“சித்திரபுத்திரன்”
சைவன் : – அய்யா, தாங்கள் இப்போது மலேயா நாட்டுக்குப் போய் வந்த பிறகு சைவமாய் விட்டீர்களாமே உண்மைதானா?
வைணவன் : – ஆம் அய்யா, நான் நாலுகால் பிராணிகளில் கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவைகளையும், இரண்டு கால் பிராணிகளில் ஏணி வகையராவும், ஆகாயத்தில் பறப்பவைகளில் பட்டம், ஏரோபிளேன் வகைய ராக்களையும், நீரில் வாழ்பவைகளில் கப்பல், படகு, கட்டு மரம் முதலியவை களையும், பூமியில் நகருபவைகளில் வண்டி, மோட்டார் கார் முதலியவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. இவைகளைச் சாப்பிடுவது பாவம் என்று எனக்குப் பட்டதினாலும் சைனாக்காரர்களைப் பின்பற்றுவதாலும் இம்மாதிரி முடிவு செய்துவிட்டேன்.
சைவன் : – அப்படியா, இது நல்ல சைவம் தான். எனக்குச் சற்று வேலை இருக்கின்றது. சீக்கிரம் போக வேண்டும் நான் போய் விட்டு வரு கிறேன். ( என்று சொல்லிக் கொண்டே தன்னை எங்கு சாப்பிட்டு விடுவானோ என்று நினைத்து ஓடிவிட்டார். )
குடி அரசு – உரையாடல் – 09.02.1930