Tagged: 01022016

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடி புகைப்படங்கள்

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும்,மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, மதிமுகவின் மாநில மீணவரனி செயலாளர் தோழர்.நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து SDPIயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.மை.அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இவர்களைத்...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – பழனி புகைப்படங்கள்

பழனியில் ஆர்ப்பாட்டம் ! பழனி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் “ரோகித் வெமுலா” மரணத்துக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் (01-02-2016) பழனி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். தோழர்கள் ஆனந்த்,கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் திருச்செல்வம்,காளிமுத்து,சிவமணி கண்டன உரையாற்றினர். இறுதியில் தோழர் குட்டி நன்றியுரை ஆற்றினார். பார்ப்பன “துரோணாச்சாரி”களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள் ?”ஏகலைவன்”களாக இனியும் இருக்கமாட்டோம் ! என முழக்கங்கள் எழுப்பட்டன.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – வேலூர் புகைப்படங்கள்

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் வேலூரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தி வி க மாவட்ட அமைப்பாளர் இரா.ப.சிவா, திலிபன்.வி சி க, துரை.ஜெய்சங்கர்,தா ஒ வி இ, செவ்வேள். தி வி க நரேன். சந்தோஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – திருப்பூர் புகைப்படங்கள்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள்,தோழர் அகிலன்,கவிஞர் கனல்மதி,தனபால்,பரிமளராசன் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் தோழர் பிரசாந்த அவர்கள் நன்றியுரையாற்றினார். பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்கமாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்திற்கு நீதி கேட்போம்! என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – மன்னார்குடி புகைப்படங்கள்

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! மன்னார்குடியில் 01.02.2016 அன்று மாலை கண்டன ஆர்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டும், தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ், மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி, மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் இருவரையும், பதவி நீக்கம் செய்யகோரியும், திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் முகமது அலி,...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி புகைப்படங்கள்

கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் ! கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஹைதராபாத் பல்கலை கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் 01.02.2016, அன்று மாலை,5.00மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இராஜேஷ் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நீலகிரி குமார், மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட துணை தலைவர் நீலகிரி கிருஷ்ணன், முன்னால் மாவட்ட அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் கிரி,எல்லப்பன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பிரேம்குமார் நன்றி கூறினார்

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – நாமக்கல் புகைப்படங்கள்

நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் ! “ரோஹித் வெமுலா” மரணத்திற்கு நீதிகேட்டு 01.02.2016, அன்று மாலை,5.00மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. தலைமை: தோழர்.முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர்.திவிக. முன்னிலை: தோழர்.மா.வைரவேல். மாவட்ட அமைப்பாளர்.திவிக. தோழர்.மு.சரவணன். மாவட்ட செயலாளர். திவிக. கண்டன உரை: தோழர்.மு.சாமிநாதன். மாவட்ட தலைவர். திவிக. தோழர்.இரா.செல்வகுமார். மாநில கொ.ப.செயலாளர். ஆதித்தமிழர் பேரவை. தோழர்.ஆ.ஆதவன். மாநில துணைசெயலாளர். தமிழர் படை.(தவாக) தோழர்.வே.காமராஜ். மேற்கு மாவட்ட செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.செந்தமிழன். மாவட்ட செயலாளர். தமிழ்புலிகள். தோழர்.செம்மணி. தொகுதி செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.பெரியண்ணன். மல்லை ஒன்றிய தலைவர்.திவிக. தோழர்.சுடர்வளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.இரா.பிரகாசு. இளைஞரணி செயலாளர்.திவிக. தோழர்.மாணிக்கம். நகர செயலாளர். புரட்சிகர இளைஞர் முண்ணனி. தோழர்.சி.சிவகுமார். திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: தோழர். மு.சரவணன். நகர செயலாளர். மாவட்டம் முழுவதுமாக இருந்து 50க்கும் மேற்பட்ட கழகத்தோழர்கள் கலந்துக்கொண்டனர். செய்தி : மா.வைரவேல். மாவட்ட...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சென்னை புகைப்படங்கள்

சென்னையில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நேற்று 01.02.2016 திங்கள் மாலை 3.00 மணியளவில் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் . ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திவிக வழக்கறிஞர்கள் அருண்,திருமூர்த்தி, ஊடகவியலாளர் தோழர் கவின் மலர், வாலாசா வல்லவன் மா.பெ.பொ.க, குமார் த.பெ.தி.க., தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் அரக்கோணம், வே.மதிமாறன் எழுத்தாளர், SDPI தலைவர் தேஹலான் பாகவி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் ம.வேழவேந்தன் நன்றி கூற மாலை ஆறரை மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.