Category: குடி அரசு 1927

தஞ்சை ஜில்லா போர்டை பார்ப்பன அக்கிரஹாரமாக்கச் சூழ்ச்சி ! 0

தஞ்சை ஜில்லா போர்டை பார்ப்பன அக்கிரஹாரமாக்கச் சூழ்ச்சி !

தஞ்சை ஜில்லா போர்டைப் பற்றி பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் விஷமப் பிரசாரங்கள் செய்து வருகிறார்கள் என்பது பார்ப்பனப் பத்திரிகை களைப் பார்ப்பவர்களுக்கு விளங்காமற் போகாது. ஆனால், அதன் காரணம் என்ன என்பதை வெகு பேர்கள் அறியா மல், விஷமப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து போவார்கள் என்றே நினைக் கிறோம். தஞ்சை ஜில்லா போர்டுக்கு இப்பொழுது பிரசிடெண்டாய் இருக்கும் ஸ்ரீமான் பன்னீர் செல்வத்திற்கு முன் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் அதாவது ஸ்ரீமான் வி.கே. ராமாநுஜாச்சாரியார் என்பவர் பிரசிடெண்டாய் இருந்த காலத் தில் தஞ்சை ஜில்லா தாலூகா போர்டுகள் முழுதும் பார்ப்பன ஆதிக்கமாகவும், பார்ப்பனர்கள் அக்கிரஹாரமாகவும், பார்ப்பனர்கள் சாப்பிடும் அன்ன சத்திர மாகவும் இருந்து வந்தது யாவரும் அறிந்ததே. ஆனால், அந்தக் காலத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரைப் புகழ்ந்தது வானம் கூட ஓட்டையாய்ப் போயிருக்கும். ஸ்ரீமான் பன்னீர் செல்வம் வந்த பிறகு பார்ப்பன தனி ஆதிக் கத்தை ஒழித்து எல்லோருக்கும் பங்கு இருக்கும்படி செய்து...

பொங்கல் வசூல் பார்ப்பனரல்லாத வாலிபர்களே! 0

பொங்கல் வசூல் பார்ப்பனரல்லாத வாலிபர்களே!

பொங்கல் தினங்களில் உண்டி மூலம் வீடு வீடாய்ச் சென்று பணம் வசூல் செய்யுங்கள். பார்ப்பனரல்லாத பெரியோர்களே ! வாலிபர்கள் உங்களைத் தேடி உண்டிகைக் கொண்டு வந்தால் இல்லை யென்று சொல்லாமல் உங்களுக்குத் தோன்றியதை உண்டியில் போடுங்கள். வசூலான தொகையை அந்தந்த ஜில்லா ஸ்தாபனங்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் கட்டளைப்படி உபயோகப்படும். குடி அரசு – அறிவிப்பு – 09.01.1927

இனிச் செய்ய வேண்டிய வேலை 0

இனிச் செய்ய வேண்டிய வேலை

மதுரை மகாநாட்டைப் பற்றிப் பாராட்டுக் கடிதங்கள் வந்த வண்ண மாயிருக்கின்றன. மகாநாட்டிலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் உணர்ச்சி யுடன் இருக்கிறார்கள் என்பதும் சுயமரியாதை தாகமுள்ளவர்களாக இருக்கி றார்கள் என்பதும், பார்ப்பனர்களின் ஆயுதமான போலிச் சுயராஜ்ஜிய மாயை யில் விழுந்து தங்கள் சமூகத்திற்குக் கேடு சூழும் கோஷ்டியில் சிக்கவில்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கிவிட்டது. ஆனால் இந்த விளக்கம் மாத்திரம் போதுமா? இதனாலேயே நாம் சுயமரியாதை அடைந்து விட்டோமா? என்பதை யோசிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினாலும், விஷமப் பிரசாரத்தினாலும் சுவாதீன புத்தியுள்ள பல பார்ப்பனரல்லாதார் தோல்வியுற்று விட்ட காரணத்தாலும், சுயராஜ்ஜியக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியின் புரட்டுகளைக் கண்டு சகியாததாலும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உள்ள காங்கிரஸ் சபையினிடம் உள்ள அதிருப்தியினாலும் திடீரென்று மதுரை மகாநாட்டிற்கு இவ்வளவு பிரதிநிதிகள் வரவும் உற்சாகம் காட்டவும் முடிந்ததே அல்லாமல் முழுதும் ஏற்கனவே ஏற்பட்டுள்ள உற்சாகமென்றாவது நிரந்தரமாயிருக்கக்கூடிய உற்சாக மென்றாவது சொல்லிவிடமுடியாது என்றே நினைக்கிறோம். நமது...

