Tagged: ஆயுத பூஜை கொண்டாடாதே

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

சென்னை-கோவையில் கழகம் மனு காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இதற்கான அரசாணை, நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் கடந்த அக்.5ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் கழகப் பொறுப்பாளர் இரா. உமாபதி, ஏசு, அய்யனார், வேழவேந்தன் உள்ளிட்ட 20 தோழர்கள் உடன் சென்றனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரசு அலுவலகங்களில் எந்தவித மத சடங்குகளை நடத்த கூடாது என அரசு பிறப்பித்த உத்தரவையும் நீதி மன்ற ஆணையையும் நடை முறைப் படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரி டமும் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமையில் நேருதாஸ், நிர்மல்குமார், சூலுர் பன்னீர் செல்வம்,  உக்கடம் கிருட்டிணன், ஜெயந்த், ஸ்டாலின், கிருத்திகா, விக்னேஷ், வினோத், இயல் ஆகிய தோழர்கள் மனு கொடுத்தனர். பெரியார்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                          அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி தலைவர்  திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 06102016 இதழ்

சரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்!

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே, அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும்,...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது – சென்னை திவிக மனு

அரசு அலுவலகங்களில் மத சார்புடைய ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாதென அரசு கொண்டுவந்த அரசாணையை கட்டாயம் அமலில் கொண்டுவர வலியுறுத்தியும், பூஜை நடைபெறும் அலுவலகங்களை கண்காணித்து தடுத்தும், மீறும் அலுவலகங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க கோரியும் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் 05 : 10 : 2016 புதன்கிழமை இன்று காலை 11 : 00 மணியளவில் காவல் ஆணையர் அலுவலகம் வேப்பேரியில் மனு கொடுக்கப்பட்டது . மேலும் அவர் செய்தியாளர்களிடம் அரசாணையை மீறி பூஜை நடைபெறும் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று பதிவு செய்தார். நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. உமாபதியுடன் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்துக் கொண்டனர் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

சென்னை மாநகர ஆணையரிடம் கழகம் மனு

அரசு ஆணைகளை புறந்தள்ளிவிட்டு, காவல் நிலையங்களை ‘இந்து’ வழிபாட்டு இடமாக்கி, ஆயுத பூஜை போடும் மதவாத நிகழ்வை நிறுத்தக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் மாநகர ஆணையரிடம் நேரில் தோழர்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக அரசு வெளியிட்ட ஆணை களையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.  மாநகர காவல் துறை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி கருத்துகளை பொறுமையுடன் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, துணை செயலாளர் சுகுமார், அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் பலரும் உடன் சென்றனர். பெரியார் முழக்கம் 29102015 இதழ்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகளை நிறுத்து! கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மன்னார்குடியில்: 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உள்பட அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி, புரோகிதர்களை அழைத்துவந்து மந்திர உச்சாடனங்கள் செய்து அரசு...

‘அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! – திருப்பூர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ! திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று காலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் ‘அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு’ என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் தலைமை தாங்கினார்.கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,தோழர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கழக தோழர்கள் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தோழர் சோழன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜையை கொண்டாடாதே – ஆர்ப்பாட்டம்

மாவட்ட தலை நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் ! நாள் : 19.10.2015 திங்கட்கிழமை. அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசு அலுவகங்களில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! என வலியுறுத்தி. ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுகளை அரசு அலுவலகத்தில் நடத்துவது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகும். அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொது இடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.அரசு அலுவலர்களின் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டை பொது இடத்தில் நடத்தினால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக இயங்குவது என்பது சந்தேகத்திற்கிடமாகிறது. அரசு அலுவலகங்களில் மதவழிபாடு சார்ந்த சின்னங்கள், அடையாளங்கள் வைக்கக்கூடாது என்று 1968 -ல் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போடாதே குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

13.9.2015 அன்று நடைபெற்ற கன்னியாகுமரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள கற்பனை கடவுளர் படங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அகற்றவும், ஆயுத பூஜைப் போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடவும், தடைவிதித்த அரசாணையையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அமுல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 25.9.15 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் தமிழ் மதி, நீதி அரசர், சூசையப்பா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இராம. இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். ‘அரசு அலுவலகங்களை பூஜை மடங்களாக்காதே’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட கழகம் சார்பாக மதியழகன், சாந்தா கலந்து கொண்டனர். குமரேசன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவையினரும், ஜான் விக்டர்தா° தலைமையில் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்....