Category: குடி அரசு 1930

“தமிழ் நாடு” 0

“தமிழ் நாடு”

“தமிழ் நாடு” பத்திரிகையில் ஆலயப் பிரவேசம் என்ற தலைப்பில் வரும் விஷயங்களும் திரு. தண்டபாணி பிள்ளையின் பேரால் வரும் சுயமரியாதைச் சரித்திரம் என்னும் விஷயங்களுக்கும், திரு. கிருத்திவாசய்யர் நாம் குடி அரசில் ஆலயப் பிரவேசம் என்னும் தலைப்பின் கீழ் எழுதின வைகளில், தான் ரயில் சார்ஜ் வாங்கினதை மாத்திரம் மறுத்திருக்கும் விஷயத் திற்கும், பொதுவாக இப்படி ஒரு கூட்டம் ஏன் இந்த மாதிரி வேலையில் தலைப்பட்டது என்பதற்கும், திரு. வரதராஜுலு மறுபடியும் தலையெடுப் பதற்கு எந்தவிதமான தந்திரத்தின் மூலம் இக்கூட்டத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார் மற்றும் பலரும் எப்படி ஒன்றானார்கள் என்பதையும் தக்க காரணங்களுடன் ரிக்கார்டுகளுடன் பின்னால் தெரிவிக்கிறோம். ஏனெனில் தொடர்ச்சிகளும் மற்றும் திரைமறைவில் இருக்கும் இரண்டொரு வர்களுடைய மறுப்புகளோ எதிர்ப்புகளோ கண்டனங்களோ கொண்ட கட்டுரைகளும் முடிவு பெற்று வெளியாகி விட்டால் பிறகு ஒரே தடவையில் எழுதிவிடலாமென்பதே நமது கருத்தாகும். ஆனால் ஒரு விஷயம் இப் போதே எழுத வேண்டியது அவசரமென தோன்றுகின்றது....

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் “இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக் கண்டவரைக் கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேரு மென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறு ஜன்மம் எடுக்கப்படும்” என்றும் எழுதி வைத்ததே காரணமாகும். * * * எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கி யதை அற்றவனாவான். * * * புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்கு பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன வென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாஸ்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்துவிடுவார்கள்...

ஓர் வேண்டுகோள் 0

ஓர் வேண்டுகோள்

50 வருஷத்திற்கு முன் சுயமரியாதை இயக்கம் சுமார் 40, 50 வருஷத்திற்கு முன் பதிப்பித்ததும், இந்து மத ஆச்சார ஆபாச தரிசினி என்ற பெயர் கொண்டதும், 762 பாடல்களை உடையதும். கிரௌவுன் ஒண்ணுக்கு எட்டு சைசில் 120 பக்கங்களை உடையதுமான ஒரு தமிழ் புத்தகம் எங்கேயாவதும், யாரிடத்திலாவதும் கிடைக்குமானால் தயவு செய்து வாங்கி உடனே நமக்கு அனுப்பிக்கொடுக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம். ஏனெனில் அப்புத்தகம் ஒன்று நமக்கு ஒரு மாதத்திற்கு முன் ஒரு நண்பரால் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மிக்க பழயதாகவும் முதலிலேயே சில பக்கங்கள் இல்லாமலும் சில பக்கங்கள் கிழிந்தும் சரிவரத் தெரியாமலும் இருப்பதால் கிழியாத புத்தகம் ஒன்று வேண்டியிருக்கிறது. அப்புத்தகம் நமது இயக்கக் கொள்கைகளையே முக்கியமாய் வைத்துப் பாடின பாட்டுகள் அனேகம் அதில் இருக்கின்றன. ஈ.வெ.ரா. குடி அரசு – வேண்டுகோள் – 16.02.1930

“குடி அரசு” 0

“குடி அரசு”

