கலைநிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள், பொதுக்கூட்டங்கள் கழகத் தோழர்களின் எழுச்சி செயல்பாடுகள்

ஈரோடு (வடக்கு) கோபி மாவட்டக் கழகம் பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்வுகள்:
அம்மாபேட்டை ஒன்றியம்: குருவரெட்டியூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் கழகத்தின் மாவட்டத் தலைவர் நாத்திகசோதி தலைமையில் மாலை அணிவித்தனர். நம்பியூர் ஒன்றியம்: நம்பியூர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகத்தின் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் மாலை அணிவித்தனர். புலவன் சிறை பகுதியில் நடராஜ் தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இரங்கநாதபுரம் பகுதியில் அமைக்கபட்டிருந்த பெரியார் படத்திற்கு இரமேசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. சிறுவலூர்: கோபி ஒன்றியம் பகுதியில் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறுவலூர் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
கொளப்பலூர்: கொளப்பலூர் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பெரியார் படத்திற்கு கொளப்பலூர் பேரூராட்சித் தலைவர் அன்பரசு ஆறுமுகம் மாலை அணிவித்தார். தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அயலூர் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு திமுக தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சரண்யா அன்பரசு தலைமையில் மாலை அணிவித்தனர். கோபி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த பெரியார் படத்திற்கு வழக்குரைஞர் பிரிவு செயலாளர் செகதீஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்தனர். கோபி பெரியார் சிலைக்கு சசி, பிரணீதா, சரண்யா, மணிமொழி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து சமூக நீதிநாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. ல. கள்ளிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு ஈஸ்வரமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்தனர்.
கோட்டுபுள்ளாம்பாளையம்: பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடியினை மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வகுமார் ஏற்றி வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அளுக்குளி: அளுக்குளி பகுதியில் அமைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு தங்கம் தலைமையில் மாலை அணிவித்தனர். T.N.பாளையம் ஒன்றியம்: காசிபாளையம் பகுதியில் வேலுச்சாமி தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
சத்தி ஒன்றியம்: புது ரோடு அண்ணா நகர் பகுதியில் சிதம்பரம் தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர். அரசு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. சத்தியமங்கலம் பகுதியில் பழைய பேருந்து நிலையம், எஸ்.ஆர்.டி கார்னர் ஆகிய பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் மாலை அணிவித்தனர். விசிக மாவட்டச் செயலாளர் தம்பிராஜன், புஇமு பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர் ஸ்டாலின் சிவக்குமார், விசிக மணிமேகலை, தலித் விடுதலைக் கட்சி சகுந்தலா, கழகத்தின் சார்பில் சசி ஆகியோர் உரையாற்றினார். மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் நன்றி கூறினார்.
முத்துசாமி- சித்ரா ஆகியோரின் இல்லத்தில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் தோழர்கள் ரமேஷ், மயில்சாமி, நடராஜ், கலைச்செல்வன், காமராஜ், முருகேஷ், சந்திரன், பழனிச்சாமி, அருளானந்தம், ஜெகநாதன், ஈஸ்வரமூர்த்தி, தயாநிதி, செந்தில்குமார், ஜெகதீஸ்வரன், சசி, கிருஷ்ணமூர்த்தி, தங்கம், கருப்பணன், சித்தா பழனிச்சாமி, வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் முத்து, தமிழரசு, சிதம்பரம் சூர்யா, தனசேகர், தேவராஜ, மோகன், நஞ்சப்பன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஈரோடு தெற்கு: மாவட்டக் கழகம் சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமூகநீதிக் கூட்டமைப்பு முன்னெடுத்த சமூகநீதிப் பேரணி தந்தை பெரியார் சிலை வளாகத்தில் துவங்கி ஈரோடு மணிக்கூண்டு வழியாக பெரியாரின் நினைவு இல்லத்தில் நிறைவுற்றது. திவிக, தி.க, தபெதிக, ஈரோடு மக்கள் இயக்கம் மற்றும் தோழமைக் கட்சிகள் பங்கேற்றன.
கும்பகோணம்: நாச்சியார் கோவில் பேருந்து நிலையத்தில் கழகத்தின் சார்பில் பெரியார் சிலைக்கு சோலை மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்தனர். கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக காலை 8.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் பெரியார் சிவா, அறிவியல் மன்ற அமைப்பாளர் அறிவழகன், பெரியார் பிஞ்சு பாடகர் திராவிட மகிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி: தந்தை பெரியார் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சித.திருவேங்கடம் தலைமையில் கழக மாணவர் அணி பொறுப்பாளர் சியாம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். கழகப் பொறுப்பாளர்கள் உதயகுமார், பெரியசாமி, கோவேந்தன், ஜெயச்சந்திரன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், திமுக நகரச் செயலாளர் செ.சேகர், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ்.வேலுச்சாமி, விசிக நகரச் செயலாளர் பூ.தினேஷ் குமார் மற்றும் தி.க மாவட்டத் தலைவர் வை.சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மதுரை: மாவட்டக் கழகம் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர்கள் முருகேசன், வாசுகி, சத்தியமூர்த்தி, வேங்கைமாறன் மற்றும் காமாட்சி பாண்டி கலந்து கொண்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழ் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பரிதி கலந்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி: மாவட்டக் கழகம் சார்பில் கடுவனூரில் காலை 10 மணி அளவில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர். சங்கராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு 11 மணி அளவில் மா.குமார் ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. செந்தமிழ்பட்டு கிராமத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சே.வே. ராஜேஷ் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பாக்கம் புதூர் கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர்கள் இரா.கார்மேகம் ரிஷிவந்திய ஒன்றிய அமைப்பாளர், ராமலிங்கம் மக்கள் அதிகாரம், மாவட்டச் செயலாளர் தி.க சண்முகம், அ. ஏழுமலை கடுவனூர் ஊராட்சி மன்றத் தலைவர், மு.நாகராஜ், கி.ஆனந்தன், கு.பாபா சு.வல்லரசு, து. நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 01102026

You may also like...