தேர்தல் பரப்புரையில் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை இயக்கங்களை நடத்தினர்.
கடலூர்: புவனகிரி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் அவர்களை சந்தித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக பயனாடை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். திண்டிவனம் தொகுதி விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கடலூர் சிவா தலைமையில் உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), பொன்ராஜ், சத்யா, லதா கலைக்குழுவினர் மற்றும் வீரா, அசோக் ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரகுமாரை ஆதரித்தும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை: ஏப்ரல் 16, 2026 முதல் ஏப்ரல் 19 வரை 4 நாள் புதுக்கோட்டை சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்களை ஆதரித்து கழகம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் செய்து மக்களிடையே ஓட்டுகளை சேகரித்தனர். உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) தலைமையில் சத்யா, லதா ஆகியோர் பாடல்கள், அரசியல் நையாண்டி மூலம் பரப்புரையை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டக் கழகத் தோழர் சிவா, கோபி (திருவல்லிக்கேணி பகுதி தலைவர்), சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்), அசோக், வீரா, இரண்யா ஆகியோர் பரப்புரையில் பங்கேற்றனர்.
மேட்டூர்: சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேச்சேரி கிழக்கு ஒன்றியம் ஓலைப்பட்டி ஊராட்சி, சிந்தாமணியூர், மேச்சேரி பேருந்து நிலையம், சந்திரம்மாள் கடை பேருந்து நிறுத்தம், மேட்டூர் ஆர்.எஸ், தங்கமாபுரி பட்டினம், சேலம் கேம்ப், தேசாய் நகர், எம்.காளிப்பட்டி ஊராட்சி, மூர்த்திப்பட்டி ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி அவர்களுக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் கடந்த 10 நாட்களாக வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திமுக: சேலம் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகன், பிரகாஷ் மேலவை பிரதிநிதி, சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் கணேசன், சிவகுமார், கோபாலகிருஷ்ணன், சேகர், சுப்ரமணி, தேவராஜ், பாஸ்கர், பெருமாள் வெங்கட சரவணன் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர், சக்கரை முருகன், நேசமணி ஒன்றிய மாற்றுத்திறனாளி அணி, முருகேசன், தமிழ்வாணன் கிளைச் செயலாளர், அர்த்தனாரி, தமிழரசன் இளைஞர் அணி, ராமன், கல்பனா ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர், கோபாலகிருஷ்ணன் பூத் பொறுப்பாளர், ராஜ்குமார் பூத் பொறுப்பாளர், ரமேஷ் பூத் பொறுப்பாளர், நிஷாந்த் பூத் பொறுப்பாளர். மூர்த்திப்பட்டி தனபாலன், திவாகர் கிளைச் செயலாளர், கழகத் தோழர்கள் ஏற்காடு பெருமாள், சிந்தாமணியூர் ஜெயபிரகாஷ், தங்கதுரை, கே.ஆர்.தோப்பூர் கண்ணன், பிரபாகரன், முத்துராஜ், ஆத்தூர் கணபதி, கவியரசு, ஏற்காடு கார்த்திகேயன், தேவபிரகாஷ், ஈழ பிரபாகரன், நாகராஜ், கோகுல், புகழேந்தி, மசக்காளியூர் அர்த்தனாரி, புக்கம்பட்டி கணேசன்,ஹரி, தினேஷ், சித்திக், அறிவழகன், சந்திரசேகரன், பேரறிவாளன், தமிழருவி,உமாசங்கர் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

எடப்பாடி: சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி மத்திய ஒன்றியம் அங்கிரெட்டியூர், சொக்கையன் காட்டுவளவு, ஈஷா பள்ளி, புதுப்பேட்டை, மசக்காளியூர், பனங்காடு, மூலக்காடு, அருவங்காடு, தானாபதியூர், சாணாரப்பட்டி, சப்பாணிப்பட்டி, லெனின் நகர் பகுதிகளில் ஏப்ரல் 17,19 வரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் காசி அவர்களுக்கு வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். திமுக: 10-வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, வார்டுச் செயலாளர் முத்துசாமி, குமார், பூபதி, கோவிந்தன், பழனிசாமி 1-வது வார்டு துணைச் செயலாளர், மாது, கழக சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அவினாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் “மருத்துவர் கோகிலாமணி” அவர்களை ஆதரித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி 15.04.2026 புதன்கிழமை அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கந்தம்பாளையம், நாதம்பாளையம், வெள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை செலுத்தி வரும் “ஸ்டாலின் ஆட்சி” மீண்டும் தொடர மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அவினாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் “மருத்துவர் கோகிலாமணி” அவர்களை ஆதரித்து, வெற்றி பெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கழகப் பொருளாளர் துரைசாமி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட கழக மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பபுகளைச் சார்ந்த தோழர்கள் பலர் பங்கேற்றனர்.

16.04.2026 அன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக போட்டியிடும் தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் என். தினேஷ்குமார் அவர்களுக்கு காலையில் தொடங்கி ராயபுரம் பகுதி, அணைப் பாளையம், மரக்கடை நிறுத்தம், கொங்கணகிரி, மாஸ்கோ நகர், பிவிஜி நகர், பெரியார் சிலை, பழைய பேருந்து நிறுத்தம், சந்தைப்பேட்டை, காட்டுவளவு, தென்னம்பாளையம், பிரிச்சிபாளையம், புஷ்பா நகர், ராக்கியாபாளையம், நல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு கழகம் சார்பாக வாக்கு சேகரித்தனர்.

