Tagged: ஜல்லிக்கட்டு

இளைஞர்களின் எழுச்சி…

வெகுமக்களின் பீறிட்ட எழுச்சியாக நடந்து முடிந்திருக்கிறது இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்! ‘ஜல்லிக்கட்டு’க்கு அப்பால், தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்த தமிழர்களின் உரிமைகள் பற்றிய குமுறல் இந்த எழுச்சியை உந்தித் தள்ளியது என்பதே உண்மை. மோடிக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வுஅலைகளேபோராட்டக்களங்களில் மையம்கொண்டிருந்தது. “எங்கள் உரிமைகளை ஓர் அன்னிய ஆட்சி எத்தனை காலத்திற்கு மறுத்துக் கொண்டிருக்கும்? “ என்ற கேள்விதான் இந்த உணர்வுகளின் அடித்தளம். அதிகார மையங்களை பணிய வைத்திருக்கிறது இந்த போராட்ட சக்தி. உண்மைதான் ; ஜல்லிக்கட்டு ஜாதிய விளையாட்டாகத்தான் இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலேயே நாமும் அதை எதிர்த்தோம். இப்போது ஜாதியற்ற ஜல்லிக்கட்டு வேண்டுமென்ற கருத்து உருவாகி வருகிறது. ஜாதி, மதம், பாலின பேதங்களைக் கடந்து இளைஞர்கள் திரண்டனர். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலில் குளிர்காய துடித்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டினர். பெண்களின் பங்கேற்போ ஏராளம். இரவு பகல் பாராமல் தோழமையோடு இணைந்து நின்றார்கள். தமிழகம் இதுவரை பார்க்காத அதிசயம் இது. வெகுமக்கள்...

மெரினாவில் காவல்துறை தாக்குதலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 30012017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதிகேட்டு…. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 30012017 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்.   செய்தி தோழர் வைரவேல்

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

மாணவர், இளைஞர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் குறித்து வெளி வந்த சில முகநூல் பதிவுகள். ஜல்லிக்கட்டு ஆதரவு, பீட்டா எதிர்ப்பு என்பன இரண்டு நாட்களாக மத்திய அரசு எதிர்ப்பு, நரேந்திர மோடி எதிர்ப்பு என்பதாக உருப்பெற்றுள்ளது. நான் தொடர்ந்து சொல்லிவருவதைப்போல இது ஒரு கநனநசயட அரசமைப்பு என்பதை மறந்து எதேச்சதி காரத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக இன்று அது வடிவம் பெற்றுள்ளது. பல்வேறு விதமான மோடி எதிர்ப்பு முழக்கங்கள், நகைச்சுவை யாய், கவிதையாய், அரசியல் கூர்மை மிக்க தாய், சற்றே ஆபாசமாய்… வெகுமக்கள் தன்மையின் அனைத்து பலங்களுடனும், பல வீனங்களுடனும் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் தமிழக பா.ஜ.க தலைமையின் எதிர்கால ஆசைகளில் மட்டும் மண் வார்க்கவில்லை.. பா.ஜ.க பக்கம் சாய்ந்து பதவி, பணச் சுகம் காணலாம் எனத் தரகு வேலை பார்த்துவந்த தூதுவர்களின் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது.                                      – அ. மார்க்ஸ் அண்ணா ஒரு நிமிஷம்ணா… ஆங்காங்கே...

மாணவர் எழுச்சிக்கு அரணாய் சென்னை திவிக

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அரணாய், அமர்க்களமாய் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் …. எதிரி பீட்டா ( PETA) அல்ல … அந்த போர்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் இந்துத்துவாவே ( RSS) என்பதை முழக்கங்கள் மூலமாகவும், பதாகைகள் மூலமாகவும், வீதி நாடகங்கள் மூலமாகவும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாணவர்களும் தெளிவாக பொது எதிரியை கண்டுக்கொண்டு பாஜக மோடி அரசையும், ( RSS) ஆர் எஸ் எஸ் யையும் கண்டித்து முழக்கங்களால் விண்ணை அதிர வைத்தனர். சென்னையிலுள்ள தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக சென்னை மாவட்டசெயலாளர் தோழர் இரா. உமாபதி தலைமயில் திவிக மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பிரகாசு முன்னிலையில் போராட்டத்தில் கலந்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர் . தோழர் பிரபாகரன் பிணமாக நடித்திட , திவிக தோழர்கள் உடலுரிமை இயக்க தோழர் இரன்யாவின் தலைமையில் ஒப்பாரி வடிவில் தமிழகத்தின் நசுக்கப்படும் உரிமைகளை...

திவிக வரவேற்கிறது இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு ஆதரவு’...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்கள்: சரியானது தானா?

