உதிர்ந்த மலர்கள்
1. நமது நாடு பார்ப்பனீய ஆதிக்கத்திலும் பணக்கார செல்வாக்கிலும் இருக்குமட்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்துதான் ஆகவேண்டும்.
2. பூரண சுயேச்சை என்பது ஒரு மனிதன் எந்த விதத்திலும் எதற்கும் அடிமைபட்டிறாத விடுதலை என்றால் நான் அதை மனப்பூர்வமாய் வரவேற்கின்றேன்.
அப்படிக்கில்லாமல் பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டு போவதும் (திரு. காந்தி சொல்லும்) ராம ராஜ்ஜியம் ஏற்படுத்துவதும் என்றால் ருஷிய அரசாங்கத்தையே நான் கூவி அழைக்க முந்துவேன்.
3. இந்த நாட்டிற்கு சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்டு அதை அமுலில் நடத்திவைக்கும் ஆசை பொது மக்களுக்கு ஏற்பட்டதற்காக யாருக்காவது நன்றி செலுத்த வேண்டுமானால் அது முதலில் திருமதி மேயோ அம்மைக்கு உரியதாகும்.
( ஈ. வெ. ரா.)
குடி அரசு – துணுக்குகள் – 02.02.1930