சந்தாதாரர்களுக்கு ஓர் அறிவிப்பு “குடி அரசு” பத்திரிகை சந்தாதாரர்களால் தங்களுக்குப் பத்திரிகை சரியாய் வருவதில்லை என்பதாக தினம் ஏராளமான ஆவலாதிகள் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் பல பத்திரிகையின் மீதுள்ள வெறியி னாலும் (சில பணத்தை உத்தேசித்ததாகவும் இருக்கலாம்) பலவாராக பொருமை இழந்து எழுதப்பட்டவைகளாக காணப்படுகின்றன. பத்திரிகை சென்னைக்கு மாற்றப்பட்டதாலும் சென்னையில் ஏற்பட்ட பலவிதத் தொல் லையாலும் நாம் மலாய் நாட்டுக்கு போய் இருந்த காலையில் பத்திரிகை நிருவாகத்தை ஏற்றுக் கொண்டவர்களின் நடத்தையாலும் பத்திரிகைகள் 3 வாரம் சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் நாம் சரியாய் அனுப்பிய காலங்களில் கூட தங்களுக்கு சரியாய் பத்திரிகை கிடைக்கவில்லை என்பதாக வரும் ஆவலா திகளே அநேகமாய் காணப்படுவதால் நாம் அவற்றிற்கு ஒரே பதில் தான் சொல்லக்கூடிய நிலையில் இருக்கின்றதற்கு வருந்துகின்றோம். அதாவது, நாம் வாரம் 9000 காப்பிகள் அச்சடித்ததற்கு காகித செலவும், அச்சடித்தவைகளை தபாலில் அனுப்பியதற்கு ஸ்டாம்பு செலவும், ரயிலில் பார்சலாய்...

சுயமரியாதை மாகாண மகாநாடு 0

சுயமரியாதை மாகாண மகாநாடு

சுயமரியாதை மாகாண மகாநாடு முதல் முதலாக சென்ற வருஷம் செங்கல்பட்டில் கூடியதும் அதை அடுத்த வருஷத்திற்கு ஈரோட்டிற்கு அழைக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி 4, 5 வருஷ கால மானாலும் அது ஒரு விதமாக அதாவது சாதகமாகவோ அன்றி பாதக மாகவோ எப்படியோ ஒரு விதத்தில் பொது மக்களின் கவனத்தை இழுத்து எங்கு பார்த்தாலும் இவ்வியக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் படியான நிலைமையை பெற்றுவிட்டது. மற்றும் இவ்வியக்கம் வேகமானது. இன்றையதினம் அரசியல் விஷயங்களிலும் மத விஷயங்களிலும் சமூக விஷயங்களிலும் புகுந்து அவைகளையெல்லாம் சற்று ஆட்டி விட்டதோடு இதன் பேரால் பிழைத்து வந்தவர்களின் பிழைப்பில் மண் போடும்படியான நிலைமை ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவைகளுக்கு ருஜுவு வேண்டுமானால் நமது எதிரிகளின் வாக்கு மூலங்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். அதாவது சட்ட சபைகளில் திரு. முத்துரங்க முதலியார் போன்றவர்கள் மூலமாய் சுயமரியாதை இயக்க விஷயமாய் கேட்கும் கேள்விகளாலும்,...

மானக்கேடான காரியம் 0

மானக்கேடான காரியம்

லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தை அனுசரித்து என்று திருவாளர்கள் டாக்டர் யூ. ராமராவ் அவர்களும் ராமதாஸ் பந்தலு அவர்களும் ராஜிநாமா கொடுத்துவிட்ட ராஜாங்க சபை (ஸ்டேட் கவுன்சில்) ஸ்தானங்கள் இரண்டிற் கும் இரண்டு கனவான்கள் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாய் தெரிந்தோம். இவர்களில் ஒருவர் திருவாளர் எ. ராமசாமி முதலியாரும் மற்றவர் திருவாளர் டி. ஆர். ராமச்சந்திர அய்யரும் ஆவார்கள். சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் எதற்காக திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யரை ராஜாங்க சபைக்கு அனுப்பினார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. திரு. டி. ஆர். ராமச்சந்திரய்யர் இந்து வருணாசிரம தர்ம ஸ்தாபனத்தின் தலைவர். மனுதர்ம சாஸ்திரத்தையும் அதில் சொல்லுகின்றவைகளையே சனாதன தர்ம மென்றும் சொல்லுகின்ற வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்யும் சங்கத்திற்கும் தலைவர். இதை அனுசரித்து தினமும் வருணாசிரம மகாநாடு, பிராமண தர்ம மகாநாடு, சனாதன தர்ம மகாநாடு, ஆரிய தர்ம மகாநாடு ஆகியவைகள் கூட்டி தீர்மானங்கள் செய்து பிரசாரமும் செய்பவர்...

