Tagged: மதவெறி

அறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி

சந்திரன் ஒரு தெய்வம் அல்ல; அது அறிவியல் பார்வையில் ஒரு கோள்! சந்திரன் மீது பூமியின் நிழல்படுவதே (கிரகணம்) என்று கூறினார், கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலாளர் ஆனக்ஸாகரஸ். ஏதன்சு நகரத்து மதவாதிகள் இவரது கருத்து மத விரோதமானது என்று கூறி இவரைக் கொல்ல முயன்றனர். ஏதன்சு நகர மன்னர் பெரிக்ளீஸ் இவரது நண்பராக இருந்ததால், கொலை முயற்சி தடுக்கப்பட்டது. இவரை ஏதன்சு நகரை விட்டே துரத்தி விட்டனர். சூரியன் தான் இயங்குகிறது என்ற மத நம்பிக்கைக்கு மாறாக, சூரியனைச் சுற்றி பூமிதான் இயங்குகின்றது என்ற உண்மையை வெளியிட்டார், கோபர்நிகஸ். மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்; கலகம் செய்தனர். புராட்டஸ்டண்ட்  மதத்தை நிறுவிய மார்ட்டின் லூதர், கோபர்நிகசை ‘முட்டாள்!’ என்று கூறி  இழிவுபடுத்தினார். எதிர்ப்புக்காக தனது முடிவை விட்டுக் கொடுக்காத  கோப்பர்நிகஸ், படுத்த படுக்கையாக கிடக்கும் போதும் தனது கொள்கைகளை நூலாக வெளியிட்டுப் பரப்பினார். விண்வெளியில் விண் கோள்களின் இயக்க விதிகளைக்...

வெள்ளத்தில் மூழ்கியது, மதவெறியும்தான்!

வெள்ளத்தில் மூழ்கியது, மதவெறியும்தான்!

மனிதர்களின் வாழ்வை சூறையாடி விட்டது வெள்ளம்; இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு; இயற்கையின் இந்த சீற்றம், பல்வேறு உண்மைகளை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கிறது. இயற்கையின் உலகிலிருந்து பல்வேறு பரிணாமங்கள் பெற்று படிப்படியான உருமாற்றங்களுக்குப் பிறகு உருவாகி யவன் மனிதன். ஆனால் இந்த இயற்கை யின் நியதி மதம், ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற பேதங்களை உருவாக்கவில்லை. மக்களைப் பிளவுபடுத்தும் இந்த அடை யாளங்களை உருவாக்கியது மனிதன் தான். இயற்கையின் சீற்றம் அனைத்து மத, ஜாதியினரையும் பாதிக்கச் செய்துவிட்டது. எனவே தான் கூறுகிறோம், இயற்கையின் நியதியில் மதம், ஜாதி, கடவுளுக்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது. நான் யார்? நான் எப்படி வந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கிய மனிதன், தனக்கு மேலாக ஒரு உலகம், ஒரு சக்தி இருப்பதாகவும், அந்த உலகத்தை அடைவதற்காகவே இந்த பூமியில் நாம் வாழ வேண்டும் என்றும் நம்பினான். இயற்கையின் புதிர்களுக்கு அவனுக்கு விடை கிடைக்கவில்லை. கால...

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

உயிரியல் துறை விஞ்ஞானியும், தேசிய அரசு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பார்கவா, ‘இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள். நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது. இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சாதிகாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா?”  என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. வன்முறைத் தாக்குதல்களோடு மட்டுமின்றி,...

மதவெறிகளைக் கடந்த மனித உறவுகள்

மதவெறிகளைக் கடந்த மனித உறவுகள்

குஜராத் கலவரத்தின்போது தன்னைக் கொலை செய்ய கத்தியுடன் வந்தவரைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடும், கலவரப் படம், மனசாட்சியை உலுக்கிப் போட்டது. அப்படி, உயிருக்கு மன்றாடியவர் குத்புதின் அன்சாரி – தையல் கடை நடத்திய ஒரு இஸ்லாமியர். மத வெறியுடன் கத்தியை தூக்கிக் கொண்டு வந்தவர் அசோக் மோச்சி – செருப்பு தைக்கும் தொழிலாளி. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நட்புடன் அன்பைப் பரிமாறிக் கொண்ட நிகழ்வு, கேரள மாநிலம் கண்ணூரில் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது. குத்புதீன் – குஜராத்திலிருந்து இடம் பெயர்ந்து, மேற்கு வங்கத்தில் குடியேறிவிட்டார். நிகழ்ச்சியில் பேசிய குத்புதீன், “குஜராத்தில் மதவெறி தற்காலிகமாக அடக்கப்பட்டுள்ளது. இது மோடியை டெல்லிக்கு வழியனுப்பி வைப் பதற்குத்தான். என்னைக் கொலை செய்ய வந்த அசோக் மோச்சி மீது எனக்கு பகை இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. இவர்களை மோடி, தனது...

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

மதவெறிக்கு எதிராக வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா, கௌதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் சந்திரகுமார், எஸ்.டி.பி.அய். மாவட்ட தலைவர் முகமது ஆசாத், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர், மா.பெ.பொ.க.யின் குப்பன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கழக...