மேட்டூரில் செயலவை கூடியது

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 25.6.2016 அன்று பகல் 11 மணியளவில் மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் கூடி கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் – கழக வளர்ச்சி குறித்த திட்டங் களை விரிவாக விவாதித்தது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழக முழுதுமிருந்தும் கழகச் செயலவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். கொளத்தூர் குமார் – கடவுள் ஆத்மா மறுப்புகளைக் கூற, சேலம் மேற்கு மாவட்ட செய லாளர் கோவிந்தராசு அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக சென்னை யில் தலைமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள், கழக அமைப்புகளை மேலும் வலிமையாக்கவும், பரவலாக்கு வதற்குமான திட்டங்கள், பெரியாரியலை சமகாலச் சூழலில் மேலும் வளர்த்தெடுப் பதில் கழகம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்துப் பேசியதோடு, தீர்மானங்களையும் முன் மொழிந்தார்.

அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி மற்றும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் உமாபதி (சென்னை), நெமிலி திலீபன் (வேலூர்), ராமர் (விழுப்புரம்), சந்தோஷ் குமார் (தர்மபுரி), தி.க. குமார் (கிருட்டிணகிரி), டேவிட் (சேலம் கிழக்கு), சூரிய குமார் (சேலம் மேற்கு), வைரவேல் (நாமக்கல்), முகில் ராசு (திருப்பூர்), நிர்மல் குமார் (கோவை), நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு), சென்னி மலை செல்லப்பன் (ஈரோடு தெற்கு), மகேஷ் (நாகை), மாசிலா மணி (நெல்லை), பொறிஞர்

சி. அம்புரோசு (தூத்துக்குடி), மேட்டுப் பாளையம் ராமச்சந்திரன் (கோவை புறநகர்) ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து செயலவை உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், அய்யனார், இளைய ராஜா, கொளத்தூர் குமார், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசினர்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்கள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு விளக்கமளித்தார்.

செயலவையில் முடிவெடுத் துள்ளபடி கண்டன ஆர்ப்பாட்டம், பரப்புரைப் பயணத்தை தோழர்கள் வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். கழகத் தோழர் குமரப்பா நன்றி கூறினார்.

அனைவருக்கும் சிறப்பான மாட்டுக்கறி அசைவ உணவை மாவட்டக் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

செயலவையில் ஜாதி மறுப்பு திருமணம்

கழக மாநாடுகள் – பயிலரங்குகள் – செயலவை கூட்டங்களில் ஜாதி மறுப்பு திருமணங்கள் நடந்து வருகின்றன. மேட்டூர் பாலமலையில் கடந்த மே மாதம் நடந்த பயிலரங்கில் ஒரு ஜாதி மறுப்பு திருமணம் நடந்தது. மேட்டூர் செயலவைக் கூட்டத்திலும் ஜாதி மறுப்பு திருமணம் நடந்தது. இணையர்களுக்கு உறுதிமொழிகள் கூறி கழகத் தலைவர் கொளத்தூர் மணி திருமணத்தை நடத்தி வைத்தார். சேலம் தாதகாப் பட்டியைச் சேர்ந்த சண்முகம்-வாணி ஆகியோரது மகன் ஹேமத் குமார், ஈரோடு மாவட்டம் பவானி சலோமின்-மாசிலாமணி ஆகியோரது மகள் சாந்தி ஆகியோரின் மணவிழா கழகச் செயலவையில் தோழர்களின் வாழ்த்து களுடன் நடைபெற்றது. மணமகன் அய்.டி.அய். படித்தவர். மணமகள் ‘எலக்ட்ரானிக்ஸ்’ பிரிவில் டிப்ளமோ படித்தவர். இருவரும் பணிகளில் உள்ளனர். இது ‘ஜாதி மறுப்பு’ திருமணம். அதோடு வெவ்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட மறுப்பு மணமும்கூட. மணமக்களுக்கு உணவு செலவும் இல்லை; நமது செயலவையே ஏற்பாடு செய்திருக்கிறது என்று பலத்த கைதட்டலுக்கிடையே கழகத் தலைவர் தெரிவித்தார். கழகத் தோழர்களுடன் மதிய உணவருந்திய மணமக்கள் கழக வளர்ச்சிக்கு ரூ.3000 நன்கொடை வழங்கினர்.

பெரியார் முழக்கம் 30062016 இதழ்

You may also like...