Tagged: ஆயுத பூஜை

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஈரோடு 25092017

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது.. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன.. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.. தோழர்.இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ராம. இளங்கோவன், வெளியீட்டுச்செயலாளர் ஆசிரியர்.சிவக்குமார் தோழர்.சண்முகப்பிரியன், தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர்.வேணுகோபால்,வடக்கு மாவட்டச் செயலாளர் தோழர்.சத்தியராசு,தோழர்.கோபி விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                      அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி  தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்   விண்ணப்பங்கள் தரவிறக்க

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

சென்னை-கோவையில் கழகம் மனு காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இதற்கான அரசாணை, நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் கடந்த அக்.5ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் கழகப் பொறுப்பாளர் இரா. உமாபதி, ஏசு, அய்யனார், வேழவேந்தன் உள்ளிட்ட 20 தோழர்கள் உடன் சென்றனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரசு அலுவலகங்களில் எந்தவித மத சடங்குகளை நடத்த கூடாது என அரசு பிறப்பித்த உத்தரவையும் நீதி மன்ற ஆணையையும் நடை முறைப் படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரி டமும் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமையில் நேருதாஸ், நிர்மல்குமார், சூலுர் பன்னீர் செல்வம்,  உக்கடம் கிருட்டிணன், ஜெயந்த், ஸ்டாலின், கிருத்திகா, விக்னேஷ், வினோத், இயல் ஆகிய தோழர்கள் மனு கொடுத்தனர். பெரியார்...

நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் இளைஞர் பலி

திருச்செங்கோட்டில் 13.10.2016 அன்று நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் வழுக்கி விழுந்து மூளைச்சிதறி சௌந்தர்ராஜன் எனும் இளைஞன் மரணமடைந்தார். சட்டவிரோதமாக நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பிற்கு காரணமான கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி திவிக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் வைரவேல், திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு,நாமக்கல் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகிய தோழர்கள் மனு அளித்தனர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                          அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி தலைவர்  திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 06102016 இதழ்

சரஸ்வதி பூஜை-ஆயுத பூசை ஆபாசங்கள்!

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே, அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல் பெண் மான் உருவம் எடுத்து ஓடவும்,...

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

மதச் சார்பற்ற நாட்டில் மத நிகழ்வுகளுக்கு அரசு அலுவலகங்களில் இடமிருக்கக் கூடாது. ஆனால், அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டக் கூடாது என்று அண்ணா முதல்வரானவுடன் தி.மு.க. ஆட்சியில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணைகள் மீறப்பட்டு, கடவுள் படங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. பல்வேறு மதத்தினரும், மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் பணியாற்றும் அலுவலகங்கள், கோயில்களாகவோ பஜனை மடங்களாகவோ மாற்றப்படக் கூடாது. இந்த நிகழ்வுகள் மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் பரப்புரைக்கு மறைமுக வழியமைக்கும் ஆபத்தும் அடங்கியுள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாட் டத்தை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி,அக்டோபர் 7 ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   – தலைமைக் கழகம்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

7.10.2013 அன்று அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகளை தடை அமுல்படுத்தக் கோரி காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு காலை 11 மணிக்கு கழகம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்களித்த பொறுப்பாளர்கள் இனியன், நேரு தாஸ் , பால முரளி, அன்ரூஸ் , பாலகிருஷ்ணன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40 தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசு உரையாற்றினார். வெண்பா முதலாம் ஆண்டு பிறந்த நாள் கோவை மாநகர மாவட்டக் கழகத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்–கிரிஜா இணையர் மகள் வெண்பாவின் முதலாமாண்டு பிறந்த நாள் (7.10.2013 அன்று) மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரி சென்னையில் அக். 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு அமைப்புகள் மத அடையாளங்கள் இன்றி இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். எந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மதச் சடங்குகளை தடைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதில் அடங்கியுள்ள மூடநம்பிக்கைகளை சமுதாய இழிவை கருத்துகளாக முன் வைக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை. அரசு நிறுவனங்கள் பல்வேறு மதநம்பிக்கை யாளர்களுக்கும், கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு மதம் தொடர்பான சடங்குகளை நடத்துவது எப்படி நியாயமாகும்? இந்த கேள்வியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளே கேட்டிருக்கின்றன. தாழையூத்து...

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜைகளை நிறுத்து: களமிறங்கிய கழகத்தினர் கைது!

அரசு அலுவலகங்கள் – காவல்நிலையங்களில் ஆயுத பூஜைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் களமிறங்கியது. ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மயிலாடு துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவோடு சரசுவதி பூஜை கொண்டாட்டம் விழாவாக நடத்தப்பட்டதை எதிர்த்து களமிறங்கிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேட்டுப் பாளையத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கிய தோழர்கள் மீது பா.ஜ.க. ஆர்.எஸ் .எஸ் . காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டம் உருவானது. கழகத்தினர் மீது காவல்துறை பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. செய்தி விவரம். மயிலாடுதுறையில்: மயிலாடுதுறையில் கழகத் தோழர்கள் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்தவோ, கடவுள் படங்கள் வைப்பதோ கூடாது என்ற அரசு ஆணை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அனைத்து அலுவலகங்களுக்கும் காவல்நிலையங்களுக்கும் மாவட்ட தலைவர் மகாலிங்கம்...

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மதச் சடங்குகளை கொண்டாடக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள் வழங்குதல், பரப்புரைகள் என்று பல்வேறு களங்களில் கருத்துகளைக் கொண்டு சென்றதோடு, அலுவலகங்களுக்கும் அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தோழர்கள் வேண்டுகோள் கடிதங்களையும் கையளித்தனர். இந்த களச் செயல்பாடுகளுக்காக மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற ஊர்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வெளி வந்துள்ளனர். மதவெறி சக்திகள் அரசியலில் தலைதூக்கக் கூடாது; அது ஆபத்தானது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பேசி வந்தாலும்கூட, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் மதச் சடங்குகள் ஊடுருவி நிற்பதைக் கண்டிக்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பு, மத உணர்வுகளோடு இணைக்கப் படுகிறது. மத உணர்வுகள் ஜாதியத்தோடு நெருங்கி நிற்கிறது. அது தலித்,...

