நமக்கு மாறுதல் ஏன்?

இந்தியாவிலுள்ள மற்றெல்லாக் கட்சிகளைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி தான் தேசீயக் கொள்கைகளை அதிகமாகக் கொண்டுள்ளதென்பதே எனது நீண்ட கால அபிப்பிராயம்.

இத்தகைய பரந்த நோக்கமில்லாததும் குறுகிய நோக்கமுடையதுமான வேறெந்த ஒரு கட்சியுடனாவது ஜஸ்டிஸ் கட்சி சேருவதானது, ஆறானது கடலில் பாய வேண்டியது போய் கடலானது ஆற்றில் பாய்வதை ஒத்திருக் கிறது.

காங்கிரஸால் மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை யென்று கண்ட பிறகுதான் காலஞ் சென்ற நம் தலைவர்கள் ஜஸ்டிஸ் இயக்கத் தைக் கண்டார்கள். சமய சமுதாய அரசியல் விஷயங்களில், காங்கிரசானது கடந்த ஐம்பது வருஷங்களாய்ச் செய்து முடிக்காத காரியங்களை யெல்லாம் நமது ஜஸ்டிஸ் இயக்கமானது நடந்த பத்தாண்டுகளில் எவ்வளவோ முன்னேற்றத்தைச் செய்து காட்டி யிருக்கிறது. அப்படியிருக்க இப்பொழுது காங்கிரசில் சேருவதாய் நம்மியக்கக் கர்த்தாக்களில் ஆணையை காங்கிரசில் எப்பொழுது சேர்ந்தோமோ அப்பொழுதே நம் கட்சியும் மறையத் தலைப்பட்டு விடுமென்று நான் பயப்படுகிறேன்.

இந்நாட்டில் உண்மையான சுயராஜ்யம் நிலவுமென்றும், ஆகிய இத்தகைய உத்தமக் கொள்கைகளையுடைய ஜஸ்டிஸ் இயக்கத்தில் வந்து சேர்ந்து கொள்ளப்படுமென்றும் நான் அபிப்பிராயப்படுகிறேன்.

எத்தகைய சீர்திருத்தம் வேண்டுமென்பதை ராயல் கமிஷனுக்கு முன்னால் வற்புறுத்துவதற்காக வேண்டி ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியம். இதை முன்னிட்டு பல்வேறு கட்சிகளிலுமுள்ள தலைவர்கள் தங்கள் சுயநலத்தை ஒழித்து பொதுக் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.


குடி அரசு – கட்டுரை – 03.07.1927

You may also like...

Leave a Reply