Tagged: பெரியார் பிறந்தநாள் விழா

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின்   பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் 134வது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.9.2012 திங்கள் மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை வி.எம். தெரு, இலாயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறுகிறது. ச. சரவணன் தலைமையிலும், ப.கணேசன், கோ. தமிழரசன் முன்னிலையிலும், கி. இளைய சிம்மன் வரவேற்புரையிலும் நிகழ்ச்சி நடைபெறும். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  இயக்குனர் மணிவண்ணன், வி.சி.க. கருத்தியல் பரப்புரைச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் உரையாற்றுகின்றனர். கி. முருகன் நன்றியுரை யாற்றுகிறார். தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிறைவில் மு. கலைவாணன் குழுவினர் வழங்கும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியமான ‘சந்திர மோகன்’ பொம்மலாட்ட நாடகம் நிகழ்கிறது. காலை 7.30 தொடங்கி 9 மணி வரை தோழர்கள் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பர். 10 கிளைக் கழகங்களில் கழகத்தின் பெயர்ப் பலகைகள் திறக்கப்படுகின்றன. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்...

விழுப்புரத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

செப்டம்பர் 17இல் விழுப்புரம் மாவட்டம் கழக சார்பில் காலை 9 மணியளவில் சங்கராபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பெரியார் வெங்கட் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் மரியாதை செலுத்தினர். காலை 11 மணியளவில் செம்பராம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் மாணவ மாணவிகளிடையே தோழர்கள் ராஜேஷ், க.இராமர் ஆகியோர் உரையாற்றினர். செஞ்சி நான்கு முனை சாலையில் பெரியார் படத்திற்கு செஞ்சி கழகப் பொறுப்பாளர் கோ. சாக்ரடீசு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை நகரத்தில் கழகத் தோழர் வழக்கறிஞர் சத்தியராஜ், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், பெரியார் சிந்தனைகள் கொண்ட பெரிய பேனர் வைத்தும் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னெடுத்தார். பெரியார் முழக்கம் 29092016 இதழ்

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் எடுத்த பெரியார் விழா

பெரியார் 138ஆவது பிறந்த நாளை செப்.17 அன்று தமிழகம் முழுதும் கழகத்தினர் எழுச்சியுடன் கொண்டாடினர். சேலத்தில் : சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 அன்று தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழகக் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழகத் தலைவர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூர் சுந்தரம், செ.செ.காட்டுவளவு சின்ராசு, கண்ணாமூச்சி மாரியப்பன், மூலக்கடை இராசேந்திரன், காந்தி நகர் சரசுவதி ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடை இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.   கொளத்தூரில் :...

திருப்பூரில் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா !

திருப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் 20 இடங்களில் கொடியேற்று விழாவாக நடைபெற்றது. 04.10.2015 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் ராயபுரத்தில் துவங்கிய இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.ஊர்வலத்தின் துவக்க உரையை தோழர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்தினார்.பறையிசை முழங்க ராயபுரம் பகுதி கழக கொடியை மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் அவர்கள் ஏற்றிவைத்தார். வாகன ஊர்வலம் திருப்பூரின் முக்கிய சாலைகளின் வழியாக இரயில் நிலையம்,மாஸ்கோ நகர்,கன்னகி நகர், கொங்கனகிரி, பாலமுருகன் வீதி,திருவள்ளுவர் நகர்,ஜீவா நகர், ரங்கனாதபுரம், சாமுண்டி புரம், பெரியார் காலணி, அம்மாபாளையம், ஆத்துப்பாளையம்,போயம்பாளையம்,புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, இடுவம் பாளையம், முருகம்பாளையம்,வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில்...

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா மயிலை கழகம் சார்பாக 27.9.2015 அன்று காலை 10 மணியளவில் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் 3ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஜெ. அன்பழகன் (சட்ட மன்ற உறுப்பினர் தி.மு.க.) துவக்கி வைத்தார். போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து 28.92015 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பார்க் அருகே நடைபெற்றது. ஆ. சிவா தலைமை வகிக்க, ஆ. பார்த்திபன், சி. பிரவீன் முன்னிலையில் இரா. மாரி முத்து வரவேற்புரையாற்ற சம்பூகன் குழு வினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நா. நாத்திகன், ஆனந்தகுமார், கோவை இசைமதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினர். கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபியில் பெரியார் இயக்கங்கள் – தமிழர் அமைப்புகள் இணைந்து பெரியார் விழா; இளம்பிள்ளையில் ஜாதி ஒழிப்பு பரப்புரை; சேலம்-கோவை மாவட்டங்களில் பெரியார் விழா கழகத்தின் எழுச்சிப் பணிகள்

கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி எழுச்சியுடன் நடைபெற்றது. ஈரோடுமாவட்டம். கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இவ்வாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் விடுதலைக்கழகம், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. பேரணி ல.கள்ளிப் பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர். சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்தடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும்,...

பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – கிருஷ்ணகிரி இராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் 29.09.2015 மாலை 5 மணிக்கு நடைபெற்றது பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாக தோழர் மதிமாறன் கலந்துகொண்டு உரையாற்றினார் தோழர் கொளத்தூர் மணி சிறப்பரை ஆற்றினார்

பெரியார் பிறந்தநாள் விழா – மதுரை

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளன்று மாலை 3 மணி அளவில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது . மதுரை மாவட்டத் தலைவர் திலீபன் செந்தில்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா,மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி,மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்