Tagged: தலையங்கம்

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

தலையங்கம் இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா கொண்டாடுவோரே – பதில் கூறுங்கள்!

பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா இப்போது கொண் டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – சங் பரிவாரங்கள் – வைணவப் பார்ப்பனர்கள் – இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப்  போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார். இத்தகைய...

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

தலையங்கம் தமிழக அரசியல் குழப்பம்: கழகத்தின் நிலைப்பாடு

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒவ்வொரு நாளும் திடீர் திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுதலையே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் கட்சிகளில் அதன் ஒற்றை சர்வாதிகாரத் தலைமையில் வெற்றிடம் உருவாகிடும்போது கட்சி சிதறுண்டுதான் போகும். அணி சேர்க்கைகளுக்கு ஆதார சுருதியாக அதிகார மய்யங்களைக் கைப்பற்றுதலே இருக்குமே தவிர, கொள்கைப் பிரச்சினைகளுக்கு வாய்ப்பே இல்லை. அ.இ.அ.தி.மு.க. கட்சியே தமிழக பா.ஜ.க. தான். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மத அடையாளம் தந்து, கட்சி நிகழ்வுகளையே மதச் சடங்குகளாக மாற்றிய கட்சி அது. பகுத்தறிவு சிந்தனைக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, அக்கட்சியில் துளியும் இடமில்லை. கட்சி அமைப்பும், ஜாதிய கட்டமைப்புக் குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் பிளவுபட்டு நிற்கும் அணிகளில் எந்த அணி கொள்கைக்கானது என்ற ‘தேடல்களில்’ இறங்குவது, ‘இருட்டறைக்குள் கருப்புப் பூனையை’த் தேடும் கதையாகவே இருக்கும். பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல் களமும், பொது வாழ்க்கை நேர்மையும் முற்றிலும் வேறானது. தனது கொள்கைகளை முன்னெடுத்துச்...

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

தலையங்கம் ‘டிரம்ப்’பின் இந்துத்துவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையின் போது ‘இந்துத்துவா’ கொள்கை தனக்கு பிடிக்கும் என்றார். தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகளும், அமெரிக்கா வாழ் ‘இந்துத்துவ’ சக்திகளும் தங்களின் மதவாத கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துவிட்டதில் ஆனந்தக் கூத்தாடின. எதிர்பார்த்ததுப் போலவே பதவிக்கு வந்தவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பு நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார். இராக், சிரியா, லிபியா, ஏமன், சூடான் மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமிய) அகதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்த ‘மதவெறி’ ‘வகுப்புவாத’ செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் பெண் அரசு வழக்கறிஞர் சாலியேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, “இது சட்டப்பூர்வமான ஆணையல்ல” என்று துணி வுடன் கூறினார். இந்தியாவில் கொழுத்த ஊதியத்தில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் நமது அரசு வழக்கறிஞர்களிடம் (பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான்) இப்படி நெஞ்சுரத்துடன் அரசை எதிர்க்கும் நேர்மையை கனவில்கூட கற்பனை செய்ய முடியாது. அதேபோல் குடியேற்றத் துறை இயக்குனர்  டேனியல் ராக்ஸ்டேல் என்பவரும் எதிர்ப்பை...

தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு

தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு

குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர் இனப் படுகொலையில் ‘நரோடா பாட்டியா’ என்ற அகமதாபாத் புறநகர் பகுதியில் 97 இஸ்லாமியர்கள் உயிருடன் நெருப்பில் போட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மை யோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இதில் உண்மையான குற்றவாளிகளை மறைத்து கண்துடைப்புக்காக வழக்குகளைப் பதிவு செய்தது மோடி ஆட்சி. உச்சநீதிமன்றம் தலையிட்டு, முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 32 குற்றவாளிகளை அடையாளம் கண்டது. அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். ஜோட்ஸ்னா யாக்னிக் என்ற பெண் நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவரும், அவருக்கு மிக நெருக்கமானவர்...

தலையங்கம் இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு...