திருப்பூர் S.P அலுவலகத்தில் நடந்த ஆயுத பூஜையை தடுத்து நிறுத்தி பார்ப்பானை துரத்திய தோழர்கள்

திருப்பூர் S.P. அலுவகத்திற்கு நேற்று மாலை கொடியேற்றுவிழா அனுமதிக் கடிதம் கொடுக்க திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு தோழர்களுடன் சென்றிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பான் ஒருவனை காவல்துறை அலுவலகத்திற்குள் அழைத்துச்செல்வதை கண்ட தோழர் முகில்ராசு அவர்கள் அலுவலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த பார்ப்பான் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். நேற்றைக்கு முந்தினம்தான் காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவகங்களில் மதவழிபாடு செய்வது தமிழக அரசாணைக்கு எதிரான செயல் எனவே அரசாணைக்கெதிரான செயலை செய்யக்கூடாது என திராவிடர் விடுதலைக் கழகம சார்பில் திருப்பூரில் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதனையும் மீறி காவல்துறை அரசாணைக் கெதிராகவும், இந்திய மதசார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் செயல்பட்ட திருப்பூர் S.P. அலுவலக அதிகாரிகள் ஏற்பாடு செய்த ஆயுத பூஜைக்கு தோழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட பொறுப்பாளர் தோழர்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! – கோவை

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்.! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! மதச்சர்ப்பின்மை கொள்கையை கேள்விக்கு உட்படுத்துகிற அரசையும் அரச அதிகாரத்தையும் கண்டித்தும் 1. தமிழக அரசு குறிப்பாணை எண்:7553/66 29.4.1968 2 .தமிழக அரசு செயலாளரின் கடித எண். 8472/LOB/94-1 18.8.1994 3. தலைமை காவல் இயக்குனரின் கடித எண். 96243/Bldgs(1)/2005 4. தமிழக அரசு செயலாளரின் கடித எண்.15844/4/2010 22.4.2010 ஆகிய வற்றை உதாசீனப்படுத்தி மத சர்ப்பின்மைக் கொள்கைக்கு முரணாக பல்வேறு அரசுத்துறை,பொதுத்துறை அலுவலகங்களில் மத விழாக்களும்,வழிபாடுகளும்,பூஜைகளும் அண்மைக் காலங்களில் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றது மதச்சார்பற்ற அரசு அலுலலகங்களில் மத வழிபாடுகளை நடத்துவது மேற்கண்ட உயர்அதிகாரிகளின் அரசாணைகளை அவமதிக்கும் தன்மையாகும் அரசின் கொள்கைகளுக்கும் விரோதமாகவும் அமையும் ஆகவே மேற்க்கண்ட அரசாணையை நடைமுறை படுத்தாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கழகப் பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, புறநகர் மாவட்ட தலைவர்...

மன்னார் குடியில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் ஆர்ப்பாட்டம் !

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி 19.10.2015 திங்கட்கிழமை காலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அரசு அலுவலகங்களில் மதசார்புடைய வழிபாடுகள் மற்றும் ஆயுத பூஜை கொண்டாட்டங்களை தடுக்கக்கோரியும், அவற்றிக்கு எதிரான அரசு உத்தரவுகளைநடைமுறைப்படுத்தக்கோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலகங்களில் எவ்வித மதவழிபாடுகளும் ஆயுத பூஜை கொண்டாட்டங்க-ளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு காவல்துறை உட்பட அனைத்து அலுவலகங்களுகும் ஆணைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசு ஆணைகளை முறையாக நடைமுறை படுத்தப்படாமல் அவற்றிக்கு எதிரான செயல்பாடுகள் அலுவலகங்களில் மிகுந்துள்ளன. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கடவுள் படங்கள் சாமியார்களின் படங்கள் சிலைகள் வழிபாட்டுபொருட்கள் வைக்கப்பட்டு கோவில்களில் நடப்பதுபோல் சூடம்கொளுத்துதல், சாம்பிராணி புகைபோடுதல் தீபாராதனை போன்றவைகள் நடந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆயுதபூஜை நேரங்களில் மிகவும் ஆடம்பரமாக ஒலிபெருக்கிகளை வைத்து வாழைமரம் கட்டி புரோகிதர்களை அழைத்துவந்து...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! – ஈரோடு தெற்கு

ஆர்ப்பாட்டம் ! அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடாதே ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19.10.2015 அன்று மாலை 5 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தின சாமி தலைமை தாங்கினார்,கழக மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் கோபி ராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரசு அலுவகங்களில் மத வழிபாடுகளை நடத்தாதே ! மதசார்பற்ற நாட்டில் அரசில் ஆயுத பூஜையை கொண்டாடாதே ! தமிழக அரசாணைக்கெதிராக செயல்படாதே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் விநாயக மூர்த்தி,தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் குமரகுரு,தோழர் கோபி குணசேகரன்,மற்றும் ஆதரவு இயக்க தோழர்கள்...

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை) – இந்து மதப் பண்டிகைகள் நூலிலிருந்து

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை.  கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர்  கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து  கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே , அவர்கள்  படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்”  என்று சொல்லிக்கொண்டு இருக்கின் றார்கள்.   முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கிய தையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக் கதை களின்படியே மிக்க  ஆபாசமானதாகும்.  அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக் கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு , அந்தப் பிரம்மனாலேயே  மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள்...