தேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத்திருத்தம்
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறையை கூச்சநாச்ச மின்றி பயன்படுத்தி வருகிறது மோடி ஆட்சி. தேர்தல் ஆணையமோ, மல்லிகைப் பூவில் அடிப்பதுபோல் பா.ஜ.க.வினருக்கு ‘காதல் கடிதங்களை’ எழுதிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு நேர்மையாக ஆணையம் செயல்படுவதுபோல் மக்கள் காதில் பூ சுற்றுகின்றனர். தேர்தல் களத்தை நேர்மையாக நடத்துவதாக நாடகம் போடும் மோடி ஆட்சியின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்போது உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது ‘தேர்தல் பத்திரம்’ தொடர்பான வழக்கு. அது என்ன தேர்தல் பத்திரம்? கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிமுகப்படுத்திய திட்டம். இதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும் நிறுவனங்கள் ரொக்கமாகப் பணம் தருவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வங்கியில் மின்னணு எந்திரம் வழியாக நன்கொடை செலுத்தி தொகைக்கான பத்திரத்தைப் பெற்று அந்தப் பத்திரத்தை கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இதற்காக இந்திய ஸ்டேட் வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரையில்...