வைதீக சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய கருத்தரங்கம் வள்ளலார் ‘ஜோதி’யில் கலந்தாரா?
‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், அக்டோபர் 22, மாலை சென்னை அன்பகத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். முன்னதாக வைதீக எதிர்ப்புப் புரட்சிகரப் பாடல் களுடன் பாடகர் கோவன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சி அரங்கை சூடேற்றியது. “இந்த அரங்கில் தலைசிறந்த ஆளுமைகள், துடிப்பு மிக்க இளைஞர்கள், பெண்கள் என்று அரங்கத்தில் கூடியிருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை யும் எழுச்சியும் உருவாகிறது” என்று கோவன் குறிப்பிட்டார். மு.வெ. சத்தியவேல் முருகனார் ‘ஆகமங்களும் அர்ச்சகர்களும்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் வீ. அரசு, ‘வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் கருணானந்தன், ‘வள்ளலார் வைதீக எதிர்ப்பு’ எனும் தலைப்பிலும், நிறைவாக கொளத்தூர் மணி, ‘வள்ளாருக்குப் பிறகு பார்ப்பனியம், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சபையில் உருவ வழிபாட்டைத் தொடங்கி,...