ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

சென்னை-கோவையில் கழகம் மனு காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இதற்கான அரசாணை, நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் கடந்த அக்.5ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் கழகப் பொறுப்பாளர் இரா. உமாபதி, ஏசு, அய்யனார், வேழவேந்தன் உள்ளிட்ட 20 தோழர்கள் உடன் சென்றனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரசு அலுவலகங்களில் எந்தவித மத சடங்குகளை நடத்த கூடாது என அரசு பிறப்பித்த உத்தரவையும் நீதி மன்ற ஆணையையும் நடை முறைப் படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரி டமும் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமையில் நேருதாஸ், நிர்மல்குமார், சூலுர் பன்னீர் செல்வம்,  உக்கடம் கிருட்டிணன், ஜெயந்த், ஸ்டாலின், கிருத்திகா, விக்னேஷ், வினோத், இயல் ஆகிய தோழர்கள் மனு கொடுத்தனர்.

பெரியார் முழக்கம் 13102016 இதழ்

You may also like...