தலையங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தின் பாராட்டுக்குரிய அறிவுறுத்தல்

தலையங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தின் பாராட்டுக்குரிய அறிவுறுத்தல்

மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜாதி வெறி கொலைகளுக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய தாகும். மதுரை மாவட்டம் மதிச்சியம் காவல் சரகப் பகுதியில் வசிக்கும் சூர்யபிரகாஷ் என்ற இளைஞர், ஜாதி மறுப்பு திருமணம் செய்து திருமணத்தையும் பதிவு செய்துள்ளார். குடும்பத்துடன் வாழத் தொடங்கிய அவருக்கு பெண்ணின் சகோதரரும் தந்தையும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். மதுரை நகர காவல் நிலையமும் பாதுகாப்பு தர முன் வரவில்லை. உயிருக்கு உரிய பாதுகாப்பு தர, மதுரை மாநகர காவல் பிரிவுக்கு ஆணையிட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.  மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி எஸ். விமலா, கடுமையான மொழிகளில் காவல்துறையை எச்சரித்துள்ளது. ஜாதி எதிர்ப் பாளர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ‘உச்சநீதிமன்றம்’ லதாசிங் வழக்கில் வழங்கிய அறிவுறுத்தலை நீதிபதி காவல்துறையிடம் எடுத்துக் காட்டினார். “ஜாதி மறுப்பு மத மறுப்பு திருமணங்களை தேச நலன் கண்ணோட்டத்தில்...

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

தலையங்கம் முக்கியத்துவம் பெறும் தீர்ப்பு!

7 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மதச்சார்பின்மை குறித்து அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அபிராம் சிங், ‘இந்து ராஜ்யம்’ அமைப்பேன் என்று கூறி வாக்கு கேட்டார். மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது தேர்தல் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு (பிரிவு 123(3)) எதிரானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியது. 1995இல் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு வந்தபோது வழக்கை விசாரித்த ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இந்துமதம் அல்லது இந்துத்துவா என்பது இந்திய உபகண்டத்தில் மக்களின் வாழ்க்கை நெறி, அதை மதமாகக் கருத முடியாது” என்று கூறிவிட்டது. சங்பரிவாரங்கள் ஆனந்தக் கூத்தாடின. அன்றிலிருந்து இன்றுவரை “இந்து என்பது வாழ்க்கை நெறி” என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் தரவேண்டும் என்று சில...

தலையங்கம் இதுதான் பார்ப்பனர்களின் தகுதி திறமையா?

மக்களின் புழக்கத்தில் 80 சதவீதமாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவை செல்லத் தக்கதல்ல என்று பிரதமர்  மோடி ஒரே இரவில் அறிவித்தபோது இப்படி ஒரு அதிர்ச்சி இந்தியாவின் ‘கருப்பு பொருளாதார சந்தைக்கு’ தேவைதான் என்றே நாம் கருதினோம். நாட்டின் பொருளா தாரத்தை சர்வதேச சந்தைக்கு திறந்து விடும் உலக மயமாக்கல் கொள்கைக்குப் பிறகு அந்நிய முதலீட்டுச் சுரண்டல்கள் கருப்புப் பொருளாதார சந்தைகள் பெருகி, அரசியல் கட்சிகள், பெரும் தொழிலதிபர்கள், ‘பகாசுர கம்பெனிகள்’ கொழிக்கத் தொடங்கின. பார்ப்பன பனியா வர்க்கம் மேலும் தனது அதிகாரத்தை வலிமைப்படுத்திக் கொண்டது. இந்த நிலையில் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை கருப்புப் பணச் சந்தையை முடக்குமா என்ற சந்தேகத்தை பொருளியல் நிபுணர்கள்  எழுப்பினார்கள். அவர்களின் கேள்விகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஆனாலும்கூட புழக்கத்திலுள்ள போலி ரூபாய் நோட்டுகளை இது கட்டுப்படுத்தும் என்ற அளவில் இந்த முயற்சி வரவேற்கப்பட்டது. இப்போது இந்த அதிரடியால் அவதிக்குள்ளாகி...

