களமிறங்கினர் கழகத் தோழர்கள்:7 மணி நேரப் போராட்டம் வெற்றி! பொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு
ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் அருகில் உள்ளது சி.எம் நகர். 27.4.16 அன்று அவ்வூரைச் சார்ந்த மாரியம் மாள் (எ) சாந்தி என்பவர் மரண மடைந்தார். ஆர்.என் புதூர், சி.எம் நகர் பகுதி வாழ் மக்கள் அங்குள்ள காவிரிக் கரையோரம் உள்ள மங்கலத்துறை என்ற பகுதியை தங்கள் சுடுகாடாக அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சுடுகாட்டில் அரசு சார்பில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, தகனமேடை அமைக்கப்பட்ட பிறகு, ஆதிக்க சமூகத்தினர் அதற்கு பூட்டு போட்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைந்துள்ளனர். இந்நிலையில் இறந்து போன மாரியம்மாள் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சி.எம். நகர் பகுதி மக்கள் உடலை எடுத்துச் சென்றனர். ஆனால், ஒரு ‘சக்கிலிச்சி’ யின் பிணத்தை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, சுடுகாட்டின் பூட்டைப் பூட்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுத்த ஆர்.என் புதூரைச் சார்ந்த ஆதிக்க சமூகத்தினர்...