“சித்திரபுத்திரன்” 0

“சித்திரபுத்திரன்”

சைவன் : – அய்யா, தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா? வைணவன் : – ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டு கால் பிராணிகளில் ஏணி வகையராவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகைய ராக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டு மரம் முதலியவை களையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக்காரர்களைப் பின்பற்றுவதாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன். சைவன் : – அப்படியா, இது நல்ல சைவம் தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போக வேண்டும் நான் போய் விட்டு வரு கிறேன். ( என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ என்று நினைத்து ஓடிவிட்டார். ) குடி அரசு – உரையாடல்...

மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம் 0

மலேயா நாட்டு சுற்றுப் பிரயாணம்

“எதிர் பிரசாரத்தினால்” ஏற்பட்ட நன்மைகள் கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் வரவேற்பு சுவாமி விவேகானந்தாவின் பெயரினால் சென்னையில் பார்ப்பனர் கள் செய்யும் ஏமாற்றத்தையும் வஞ்சகத்தையும் பற்றியும் ராம கிருஷ்ணா மிஷினில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 90 பேர் யோக்கிய மற்றவர்கள் என்றும் உதாரணமாக சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா ஹோம் என்கின்ற இடத்தில் நடக்கும் அக்கிரமம் கணக்கு வழக்கில்லை யென்றும் அங்கு நடக்கும் பணம் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பார்ப்பனரல்லாதாருடையதென்றும், வருஷம் 20000, 30000 ஆயிரம் அந்த ஹோமின் பேரில் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து கொள்ளை அடிக்கப்படு கின்றதென்றும், இதை அறிந்த தனது நண்பரும் சுயமரியாதை சங்கத் தலை வருமான உயர்திரு டபிள்யூ பி.ஏ. சௌந்திரபாண்டியர் சட்டசபையில் கூட கேள்வி கேட்டு அக்கொள்ளையை நிறுத்த முயற்சித்தார் என்றும், ஆனாலும் அரசாங்கத்தில் முக்கிய உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் செல்வாக் கால் பார்ப்பனரல்லாத பயங்காளிப் பெரியவர்கள் அவர்களுக்கு அடிமை யாகி சிறிதும் சுயமரியாதை உணர்ச்சி இல்லாமல் பொது மக்கள் பணத்தை வசூல்...

