செங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்
செங்கல்பட்டு ஜில்லா போர்டுக்கு 30-1-29 தேதியில் தலைவர் தேர்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தேர்தல் அடுத்த மார்ச்சு மாதம் 31 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு சேதியும் தேர்தல் நடந்து ராவ் சாகிப் திரு. ஜெயராம் நாயுடு அவர்கள் தலைவராக தேர்தல் ஆகிவிட்டதாக ஒரு சேதியும் கிடைத் திருக்கின்றது. எப்படியானாலும் தேர்தல் முடிவு நமது உண்மை நண்பர்களான திரு. திவான்பகதூர் எம். கே. ரெட்டியாருக்காவது அல்லது திரு. ராவ் சாகிப் சி. ஜெயராம் நாயுடுகாருக்காவது ஆகாமல் அதற்கு விரோதமாய் வெளி யாருக்கு அதாவது பார்ப்பன அடிமைகளுக்குப் போய் விடக் கூடாது என்பதே நமது ஆசை. இருவரும் சுயமரியாதை வீரர்களே ஆவார்கள். நிற்க நாம் கொஞ்ச காலத்திற்கு முன் “பார்ப்பனர்களும் பார்ப்பனக் கூலிகளும் அடிமைகளும் அவர்களது யோக்கியதை வெளியாக அடங்கிப் போய் விட்டார்கள். ஆனாலும் மறுபடியும் தலைகாட்ட நமக்குள் ஏதாவது சண்டை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னபடிக்கு இச்சிறு விஷயங்களை கண்டே பார்ப்பனர்களும் அடிமை களும் தலைநீட்ட புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஜாண் நீட்டினால் முளம் கத்தரிக்க நமக்கு சக்தி உண்டு. பழய ஆயுதங்கள் எண்ணை இட்டு உரையில் வைத்திருக்கின்றதே தவிர மழுங்கிப் போய்விட வில்லை. யாரும் பயப்படத் தேவையில்லை.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 02.02.1930