கோவை: தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஆதரவாக காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 100 அடி ரோடு சிவானந்த குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கோவை மாநகர கழகத் தோழர்கள் வெங்கட், நிர்மல் குமார், இராஜலட்சுமி , சதீஷ், சத்தியமூர்த்தி, கிருஷ்ணன் கலந்து கொண்டனர். வேட்பாளர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு கழக வெளியீடுகளை வழங்கி வெற்றி பெற வாழ்த்தினர்.

சூலூரில் மதச்சார்பற்ற கூட்டணி தேர்தல் பிரசாசாரத்தில் வேட்பாளர் தளபதி முருகேசனை ஆதரித்து பன்னிர்செல்வம், பொங்கலூர் கார்த்தி, தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
மக்களிடம் துண்டறிக்கைகளை கொடுத்து ஸ்டாலின் ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்று எடுத்துரைத்தனர்.

புதுச்சேரி: ஏப்ரல்-6,7 இரண்டு நாட்கள் புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் விக்னேஷ் கணேசன், செந்தில் முருகன் ஆகியோரை ஆதரித்து சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் தோழர்கள் பரப்புரையை மேற்கொண்டனர். பாடகர் பொன்ராஜ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, கடலூர் சிவா, கோபிநாத், திருவல்லிக்கேணி பகுதி தலைவர், சூர்யா( திருவல்லிக்கேணி பகுதி அமைபாளர்), வீரா, அசோக், இரண்யா ஆகியோர் பங்கேற்றனர்.

மயிலாப்பூர்: தமிழ் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் உரிமை முன்னணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கம், இந்திய ஒற்றுமை இயக்கம் ஆகிய இயக்கங்கள் இணைந்து, “மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு – 2026” எனும் பெயரில், ZEROBJP (0/234) எனும் இலக்கோடு, தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில் திமுக வேட்பாளர் த. வேலு அவர்களை ஆதரித்து ஒரு வார தொடர் பரப்புரை நடந்தது. தோழர்கள் செந்தில் (இளந்தமிழகம்), சுகுமார் (திவிக), வெங்கடேசன் (திமுக தென்மேற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்) ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

திருவள்ளுவர் சாலை, விசாலாட்சி தோட்டம், காமராஜர் சாலை, சத்தியமூர்த்தி நகர், ஆலையம்மன் கோயில், வோல்டாஸ், மந்தைவெளி சந்தை, முல்லை மாநகர், டுமீல் குப்பம், குயில் தோட்டம், ராதாகிருஷ்ணபுரம், பக்ஸ் சாலை, பல்லக்கு மாநகர், லஸ் கார்னர், ரோட்டரி நகர் ஆகிய இடங்களில் 14 கூட்டங்கள் நடத்தப்பட்டன. தோழர்கள் ஜாகிர் – கதிர் ஆகியோரின் நையாண்டி நிகழ்ச்சி, நல்ல வரவேற்பைப் பெற்றது. பெஅமஇ தோழர்களின் பறையிசை கவனத்தை ஈர்த்தது.

திவிக சார்பாக தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், இணையதள பொறுப்பாளர் விஜய் குமார், தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, கழகப் பேச்சாளர் மகிழவன் ஆகியோரும், நிமிர்வோம் வாசகர் வட்டம் சார்பாக, ஒருங்கிணைப்பாளர் ர.பிரகாசு, அமைப்பாளர் (தெ.செ) இம்மேனுவல் துரை ஆகியோரும், தோழமை இயக்கங்களின் சார்பில் தமஉமு ஒருங்கிணைப்பாளர் தியாகு, மனோகரன் (பாவசஅ), ஜெயகிருஷ்ணன், தாமரை (புஇமு), பாலன் (ததேமமு), பேராசிரியர் குழந்தை, மேரி லில்லி பாய் (இஒஇ), சமந்தா (ததேவிஇ), தெய்வீகன் (மஅ), தம்பி மண்டேலா (மகுஇ), வே. பாரதி (ததேவிஇ), மீ. த. பாண்டியன் (தமபக), தாமஸ் பிராங்கோ (அஇமஇ), ரமணி (சாஒமு), அருண் சோரி (ததேமமு) ஆகியோரும் கருத்துரையாற்றினர்.

மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன், மனோகர், ஜெயந்தி, புருஷோத்தமன், தாமரை, பாரி சிவா, ஏசுகுமார், பிரகாஷ் மாஸ்டர், தமிழ்ச்செல்வன், முழக்கம் உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

ஏப்ரல்-15, மாலை 6 மணிக்கு, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் அவர்களை ஆதரித்து, கோபாலபுரம் பகுதியில், மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன், அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், துணைச் செயலாளர் இராவணன், இளைஞரணி அமைபாளர் ப. அருண், தோழர்கள் சுகுமார், சு. பிரகாஷ், ப்ரவீன் ஏ.கே.எஸ் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் முழக்கம் இதழ் 23042026

You may also like...