தென்தமிழகத்தில் அதிக எண்ணிக்கை யில் இருக்கும் ஆதிக்க ஜாதியினரான முக்குலத்தோரின் விளையாட்டுதான் ஜல்லிக் கட்டு, இது ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டுகள் அல்ல என்று பெரியாரிய வாதிகள் சொன்னபோது, தமிழ்த் தேசிய வாதிகள் அதை மறுத்தார்கள். ஆனால், உண்மை என்னவென்பதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். 09.01.2017 அன்று நியூஸ் 18 தொலைக் காட்சியில் நடந்த விவாதத்தில் அம்பேத்கரிய லாளர் அன்பு செல்வம் பேசும்போது – “1996இல் தென் தமிழகத்தில் ஜாதிக் கலவரங்கள் அதிகமாக நடைபெற்றபோது, அதை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மோகன் கமிஷன்,  ‘ஜாதிக் கலவரங்களுக்கான காரணிகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று’ எனக் கூறியது என்றும், ஜல்லிக்கட்டுக்குப் பின்புலத் தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அதிகார அரசியல் இருக்கிறது என்றும், இது தொடர்ச்சியாக தலித் மக்களின் மீது வன் கொடுமைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக் கிறது என்றும் குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த ஜல்லிக்கட்டு மீட்புக் குழுவின் உறுப்பினர் இராஜேஷ், 1996இல் ஜாதிக் கலவரம் ஏற்படுவதற்கு...

ஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் பேரணி நடைபெற்று உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதும், அதை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் என்பது மிகக்குறைவே. தமிழக அரசியல் கட்சிகள், சில தேவர் சாதி அமைப்புகளைத் தவிர பெரிய அளவில் ஆதரவு இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த ஆண்டு அதுவும் தமிழகம் முழுவதும் எப்படி இது போன்ற திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடைபெறுகின்றது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. பேஸ்புக்கில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, இத்தனை ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது மோசடியானதாகவே தெரிகின்றது. குறிப்பாக சென்னையில் போராட்டத்தை Care and Welfere என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இது ஒரு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். இந்த அமைப்புக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. அவர்களது...

ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்

எங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. ‘மாடுமுட்டிப் பய’ என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், “மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்… விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய…” அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாட்டிற்கும், நமக்கும் என்ன பொருத்தம்? அதன் உருவ அளவு என்ன? நமது உருவ அளவு என்ன? அதன் கொம்புகள், வலுவான கால்கள் என்ன? நமது உடலமைப்பு என்ன? அதன் பலம் என்ன? நமது பலம் என்ன? அதோடு மோதி நமது பலத்தை நிரூபிக்க...

பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

பழமைச் சிந்தனை – ஜாதியம் – பெண்ணடிமையோடு இணைந்து நிற்கும் மரபுகளை தமிழர் மரபுகளாக முன் வைக்கப்படும்போது அது வெகு மக்களின் உணர்வாக மாற்றம் பெற்றுவிடுகிறது. அதிலே ஒன்றுதான் ஜல்லிக் கட்டு. மனித உயிர்களுக்கு ஆபத்துகளை உருவாக்கும் போட்டிகளுக்கு எல்லாம் தடை விதித்து விட்டார்களா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். நாம் தரும் விளக்கம் இதுதான். எந்த ஒரு போட்டியும், போட்டியில் பங்கேற்கும், இரு தரப்பு ஒப்புதலுக்குப் பிறகுதான் அரங்கேறுகிறது. இந்தப் போட்டியில் காளைகளின் சம்மதம் பெறப்பட்டதா? அந்த மாட்டுக்கு தங்களை ஒரு போட்டிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்பது புரியுமா? ஒரு மாடு ஆவேசமடைவதற்கு அடிப்படை, அது அச்சமூட்டப்படுவதால் மட்டுமே, அச்சத்தினால்தான் மிரண்டு ஓடுகிறது, காளை. அது சரிசமமாகப் போட்டிக் களத்துக்கு வந்து, என்னை அடக்கிப் பார் என்று சவால் விட்டு பிடரியை சிலிர்த்துக் கொண்டு நிற்கவில்லை – காளைகளின் இந்த அச்சம் மிக மோசமான வதை. இந்தப் போட்டியில்...

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

தலையங்கம் ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?

திமிறிக் கொண்டு ஓடும் காளைகளை மடக்கிப் பிடித்து, அதன் கொம்புகளால் ‘தமிழர்கள்’ உடல் கிழிக்கப்பட்டு சிந்தும் இரத்தத்தைப் பார்க்க தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கின்றன. மாட்டை அடக்கும் முயற்சியில் மனிதர்கள் செத்துப் பிணமாவது கூட இவர்கள் பார்வையில் தமிழர் வீரமாக போற்றப்படுகிறது. ஜாதி இல்லாமல் வாழ்ந்தது தான் தமிழர் பண்பாடு. இப்போது ஜாதி வெறியையும் தீண்டாமை ஒடுக்குமுறைகளை யும் அப்பட்டமாக வெளிப்படுத்தும்போது ‘இதுதான் தமிழ்ப் பண்பாடா’ என்று மாட்டுக்காக மல்லுக்கட்டுகிறவர்கள் ஏன் கேட்கவில்லை? எங்கே போனது தமிழ்ப் பண்பாடு? இதைக் கேட்டால், காதை திருப்பிக் கொள்கிறார்கள். “மாடுகளை வண்டிகளில் பூட்டி, சித்திரவதை செய்யப்படுவதை எவரும் எதிர்ப்பது இல்லை. ஆனால், மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் மிருக சித்திரவதை என்பது என்ன நியாயம்?” என்று தொலைக்காட்சிகளில் வாதிடுகிறார்கள். மிருகவதையைவிட இதில் மேலோங்கி நிற்பது மனித வதைதான் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். 1999இல் ஜல்லிக்கட்டு நடந்தபோது தலித் மக்களை...