மலாயா பிரயாணம் 0

மலாயா பிரயாணம்

மலாயா நாட்டுக்கு “சென்ற வருஷம்” டிசம்பர் µ 15 ² கப்பலேறி, “இவ்வருஷம்” ஜனவரி மாதம் 16 தேதி இந்திய நாடு சுகமே வந்து சேர்ந்தோம். இந்த சுற்றுப் பிரயாணத்தில் மலாய் நாட்டில் நடந்த விஷயங்கள் ஒருவாறு சென்ற வாரப் பத்திரிகையிலும், இவ்வாரப் பத்திரிகையிலும் பிரசுரித்திருக் கும் மலாய் நிரூபரின் சுற்றுப் பிரயாண நிரூபத்தில் காணலாம். மலாய் பிரயாணத்தைப் பற்றி நாம் சிறிதும் நினைத்திருக்காத நிலையில் திரு. சாமி அற்புதாநந்தா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கை உணர்ச்சி விசேஷமாய் பரவி வருகின்றதெனினும், சில விஷமக்காரர்கள் சுயநலத்தின் காரணமாய் இந்து மதத்தின் பேரால் தொல்லை விளைவிக் கின்றார்கள் எனவும், சுயமரியாதைக்காரர்களுக்கு, “இந்துக்களைப் புதைக் கும் சுடுகாட்டில் கூட இடம் கொடுக்கக் கூடாது” என்று இந்து மத சங்கத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்ததாகவும், சுயமரியாதைக் கல்யாணங்களை சர்க்கார் ஒப்புக் கொள்ளக்கூடாது என்று விஷமம் செய்கின்றார்கள்...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. நமது நாடு பார்ப்பனீய ஆதிக்கத்திலும் பணக்கார செல்வாக்கிலும் இருக்குமட்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்துதான் ஆகவேண்டும். 2. பூரண சுயேச்சை என்பது ஒரு மனிதன் எந்த விதத்திலும் எதற்கும் அடிமைபட்டிறாத விடுதலை என்றால் நான் அதை மனப்பூர்வமாய் வரவேற்கின்றேன். அப்படிக்கில்லாமல் பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு போவதும் (திரு. காந்தி சொல்லும்) ராம ராஜ்ஜியம் ஏற்படுத்துவதும் என்றால் ருஷிய அரசாங்கத்தையே நான் கூவி அழைக்க முந்துவேன். 3. இந்த நாட்டிற்கு சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்டு அதை அமுலில் நடத்திவைக்கும் ஆசை பொது மக்களுக்கு ஏற்பட்டதற்காக யாருக்காவது நன்றி செலுத்த வேண்டுமானால் அது முதலில் திருமதி மேயோ அம்மைக்கு உரியதாகும். ( ஈ. வெ. ரா.) குடி அரசு – துணுக்குகள் – 02.02.1930

சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு 0

சிங்கப்பூர் டவுன் ஹாலில் மலேயா இந்தியன் அசோசியேசன் மகாநாடு

தான் மலேயா நாட்டிற்கு வந்து ஒரு வாரமே ஆகின்றபடியாலும் இரண்டு மூன்று ஊர்களே பார்த்திருக்கின்றபடியாலும் அதற்குள் மலேயா நாட்டைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாதென்றும், மதுவிலக்கைப்பற்றியும் இம்மகாநாட்டைப் பற்றியும் பேசுவதாகவும் சொல்லி மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சுலபத்தில் விலக்கு செய்யக் கூடியதல்லவென்றும், இவர்களிடம் கடவுள் மூலமாகவும் மதக்கொள்கை மூலமாகவும் மதுப்புகுந்திருக்கின்ற தென்றும் அவ்விரண்டு அபிப்பிராயமும் தளர்த்தப்பட்டாலல்லாமல் பொதுவாக பூரண மது விலக்கு முடியாதென்றும் சிறப்பாக நூற்றுக்குத் தொண்ணூறு மக்களாகிய பாமர மக்களுக்குள் சிறிதுகூட முடியாதென்றும் இந்துக்களுடைய கடவுள்களில் பாமர மக்கள் கடவுள்களாகிய முருகன் காட்டேரி கருப்பன் வீரன் முனி யாண்டி காளி பராசக்தி முதலாகிய கடவுள்களும் மற்றும் பல பார்ப்பன கடவுள்களும் யாகம் சாந்தி முதலிய வைதீகச் சடங்குகளுக்கு வழிபடும் இந்துக்களில் மதுவை கட்டாய வஸ்துவாக கொண்டிருக்கின்றது என்றும் அனேகம்பேருக்கு மதுபானம் மதசம்பிரதாயத்திலும் மரியாதை சம்பிரதாயத் திலும் கட்டாய வஸ்துவாக கருதப்பட்டு வருகின்றது என்றும் அதனாலேயே தான்...

