Tagged: காமராசர் பிறந்தநாள் விழா

சென்னை விழாவில் கொளத்தூர் மணி பேச்சு பெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜூலை 15ஆம் நாள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் ‘பெரியாரும் காமராசரும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை: “காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசை வீழ்த்தியே தீருவேன் என அறிவித்த பெரியார், அதே காங்கிரஸ் கட்சியில் இருந்த காமராசரை அரவணைத்தார் என்றால் அதற்கு என்ன காரணம்? பெரியாரின் அடியொற்றி செயல்பட்டார் காமராசர் என்பதுதான். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காகப் பாடுபட்டார். மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளுக்கான தடைகளை தகர்ப்பதில் பெரியாருக்கு இருந்த அதே உணர்வு காமராசருக்கும் இருந்திருக்கிறது. பெரியாருக்கு இருந்த கருத்து வீரியம் காமராசருக்கும் இருந்திருக்கிறது. காமராசரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரது மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கொள்கைத் தாக்கம் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பள்ளிப் பருவத்திலேயே ‘மந்திர-தந்திரங்களை’ காமராசர் எதிர்த்திருக்கிறார். பீதாம்பர அய்யர் என்பவர் ‘மந்திரங்களை’ செய்ததை நேரில் பார்த்து அவர் எப்படி எல்லாம்...

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வனவாசி, சேலம் 24072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். நாள் : 24.07. 2017 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : பேருந்து நிலையம்,வனவாசி, சேலம் மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். தலைவர்,திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் வே.மதிமாறன், எழுத்தாளர். தோழர் காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அந்தியூர் 20072017

ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் தவுட்டுபாளையத்தில் 20072017 அன்று காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாக் கூட்டம் மணக்காட்டூர் 16072017

கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாக் கூட்டம் திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக மணக்காட்டூரில் 16072017 மாலை 6 : 30 மணியளவில் தொடங்கப்பட்டது. பெ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் கு.சண்முகப்பிரியன் முன்னிலை ஏற்க..சித்தோடு கமலக்கண்ணன் வரவேற்புரையாற்றினார். சண்முகப்பிரியன், வீரா கார்த்திக் ஆகியோரின் உரைக்குப் பின் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்ற பிரபாகரனின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. தோழர்கள் சித்தோடு யாழ் எழிலன், பிரபு, காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னையில் ஜூலை 15ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய பழ. கருப்பையா, ‘காமராசர் – திராவிடர் இயக்கத்தின் பிள்ளை’ என்று கூறினார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய எழுச்சியே காமராசரை காங்கிரஸ் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் உயர்த்தியது என்றும் அவர் கூறினார். அவரது உரை : காமராசர் பிறந்த நாள் விழாவை பெரியார் இயக்கங்கள் நடத்துவதுதான் மிகப் பொருத்தமானது. பெரியார் பெரிதும் மதித்த தலைவர் காமராசர். பெரியாரின் சமூகப் புரட்சி மகத்தானது. பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே முக்கியம் என்று கருதிய பெரியார், அதற்காக இந்தியாவின் ‘விடுதலை’கூட தள்ளிப் போகலாம் என்று முடிவெடுத்தார். அவர் அந்த சூழ்நிலையில் எடுத்த முடிவு சரியானது. 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி அறிவித்து, அடிப்படை உரிமைகளையே பறித்தார். அப்போது காமராசர், “நாட்டைக் காப்போம்; ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற...

வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்த காமராசர் விழா

வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்த காமராசர் விழா

சென்னை இராயப்பேட்டை வி.எம்.சாலையில் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் மாலை 5.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவையொட்டி காமராசர், பெரியார் படங்களும் அவர்களின் கருத்துகளோடு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. “பள்ளிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு பதிலாக காமராசர் வாழ்த்துப் பாட வேண்டும்” என்ற பெரியாரின் கருத்து அனைவரையும் ஈர்த்தது. ‘விரட்டு பண்பாட்டுக் கலைக் குழு’வினரின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. காமராசர், அம்பேத்கர், பெரியார் மற்றும் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்கள், பறை இசை, இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் நாடகங்கள் என்று இரண்டரை மணி  நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘காமராசரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பிலும், பழ.கருப்பையா ‘காமராசரின் சமூக நீதிப் புரட்சி’ எனும் தலைப்பிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘காமராசரும் பெரியாரும்’ எனும் தலைப்பிலும்...

தொட்டிப் பாலத்துக்கு காமராசர் பெயர் சூட்ட கழகம் கோரிக்கை

தொட்டிப் பாலத்துக்கு காமராசர் பெயர் சூட்ட கழகம் கோரிக்கை

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக கல்வி வள்ளல் காமராசர், சாதி ஒழிப்பு போராளி இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் பள்ளியாடி சந்திப்பில் 15-07-2017 சனிக்கிழமை மாலை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா தலைமையில், பள்ளியாடி சி.இளங்கோ முன்னிலையில் கழகப் பெரியார் பிஞ்சு ஆர்மலின் கடவுள் மறுப்பு வாசகத்துடன் துவங்கியது. கழகத் தோழர் தக்கலை விஸ்ணு வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தமிழ் மதி, பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் நீதி அரசர், தமிழ் நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர் மணிமேகலை,இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர், ஜெயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்புப் பேச்சாளராக மதிமுக மாநிலப் பேச்சாளர் அனல் கண்ணன் “காமராசரும் பெரியாரும்” என்றத் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மஞ்சுகுமார், பெரியார் தொழிலாளர் கழக மாவட்டச் செயலாளார் ஜாண் மதி, முன்னாள் மாவட்டத் தலைவர் சூசையப்பா,...

காமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”

காமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் இரா. உமாபதி, வரவேற்புரையில் காமராசர் விழாவுக்கு பகுதி வாழ் வணிகர்கள் காட்டிய  பேராதரவையும் விழாவுக்கு கடந்த 10 நாள்களாக ஒவ்வொரு பகுதியாக கடைகளில் துண்டறிக்கை வழங்கி, சிறு சிறு தொகையாக நன்கொடை திரட்டிய கழகத் தோழர்களின் களப் பணியையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார். “இந்த விழா இவ்வளவு சிறப்புடன் நடைபெறுவதற்கு இப்பகுதியில் உள்ள வணிகர்கள் நன்கொடைகளை வழங்கினர். எங்களுடைய பெரியார் படிப்பகம் அருகில் அடுத்தடுத்து, நாகாத்தம்மன், விநாயகன் கோயில்களும், இராமலிங்கசாமி கோயிலும் இருக்கின்றன. கோயில் நிர்வாகிகளும் கோயிலுக்கு வரும் பக்தர் களும் எங்களிடம் நட்பு பாராட்டுகின்றனர். இந்தக் கோயில்களுக்கிடையே படிப்பகக் கரும் பலகையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் எழுதும் பெரியார் சிந்தனைகளைப் படிக்கிறார்கள். ஒரு  நாள் கோயிலுக்கு வந்த அம்மையார் ஒருவர், “இங்கே நீங்கள் எழுதும் கருத்துகளை ஒவ்வொரு நாளும் படிக்கிறேன். எனக்கு நியாயமாகவே தெரிகிறது. எனக்கு பெரியார் நூல்கள் வேண்டும்” என்று...

திருப்பூரில் எழுச்சியுடன் நடந்த காமராசர் விழா

திருப்பூரில் காவல்துறை ஒலி பெருக்கியை சரியாக இரவு 10 மணிக்கு துண்டித்தது. அதன் பிறகு ஒலிபெருக்கி இல்லாமலேயே கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய காட்சி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய “பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா – பொதுக் கூட்டம்” 16.07.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் தெற்கு பகுதி செயலாளர் மா இராமசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளத்தூர் நாவலரசு கலைக் குழுவினர் சமூக நீதி பாடல்களை பாடி மக்களை எழுச்சியூட்டினர். அதன் தொடர்ச்சியாக,  திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் “கல்விவள்ளல் காமராசரின் வரலாறு மற்றும் தற்கால நீட் தேர்வு சீரழிவு” பற்றி சிறப்பாக பேசினார். முகில்ராசு (திருப்பூர் மாவட்ட தலைவர்) பொதுக் கூட்டத்திற்கான தொடர் களப்பணியில் ஈடுபட்ட தோழர்களை பாராட்டி, பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரை யாற்ற வந்திருந்த பேச்சாளர்களை வரவேற்றும், பொதுக் கூட்டத்திற்காக உதவிய பகுதி மக்களுக்கு நன்றி கூறியும்...

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் 16072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! திருப்பூர் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், கழகத் தலைவர் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 16.07.2016 ஞாயிறு நேரம் : மாலை 6 மணி. இடம் : இடுவம்பாளையம், திருப்பூர் சிறப்புரை: தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறும். மந்திரமல்ல தந்திரமே ! காவை. இளவரசன் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்சியும் நடைபெறும்.

கல்வி வள்ளல் காமராசர் 114 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிருட்டிணகிரி 24072016

24-7-2016 அன்று மாலை 6-30 மணியளவில், கிருட்டிணகிரி, ரவுண்டானாவில் அமைக்கப்பட்டிருந்த தோழர் பழனி நினைவுமேடையில், கிருட்டிணகிரி நுகர்வோர் சேவை சங்கத்தின் சார்பில் கல்வி வள்ளல் காமராசரின் 114ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நுகர்வோர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளருமாகிய இராஜேஷ் ஜெயராமன் தலைமை தாங்கினார். நுகர்வோர் சேவை சங்கத்தின் தலைவர் தட்டக்கல் கோவிந்தசாமி, செய்தியாளர் கிருஷ்ணமூர்த்திராவ், சக்தி மனோகரன் ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் காமராசரின் கல்வி சேவைகளை, தனது முதல் அமைச்சரவையை பார்ப்பனர் பங்கேற்காத அமைச்சரவையாய் அமைத்த பாங்கினை, அறநிலைய பாதுகாப்பு அமைச்சராகவும்ம், உள்துறை அமைச்சராகவும் தாழ்த்தப்பட்டோரை நியமித்த சமூகநீதி சிந்தனையையும், இந்த்துத்துவ மதவாத வன்முறையாளர்கள் தனது வீட்டுக்குத் தீ வைத்து சூறையாடியபோதும் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றுவதை அனுமதிக்காத துணிச்சலையும் விரிவாக எடுத்துரைத்தார். வழக்குரைஞர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்புரையாற்றார்....