கோவை மகாநாடு ( ஈ.வெ.கி ) 0

கோவை மகாநாடு ( ஈ.வெ.கி )

நமது மாகாண பார்ப்பனரல்லாதாரின் விசேஷ மகாநாடு இன்று கோவையில் கூடுகிறது. நீண்ட காலமாக நம்முள் சிதரிக் கிடந்த அபிப்பிராய பேதமுடைய ராஜீய பார்ப்பனரல்லாதார்களான கனவான்கள் யாவரும் விஜயம் செய்திருக்கிறார்கள். இதில் ஒரு நன்முடிவுக்கு நாம் வராவிட்டால் நமது நிலை என்ன ஆகுமென்பதை முன்பே எழுதி இருக்கிறோம்.“ சுயமரியாதை” வேண்டுமென்றும் அதற்கு நமக்கென ஒரு தனி இயக்கம் வேண்டுவது அவசியமென்றும், காலம்சென்ற நமது தலைவர்களான திரு. நாயர் பெருமானாலும், தியாகராயர் பெருமானாலும் முதன் முதல் எந்த இடத்தில் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ அதே இடத்தில்தான் அவ்வியக் கத்தின் நெருக்கடியான காலத்தில் ஒரு முடிவு காணவும் இன்று கூடி இருக்கிறோம். மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடும், ஜில்லா இளைஞர்கள் மகாநாடும் ஒரே இடத்தில் கூடி இருக்கிறது. இவ்விரு மகாநாடுகளின் வரவேற்புக் கழகத் தலைவர் பிரசங்கமும், மகாநாட்டுத் தலைவர் பிரசங்கமும், நமது பார்வைக்கு வந்து விட்டது. திருவாளர் ரெத்தின சபாபதிக் கவுண்டர் மகாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரவர்கள் பார்ப்பனர்...

சுவாமி சிரத்தானந்தர் 0

சுவாமி சிரத்தானந்தர்

சுவாமி சிரத்தானந்தர் என்னும் பெரியாரை உலகம் முழுதும் தெரியும். இவர் தேசத்திற்காகவும், சமூகத்திற்காகவும் ஒதுக்கப்பட்டவர்களின் உயர் முன்னேற்றத்திற்காகவும் தனது தொழில், செல்வம், குடும்பம் முதலிய வற்றைத் தியாகம் செய்து தனது ஜீவிதத்தின் பெரும்பான்மையான பாகத் தையும் சந்நியாசியாகவிருந்தே தான் எடுத்துக்கொண்ட காரியத்திற்காக அஞ்சாநெஞ்சத்தோடும், இளையா ஊக்கத்தோடும் தொண்டாற்றினார். இவர் ஒரு முஸ்லீமால் படுகொலையுண்டிறந்தது ஒவ்வொரு மனிதனுடைய மனதையும் பெரும் துன்பத்திற்குள்ளாகுமென்பதற்கு சிறிதேனும் ஐய மில்லை. சுவாமிகளது மரணத்தால் இந்தியா தனது உண்மை புத்திரர்களில் ஒருவரை இழந்ததென்று சொல்வது மிகையாகாது. ஆயினும் இதை ஆராயு மிடத்து இதுவும் ஒரு நன்மைக்கென்றே கொள்ள நேரும். ஏனெனில் பிறப் பெய்திய ஒவ்வொரு மனிதனும் இறக்க வேண்டியதவசியமே. அங்ஙனம் சுவாமிகள் சாதாரணமாக ஏதோ ஒரு நோயின் பேரால் இறந்திருப்பாரே யாயின் இன்றிருக்கும் உணர்ச்சிக்கும் அவரது தொண்டில் மக்களுக்கிருக்கும் ஊக்கத்திற்கு இத்தனை ஏதுவில்லாமலிருக்கும். இப்படுகொலையினால் அனாவசியமாய் ஒரு கூட்டத்திற்கு பழியேற்பட நேரிட்டதேயன்றி சுவாமி களுக்கேனும் அவர் கொண்ட தொண்டிற்கேனும்...

பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

பார்ப்பனரல்லாதார் மகாநாடு

சென்ற மாதம் 25, 26 ² சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூடிக் கலைந்து விட்டது. மகாநாடா னது சென்னை தென் இந்திய நல உரிமைச் சங்கத்தினரால் பார்ப்பனரல்லாதார் மகாநாடென்று முறையாகச் சென்ற பத்து வருஷ காலமாய் நடந்து வந்ததை அனுசரித்தே கூட்டப்பட்டது என்பதாகக் கருதி, “பார்ப்பனரல்லாதார் 10வது மகாநாடு” என்னும் பேரால் கூட்டப்பட்டது என்று சொல்வதானாலும் இவ்வருஷம் பார்ப்பனரல்லாதார் முதல் மகாநாடென்றே சொல்ல வேண்டும். இந்த மகாநாட்டிற்கு வந்தால் தங்கள் வாழ்வில் மண் விழுந்து விடுமோ, பெருமை குறைந்துவிடுமோ, பார்ப்பனர்கள் அழித்து விடுவார்களோ என்று பயந்தவர்களும், தவிர்க்க முடியாதபடி பார்ப்பனர்களின் தாக்ஷண்ணியத் திற்கு கட்டுப்பட்டவர்களும், எப்போதும் பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் சேருவதில்லை என்பதாக பார்ப்பனருக்கு வாக்குறுதி கொடுத்து அப்புறம் இப்புறம் ஒப்பந்தம் பேசிக்கொண்டவர்களும், தவிர்க்க முடியாத அசந்தர்ப் பத்தில் பட்டவர்களும் தவிர, மற்றெல்லா முக்கியஸ்தர்களும் பிரதிநிதிகளும் விஜயம் செய்திருந்தார்கள். இம்மகாநாடு கூட்ட வேண்டு மென்று “குடி அரசி”ன்...

நமக்கு மாறுதல் ஏன்? 0

நமக்கு மாறுதல் ஏன்?

இந்தியாவிலுள்ள மற்றெல்லாக் கட்சிகளைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி தான் தேசீயக் கொள்கைகளை அதிகமாகக் கொண்டுள்ளதென்பதே எனது நீண்ட கால அபிப்பிராயம். இத்தகைய பரந்த நோக்கமில்லாததும் குறுகிய நோக்கமுடையதுமான வேறெந்த ஒரு கட்சியுடனாவது ஜஸ்டிஸ் கட்சி சேருவதானது, ஆறானது கடலில் பாய வேண்டியது போய் கடலானது ஆற்றில் பாய்வதை ஒத்திருக் கிறது. காங்கிரஸால் மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை யென்று கண்ட பிறகுதான் காலஞ் சென்ற நம் தலைவர்கள் ஜஸ்டிஸ் இயக்கத் தைக் கண்டார்கள். சமய சமுதாய அரசியல் விஷயங்களில், காங்கிரசானது கடந்த ஐம்பது வருஷங்களாய்ச் செய்து முடிக்காத காரியங்களை யெல்லாம் நமது ஜஸ்டிஸ் இயக்கமானது நடந்த பத்தாண்டுகளில் எவ்வளவோ முன்னேற்றத்தைச் செய்து காட்டி யிருக்கிறது. அப்படியிருக்க இப்பொழுது காங்கிரசில் சேருவதாய் நம்மியக்கக் கர்த்தாக்களில் ஆணையை காங்கிரசில் எப்பொழுது சேர்ந்தோமோ அப்பொழுதே நம் கட்சியும் மறையத் தலைப்பட்டு விடுமென்று நான் பயப்படுகிறேன். இந்நாட்டில் உண்மையான சுயராஜ்யம் நிலவுமென்றும், ஆகிய இத்தகைய உத்தமக் கொள்கைகளையுடைய...