தலையங்கம் கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதற்கு அண்மையில் தமிழ்நாடு தேர்வாணை யம் நடத்திய ‘குரூப்-4’ தேர்வே சரியான சாட்சி. 5,451 காலி இடங் களுக்கு தேர்வு எழுதியவர்கள் 15 இலட்சத்து 64 ஆயிரத்து, 471 பேர். 12ஆம் வகுப்புதான் கல்வித் தகுதி என்றாலும், பொறியியல் பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு 2014இல் நடத்திய தேர்வில் 3000 பேர் தேர்வு எழுதினர். 2015இல் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நடந்து முடிந்து 15 மாதங்கள் ஓடிய பிறகும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி போன்ற குரூப்-1 தேர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிப் பெறக் கூடியவர்கள் குறைந்தது மூன்று முறை தேர்வு எழுதியவர் களாகவே இருக்கிறார்கள். பட்டப் படிப்பு முடித்தது முதல் இந்தத் தேர்வுக்காகவே தயாராகி வரும் மாணவர்களுக்கு இறுதி கட்டத்தில் வயதுத் தடை...

தலையங்கம் – ‘சரசுவதி’ பூஜை வேண்டாம்; காமராசர் விழா நடத்துங்கள்!

இந்து பார்ப்பன பண்டிகைகளின் உள்ளடக்கங்கள் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. உள்ளடக்கங்கள் மாறினாலும் ‘இந்து’ மத நீரோட்டத்துக்குள்ளேயே மக்களை நிறுத்தி வைக்கத் துடிக்கும் பார்ப்பனியம் இந்தப் பண்டிகைகள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும் என்றே விரும்புகிறது.                                                                                      அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, மதங்களுக்கு அப்பாற்பட்ட அரசு அலுவலகங்களில் காவல் நிலையங்களில் ‘ஆயுத பூஜை’ கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இப்படி அரசு அலுவலகங்களை ‘பஜனை மடங்’களாக மாற்றக் கூடாது என்று அரசு ஆணைகளும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருப்பதை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நகல் எடுத்து அனுப்பி வைத்து தொடர்ந்து போராட்டங்களை இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளோடு மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஓர் உளவியல் அடங்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி கவலைப்படாமல் எந்த எல்லை வரையும் சென்று வீண் விரயங்களில் பணத்தை செலவிடும் ‘உளவியலை’ மதம் சார்ந்த பண்டிகைகள் உருவாக்கி விடுகின்றன. தொழில்துறை அமைப்பான ‘அகோசம்’ வரவிருக்கும் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை,...

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

தலையங்கம் – காவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் மதித்து செயல்பட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக அரசு ஏற்பை அறிவிக்க, அரசிதழில் அதை வெளியிடுவதற்கும் கர்நாடக அரசு எதிர்த்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அரசிதழில் பதிவானது. இதற்குப் பிறகு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் ஆட்சியானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் பொறுப்பைத் தட்டிக் கழித்தே வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டி யிருக்கிறது. இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினார்கள், கர்நாடக அரசு...

தலையங்கம் கேரள முதல்வரின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

‘அரசு அலுவலகங்களில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட எந்த கொண்டாட்டங்களையும் கொண்டாடக் கூடாது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தடை போட்டிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருக்கிறார் பினராயி விஜயன். ‘அரசு அலுவலகங்கள், பணி செய்ய வேண்டிய இடங்கள். அங்கே கொண்டாட்டத்திற்கு இடமில்லை’ என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் அரசு அலுவலகங்கள் அமர்க்களப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவல் நிலையங்கள், பஜனை மடங்களாகவே மாறி நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டபோது, இந்து அறநிலையத் துறையே ஜெயலலிதா விடுதலைக்கு, கோயிலில் விசேட பூஜைகள் நடத்துவதற்கு உத்தரவிட்டது. சில மாவட்ட ஆட்சித் தலைவர்களே கோயில் சடங்குகளில் யாகங்களில் பங்கேற்ற கூத்துகளும் அரங்கேறின. காவல் நிலையங்களில் யாகங்களை நடத்துவதும், ஆடுகளை வெட்டி பலியிடுவதும், ‘வாஸ்து’ பரிகாரங்களை செய்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஒரு நாட்டில் அரசு அலுவலகங்கள் பஜனை மடங்களாக...

தலையங்கம் – தோழர்களே தயாராவீர்!

தலையங்கம் – தோழர்களே தயாராவீர்!

