Tagged: பெரியார் தமிழினத்தின் பகைவரா
நீதிக்கட்சித் தலைவரை பதவி விலக மிரட்டினார் ராஜாஜி! வாலாசா வல்லவன் ‘குணா’வின் வாரிசாக கிளம்பி யுள்ள ஒருவர் அண்மையில் வெளி யிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 1938 இல் இந்தி எதிர்ப்பின் போது இராஜாஜி நீதிக் கட்சியின் தலைவர் பொப்பிலி அரசரை அக்கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகுமாறு மிரட்டினார். பொப்பிலி அரசர் பயப்பட வில்லை. இராஜாஜியும் சும்மா இருக்க வில்லை. ஜமின்தாரி ஒழிப்பு மசோதாவை கொண்டு உங்கள் ஜமின் சொத்துகளை அரசுடைமை ஆக்கி விடுவேன் என்று மிரட்டியதால், மற்ற ஜமீன்தார்கள் பொப்பிலி அரசருக்கு நெருக்கடி கொடுத்து நீதிக்கட்சி தலைவர் பதவியி லிருந்து விலகி விடுமாறு வற்புறுத்தினர். பொப்பிலி அரசர் விலகி விட்டால் நீதிக் கட்சியை ஒழித்து விடலாம் என இராஜாஜி கனவு கண்டார். பொப்பலி அரசர் நீதிக் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டார். இந்த நிலையில்தான். கி.ஆ.பெ. விசுவநாதமும் ஏ.டி. பன்னீர் செல்வமும் பெல்லாரி சிறையில் இருந்த பெரியாரை...
‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்; தாங்களாகவே வெற்றி பெரும் பார்ப்பனர் களில் நாம் கொள்கைக்கு ஒத்து வருபவர்களை அமைச்சராக வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நீதிக்கட்சியினரின் தீர்மானத்தை பெரியார் வழி மொழிந்தார். தெலுங்கரான மனத்தட்டை சேது...
‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி அடுத்தக் குற்றச்சாட்டு “சேதுரத்தினம் அய்யரை அமைச்சராகச் சேர்த்துக் கொண்டது”. 1926இல் சுயேச்சை அமைச்சரவை அமைத்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுயராச்சிய கட்சியை சேர்ந்த அரங்கசாமி முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் கமிஷனை டாக்டர் சுப்பராயன் வரவேற்றதை கண்டித்து பதவி விலகினர். டாக்டர் சுப்பராயன் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியினரை அழைத்து டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண் டார். நீதிக்கட்சியைச் சார்ந்த முத்தையா முதலியாரையும் சுயராச்சிய கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த சேதுரத்தினம் அய்யரையும் அமைச்சரவையில் சுப்பராயன் சேர்த்துக் கொண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுய ராஜ்ஜிய கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது. நீதிக்கட்சியில் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயராச்சிய கட்சியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களும்...
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி தமிழகம் தனி நாடாகக் கூடாது என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார், ம.பொ.சி. அயல்நாட்டு உதவி?: “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடிய வில்லையே! கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்…… என்ன இருக்கிறது?: தமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற...
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி “பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக் கிடையே நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை! மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்பு களில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு. காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வை யில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு. சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு. காமராசரிடமிருந்த “பக்தி (?)” யே விஞ்சியிருந்தது. “வடக்கெல்லை – தெற்கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களுக்கும், பேட்டிகளிலோ மத்திய அரசைக்...
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி ம.பொ.சி.தான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் ‘தமிழன் குரல்’ நூல்களி லிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம், உண்மை தான், ம.பொ.சி. அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சி.யை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சி.யே எழுதியுள்ளார். “பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருதுநகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெற விருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில்பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில்...
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (7.1.2016 இதழ் தொடர்ச்சி) வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதைக் கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர இராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்த பிராந்தியங்களில் வசிக்கின்ற பெரும் பான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் (ஹளளநஅடெல) என் நண்பர் விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல,...
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி.) ஆந்திர மாநில மசோதா விவாதத்தின் போது 15-7-1953 இல் சட்டசபையில் பேசிய விநாயகம் சித்தூர் பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறிவிட்டு, “I cannot understand why the Government or the Members interested in the Andhara Bill should take objection. It narrates the history of the chittor district. After all it is a history of how the Tamillians were slowly made to appear as Telugus in my parts.” “என்னுடைய பகுதியின் பிரச்சனையை அரசாங்கமோ, உறுப்பினர்களோ புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய பகுதியில் தமிழர்கள்...
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 2ம் பாகம் படிக்க வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர் தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலக் கட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப் பனர்கள் தமிழகத்தில் வந்துள்ளனர். தொல்காப்பி யத்திலேயே வடமொழிச் சொற்களைச் சேர்ப் பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல் வாதிகளும், மார்க்சிய வாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல்...
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. வழக்கறிஞர் பா. குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ. ரா’ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் பல வரலாற்றுப் பொய்களையும் பல வரலாற்றுத் திரிபுகளையும் செய்துள்ளார். அவர் சமீபகாலமாக ம.பொ.சியின் பக்தராக மாறியுள்ளதால் ம.பொ.சியின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது சீடகோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரியவேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் நாம் மேற்கொண்டிருக்கும் இலட்சியப் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ளமுடியும். பா.குப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே என்னுரையில் பக் 31இல் (அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்) “இமய மலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும்...