மலேயா நாட்டு சுற்றுப்பயணம் எதிர்ப்பிரசாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் 0

மலேயா நாட்டு சுற்றுப்பயணம் எதிர்ப்பிரசாரத்தால் ஏற்பட்ட நன்மைகள்

தனக்கும் தனது நண்பர்களுக்கும் இந்தப் பினாங்கில் செய்த வரவேற் பும் உபசாரமும் பத்திரங்களில் கண்ட புகழ் மொழிகளும் மற்றும் தன்னைப் பற்றிப் பேசிய புகழ் வார்த்தைகளும் தனது ஊர்வலத்தில் ஜனங்கள் நடந்து கொண்ட மாதிரியும் பார்த்து தான் மிகுதியும் வெட்கமடைவதாயும் இவை களில் அனேகம் தனது தகுதிக்கும் தனது கொள்கைக்கும் சிறிதும் பொருத்த மற்றதென்றும் மலாய் நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் தான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அதைக் காட்டிய மாதிரி தனக்கு மிக்க சங்கடத்தை கொடுத்ததென்றும் இனியும் இம்மாதிரி இந்த நாட்டில் யாரும் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மலாய் நாட்டு பிரமுகர்கள் கடமையென்றும் சொல்லிவிட்டு தனது மலாய் நாட்டு வரவைப் பற்றி இங்கு ஏற்பட்டிருந்ததாய் சொல்லிக் கொள்ளப்பட்ட சில எதிர்ப்பு பிரஸ்தாபங்க ளைக் கேட்டு தனக்கே தனது தொண்டில் சிறிது சந்தேகம் ஏற்பட்டு தாம் ஏதாவது பெரிய தப்பிதம் செய்கின்றோமா என்றுகூட யோசித்ததாகவும் ஆனால் பினாங்கைப் பார்த்த பிறகு...

ஈரோடு ஆலயப் பிரவேசம் 0

ஈரோடு ஆலயப் பிரவேசம்

ஈரோடு ஆலயப் பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரிகை யில் சில விஷயமும் காணப்படுகின்றது. அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானம் செய்யப்பட்டது முதல் “தமிழ்நாடு” பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப் பிரசாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும். அத்தீர்மானம் நிறைவேறிய பின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச் சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப் பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்து விட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால் நம்மைக் கேட்காமல் திடீரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்தபோது சிலர் ஆலயப் பிரவேசத்திற்கு “நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள் இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆதலால் அதைப் பற்றி நீ கேழ்க்க வேண்டியதில்லை” என்று சொன்னார்கள். இதை அனுசரித்து திரு. ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு...

செங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல் 0

செங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்

செங்கல்பட்டு ஜில்லா போர்டுக்கு 30-1-29 தேதியில் தலைவர் தேர்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சு மாதம் 31 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு சேதியும் தேர்தல் நடந்து ராவ் சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத் திருக்கின்றது. எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான திரு. திவான்பகதூர் எம். கே. ரெட்டியாருக்காவது அல்லது திரு. ராவ் சாகிப் சி. ஜெயராம் நாயுடுகாருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளி யாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய் விடக் கூடாது என்பதே நமது ஆசை. இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க நாம் கொஞ்ச காலத்திற்கு முன் “பார்ப்பனர்களும் பார்ப்பனக் கூலிகளும் அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளியாக அடங்கிப் போய் விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களை...