மக்களை சந்திக்கும் பரப்புரைப் பயணங்களை தொடர்ச்சியாக  முன்னெடுத்து வரும் பெருமை திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு  உண்டு. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை நடத்தினர். மக்களிடம் ஜாதிய அமைப்பின் கொடூர முகங்களை விளக்கினர். ஆங்காங்கே சில ஜாதி வெறி சக்திகள் உருவாக்கிய ‘சலசலப்புகளை’ முறியடித்துப் பயணம் தொடர்ந்தது. அடுத்து இந்த முழக்கம் மேலும் விரிவாக்கப்பட்டது. “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்தை மக்களிடம் கழக செயல் வீரர்கள் கொண்டு சென்றார்கள். இந்தப் பயணம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் வேலை வாய்ப்பு வாழ்வுரிமை இழந்து நிற்கும் அவலங்களை பட்டியலிட்டு மக்களிடம் விளக்கியது.  பிற்படுத்தப்பட்டோரிடையே ஜாதி வெறியைத் தூண்டி, ஜாதி சங்கம் உருவாக்கி, அரசியலுக்குப் பயன்படுத்தும் சக்திகளின் சுயநலத்தையும் அந்தப் பரப்புரை கேள்விக்குள்ளாக்கி யது. ‘ஒடுக்கப்பட்ட இளைஞர்களே, ஜாதி சங்கத் தலைவர்களின் வலையில் விழுந்து விட்டில்...

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு  தலித் இளைஞர் பலியானாரே!

தலையங்கம் – ஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் மனைவி கண்முன்னே கணவரை மர்மக் கும்பல் வெட்டிய சம்பவம் திட்டமிட்ட ஜாதி வெறி படுகொலையாகும். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் (21). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பழனியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகள் கவுசல்யா(19)க்கும் கடந்த 8 மாதங் களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர் கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் ஞாயிறன்று இருவரும் உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்தபோது (மார்ச் 13) மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சங்கரை அவரது மனைவி கண் முன்னே சரமாரியாக வெட்டி யுள்ளனர். இந்த சம்பவத்தில் கவுசல்யாவும் படுகாயம் அடைந்தார். அங்கு...

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

தலையங்கம் உரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்!

இந்து கோயில்களில் நுழைவதற்கே ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ அனைவருக்கும் பார்ப்பனர்கள் தடை போட்ட காலம் ஒன்று இருந்தது. அதுவே ‘ஆகம விதி’ – அதுவே தெய்வீக நடைமுறை என்று இறுமாப்பு பேசினர். இந்த ‘ஆகமம்’, ‘அய்தீக’ பூச்சாண்டிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தான் பெண்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடவும் கோயில் ‘திருக்குளங்களில்’ நீராடவும் உரிமை வழங்கப்பட்டது. அதுதான் 1947ஆம் ஆண்டின் 5ஆவது சட்டமாகிய ‘ஆலய பிரவேச உரிமை’ சட்டம். ‘ஆகமம்’, ‘அய்தீகத்துக்கு’ எதிராக அப்படி ஒரு சட்டம் வராதிருக்குமானால், இப்போது கும்பகோணம் ‘மகாமகத்தில்’ முழுக்குப் போடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். சைவ மடாதிபதிகளுக்கே கூட அந்த உரிமை கிடைத்திருக்காது. கோயில் நுழைவு உரிமை கிடைத்தாலும்கூட கோயில் ‘கருவறை’க்குள் கடவுளை நேரடியாக வணங்குவதற்கோ அல்லது உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கோ ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ மற்றும் பெண்களுக்கு உரிமை கிடையாது என்று கூறி, பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தை விட்டுத் தர மறுக்கிறார்கள்....

தலையங்கம் ‘ரோகித்’களை காவு கேட்கும் ஜாதிவெறி!

படிக்கக் கூடாத கூட்டம் என்ற ‘மனு’ சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட சமூகம், சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து, உயர் கல்வி வரை எட்டிப் பிடிக்கும்போது அங்கும் ஜாதியம், அவர்களின் உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ‘பாரத சமூகத்தின்’ பார்ப்பன ஜாதி தர்மம்! நெஞ்சு பதறுகிறது. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் சமூகக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜாதி வெறி கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது தனது உயிரைப் பலியிட்டுக் கொண்டார். பார்ப்பன ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் ‘தலித்’ மாணவர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் பலரும் இந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிடக் கூடாது என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘சங்பரிவார்’ மாணவர் அமைப்பான ‘வித்யார்த்தி பரிஷத்’ உயர்கல்வி வளாகங்களில்...

