‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ முறையைக் கொண்டு வந்தது யார்?

மீத்தேன், ஷேல்கேஸ் போன்ற பூமிக்கடியில் உள்ள இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கு தனித்தனியாக அனுமதி பெறும் ‘நெல்ப்’ முறையை மாற்றி ‘ஹெல்ப்’ எனப்படும் ஒற்றை உரிமத்தை பெற்றால் போதும்; ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமிக்கடியில் உள்ள எந்த இயற்கை வளங்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

பன்னாட்டு முதலாளிகள் இந்திய இயற்கை எரிவாயு வளங்களை கொள்ளையடிப்பதற்காக, ‘தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டம்’ என்ற புதிய கொள்கையின்படி எண்ணெய் வயல்களை மத்திய ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அடையாளம் கண்டு அதை ஏலம் விட்டுக் கொண்டுள்ளது. இதில் பெயரளவிற்கு ஒரு சில இடங்களை மட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு பெரும்பாலான இடங்களை தனியார், பன்னாட்டு கம்பெனிகளுக்கு வழங்கியுள்ளது.

உதாரணத்திற்கு 28.8.2018இல் நாடு முழுவதும் 55 இடங்களை ஏலத்திற்கு விட்டதில் வேதாந்தா நிறுவனம் 41 இடங்களைப் பெற்றுள்ளது. எச்.ஓ.இ.சி. ஒரு இடம் பெற்றுள்ளது. மீதியுள்ள

13 இடங்கள்தான் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது.

ஆக மொத்தமுள்ள 55 இடங்களில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு 42 இடங்களும், பொதுத் துறைக்கு 13 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மோடியின் அப்பட்டமான கார்ப்பரேட் பாசம் இதிலிருந்து வெளிச்சமாகிறது.

மேலும் நூற்றுக்கணக்கான இடங்களில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒதுக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 11042019 இதழ்

You may also like...