கான நன்கொடை யாக பொது மக்களிடமிருந்து திரட்டித்தரக்கூடிய நிதி மற்றும் குடும்ப ரீதியாக வழங்கக்கூடிய நிதியை நிர்ணயம் செய்யலாம் என்ற ஆலோசனையை முன் வைத்தார். அதன்படி செயலவை உறுப்பினர்கள் இயக்கம் மற்றும் குடும்ப சார்பில் வழங்கக் கூடிய நன்கொடையைத் தெரிவித்தனர். உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் : சென்னை ஜான், காஞ்சிபுரம்...