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

தலையங்கம் இனியும் தேவையா, இந்த ஆகமங்கள்?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு உடன்பாடானதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. “பெண்கள் நுழைவதற்கு தடைவிதிப்பதற்கான அடிப்படை என்ன? இதற்கு நிர்வாகம் முன் வைக்கும் காரணங்கள் எவை? கோயிலுக்குப் போவதோ, போகாமல் இருப்பதோ, பெண்களுக்கான தனிப்பட்ட விருப்பம். ஆனால், அவர்களை 1500 ஆண்டுகளாக அனுமதிக்க மறுத்தது ஏன்? அனுமதிக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் உள்ள சான்றுகள் எவை? என்று வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகள் ஆயத்தில் ஒருவரான தீபக் மிஸ்ரா, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு கேள்விகளை தொடுத்திருக்கிறார். வயதுக் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நான்கு பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கு இது. (தற்போது 10 வயதுக்குக் கீழே உள்ள – 50 வயதுக்கு அதிகமான பெண்கள் மட்டுமே இந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.) 1987ஆம் ஆண்டில் கன்னட நடிகை ஜெய்மாலா, அய்யப்பன் கோயில்...

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

திமிறிக் கொண்டு ஓடும் காளைகளை மடக்கிப் பிடித்து, அதன் கொம்புகளால் ‘தமிழர்கள்’ உடல் கிழிக்கப்பட்டு சிந்தும் இரத்தத்தைப் பார்க்க தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கின்றன. மாட்டை அடக்கும் முயற்சியில் மனிதர்கள் செத்துப் பிணமாவது கூட இவர்கள் பார்வையில் தமிழர் வீரமாக போற்றப்படுகிறது. ஜாதி இல்லாமல் வாழ்ந்தது தான் தமிழர் பண்பாடு. இப்போது ஜாதி வெறியையும் தீண்டாமை ஒடுக்குமுறைகளை யும் அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது ‘இதுதான் தமிழ்ப் பண்பாடா’ என்று மாட்டுக்காக மல்லுக்கட்டுகிறவர்கள் ஏன் கேட்கவில்லை? எங்கே போனது தமிழ்ப் பண்பாடு? இதைக் கேட்டால், காதை திருப்பிக் கொள்கிறார்கள். “மாடுகளை வண்டிகளில் பூட்டி, சித்திரவதை செய்யப்படுவதை எவரும் எதிர்ப்பது இல்லை. ஆனால், மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் மிருக சித்திரவதை என்பது என்ன நியாயம்?” என்று தொலைக்காட்சிகளில் வாதிடுகிறார்கள். மிருகவதையைவிட இதில் மேலோங்கி நிற்பது மனித வதைதான் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். 1999இல் ஜல்லிக்கட்டு நடந்தபோது தலித் மக்களை...

தலையங்கம் 26.11.1957

தலையங்கம் 26.11.1957

பெரியார் இயக்க வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நாள் நவ. 26, 1957. அன்றுதான் உலக வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை அந்நாட்டின் ‘குடிமக்களாக’ அறிவிக்கப்பட்டவர்கள் தீ வைத்து எரித்த நாள். எரித்தவர்கள் 10,000 பேர். கைதானவர்கள் 3,000 பேர். 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை. ஜாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தைக் கொளுத்த எனக்கு முழு உரிமை உண்டு என்று நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளித்தனர். அந்தப் போராளிகள், “நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்று நீதிபதி முன் நெஞ்சுயர்த்தி கூறினார்கள். அன்றைய சிறைச்சாலை கொடுமை யானது. சட்ட எரிப்பு வீரர்கள் கிரிமினல் கைதிகளாகக் கருதப்பட்டனர். மிக மிக மோசமான உணவு; மோசமான சுகாதாரம். சிறைச்சாலைக்குள்ளே உடல்நலம் பாதிக்கப் பட்டு ஜாதி...