தஞ்சை மாவட்டம் வடசேரியில் ஜாதிவெறியர்களின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம்.
தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கழக தலைவர் அறிக்கை ! தமிழ்நாட்டில் மிகவும் வெளிப்படையாக செயல்படும் ஜாதிவெறி சக்திகள்! கொஞ்சமும் அச்சமின்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஜாதிவெறியர்கள் ! நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தங்கள் ஜாதி வெறியை பரப்ப பயன்படுத்தும் அவலம் ! தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஜாதிவெறி சக்திகளின் ஜாதிவெறி நடவடிக்கைகளையும், இதனை கண்டு கொள்ளாத தமிழக அரசுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. சமீப காலமாக தமிழ் நாட்டில் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைகள் நவீன ஊடகங்கள் வழியாக மிகவும் வெளிப்படையாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ‘வாட்ஸ் அப்’ எனும் நவீன தொடர்பு ஊடகம் மூலம் பொறியாளர் கோகுல்ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் எனும் ஜாதிவெறியன், ஜாதி வெறியூட்டும் வகையிலும், காவல்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசி அதனை அனைவரும்...
