அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போடாதே குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

13.9.2015 அன்று நடைபெற்ற கன்னியாகுமரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள கற்பனை கடவுளர் படங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அகற்றவும், ஆயுத பூஜைப் போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடவும், தடைவிதித்த அரசாணையையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அமுல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 25.9.15 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தோழர்கள் தமிழ் மதி, நீதி அரசர், சூசையப்பா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இராம. இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். ‘அரசு அலுவலகங்களை பூஜை மடங்களாக்காதே’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட கழகம் சார்பாக மதியழகன், சாந்தா கலந்து கொண்டனர். குமரேசன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவையினரும், ஜான் விக்டர்தா° தலைமையில் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர்கள் செ. போ°, ஜோ. தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்டப் பொருளாளர் மஞ்சுக் குமார் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.
தொடர்ந்து மாவட்ட தொழிலாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் இராம. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தலைவராக நீதிஅரசர், செயலாளராக சிவச்செல்வம், பொருளாளராக மோ. விஷ்ணு அறிவிக்கப்பட்டனர்.
குமரி மாட்டக் கழகத்தின் பொறுப்பாளர்கள்
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் தக்கலை ஜோகில்ஸ் அரங்கில் 6.9.15 அன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீதிஅரசர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜா. சூசையப்பர் தலைமை உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சதா வாழ்த்தி பேசினார். மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, ‘பெரியாரியல்’ என்ற தலைப்பில் 2 மணி நேரம் உரையாற்றினார். மதியம் அனைவருக்கும் உணவு வழங்கப் பட்டது. பின்னர், பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கன்னியா குமரி மாவட்டத்தில் ‘சாதீயம்’, ‘நாத்திகம்’ ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவாற்றினார்.
கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் – வழக்குரைஞர் வே. சதா, மாவட்டச் செய லாளர் – தமிழ் மதி, பொருளாளர் – மஞ்சுக் குமார், பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் நீதி அரசர், குழித்துறை ந. தலைவர் ஜே.கே. தாமஸ்.

பெரியார் முழக்கம் 01102015 இதழ்

You may also like...