பெரியார் தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்
நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), நெகிழி பைகள் ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி பகுதியில் பெரியாரிய தொண்டர் சுரேஷ் நடத்தி வரும் ‘அய்யா உணவகத்தில்’ டிசம்பர் 31 முதல் வாழை இலை, துணிப்பை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து மற்றும் கழகத் தோழர்கள் நேரில் சென்று வாழ்த்தி வரவேற்றனர். பெரியார் முழக்கம் 03012019 இதழ்