பூரண சுயேச்சைப் புரட்டு 0

பூரண சுயேச்சைப் புரட்டு

அரசியல் புரட்டுகள் நாளுக்கு நாள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி, மக்களை ஏமாற்றி நாட்டைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றது என்பதற்கு உதாரணம் இந்திய தேசிய காங்கிரஸ் என்பது. “இந்தியா பூர்ண சுயேச்சை அடைய வேண்டும் என்பது காங்கிரஸ் லட்சியம்” என்பதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதே போதுமான அத்தாட்சியாகும். மத சம்மந்தமான புரட்டுகளுக்கு மதிப்பு குறைந்த பின்பே தந்திரக்காரர்களும் சுயநலக் காரர்களும் ஏமாற்றி வயிரு வலிப்பவர்களும் இந்த அரசியல் புரட்டை இவ்வளவு ஆதிக்கத்திற்கு கொண்டு வர வேண்டியதாகி விட்டது. இன்றைய தினம் இந்தியாவிலுள்ள மக்களில் லக்ஷத்தில் ஒருவருக்குக் கூட பூர்ண சுயேச்சை என்றால் என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதனால் நமக்கு என்ன பலன் உண்டு என்பன போன்ற விஷயங்கள் சிறிதும் தெரிந்திருக்காதென்றே சொல்லலாம். அது மாத்திரமல்லாமல் பூரண சுயேச் சைத் தீர்மானம் கொண்டு வந்தவர்களும் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தவர்களுமே அதற்கு ஏதாவது ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டு அல்லது தங்களுக்குள்ளாகவே விளக்கிக்...

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் 0

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்

தஞ்சை ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் இம்மாதம் 27 ² நடைபெறக் கூடும் என்று தெரியவருகின்றது. அத்தேர்தலில் நமது நண்பரும் சுய மரியாதை இயக்க சங்கத்தின் உப தலைவருமான ராவ்பகதூர் உயர்திரு. எ. டி. பன்னீர் செல்வம் அவர்களே அநேகமாய் மறுபடியும் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றே எதிர்பார்க்கின்றோம். ஆயினும் அவரது வெற்றிக்கு விரோதமாய் ஒரு உணர்ச்சிமிக்க முயற்சியாய் வேலை செய்து வருவதாயும் தெரியவருகின்றது. திரு. செல்வம் அவர்கள் வெற்றிக்கு விரோதமாய் வேலை செய்கின்ற உணர்ச்சிக்கு நியாயமான தகுந்த காரணங்கள் ஏதாவது இருந் தாலும் இருக்கலாம். ஆயினும் நாம் திரு. செல்வம் அவர்கள் வெற்றியையே மன, மொழி, மெய்களால் கோர வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். ஏனெனில், பொதுவாக தஞ்சை ஜில்லா பொதுமக்களைப் பொறுத்த வரையி லும் குறிப்பாக பார்ப்பனரல்லாதார் நன்மையைப் பொறுத்த வரையிலும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைப் பொறுத்த வரையிலும் திரு எ. டி. பன்னீர் செல்வம் அவர்களே தஞ்சை ஜில்லா போர்டுக்கு...

நாகர்கோவில் மகாநாடு 0

நாகர்கோவில் மகாநாடு

சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவின் கீழ் திருவாங்கூர் சமஸ் தானத்தைச் சேர்ந்த நாகர்கோவிலில் டிசம்பர் 27, 28-ல் கூடிய அகில திருவாங்கூர் சமுதாயச் சீர்திருத்த மகாநாட்டின் சுருக்கமான நடவடிக்கை களை மற்றோரிடத்தில் வெளியிட்டிருக்கிறோம். இம்மகாநாட்டைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன், நாம் அதற்குப் போகக் கூடாமல் போனதற்காக நமது சமாதானத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். இம் மகா நாட்டை நடத்துவதற்காக மாதக் கணக்காய் பெருமுயற்சி எடுத்து ஏற்பாடு செய்து வந்த திருவாளர் பி. சிதம்பரம் பி. ஏ. பி. எல். அவர்களின் விருப்பத் திற்கிணங்க நாமும் வருவதாக ஒப்புக் கொண்டதோடு நமது சவுகரியத்தை உத்தேசித்தே மகாநாடும் 2, 3 தடவை ஒத்திவைக்கப் பட்டதாயினும், திடீ ரென்று எதிர்பாராமல் மலேயா நாட்டிலிருக்கும் நமது சகோதரர்கள் பெருஞ் செலவில் ஒரு மகாநாட்டை நடத்துவதாக ஏற்பாடு செய்து கொண்டதோடு, நமது சுற்றுப் பிரயாணத்தைப் பற்றிய நீண்ட அறிக்கையையும் வெளியிட்டு விட்டு, நமக்கு அவசரமாக உடனே புறப்படுமாறு தந்திச் செய்தி...