Tagged: பெரியார் முழக்கம் 14112013 இதழ்

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

விண்வெளித் துறையின் மூடநம்பிக்கை

இ°ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் – ஒவ்வொரு செயற்கைக்கோள் ஏவும்போதும் திருப்பதி ஏழுமலையான் ஆசி பெறுகிறார் இ°ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவதில்லை என்று இ°ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐ.ஏ.என்.எ°. செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.   அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், இதுவரை செவ்வாய்கிழமையன்று ஒரு ஏவுகணைகூட ஏவப்பட்ட தில்லை. அது ஒரு ராசியில்லா நாள் என்பதுதான் காரணமாகும். செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன்ஆராய்ச்சி செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இ°ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி தான் செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். விண்வெளிக்கலம் 12அய் ஏவிய பிறகு, 13 அய் தவிர்த்துவிட்டு, 14 அய் ஏவியது ஏன்? 13 ராசியில்லாத...

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!

ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை களுக்கு உள்ளான வரலாற்றின் கொடூரத்துக்கு நீதி கேட்டால், ‘ஓட்டு அரசியல்’ என்று சிறுமைப்படுத்து கின்றன பார்ப்பன ஏடுகள். இனப்படுகொலை நடந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு கூட்டப்படுகிறதே என்பது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. மன்மோகன் சிங் பங்கெடுக்காமல் தவிர்த்து விட்டாரே என்பதற்காக, அனலில் இட்ட புழுவாகத் துடிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 11 முறை காமன்வெல்த் மாநாடு கூடியிருக்கிறது. இதில் 5 முறை இந்தியாவின் பிரதமர் பங்கேற்றது இல்லை; இது 6 ஆவது முறை. அவ்வளவு தான்! மன்மோகன் சிங் பங்கேற்காமல் போனதால் இலங்கை யுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோலவும், அதற்குப் பிறகு எப்படி, தமிழர் உரிமைக்கும், மீனவர் பாதுகாப்புக்கும் இலங்கையிடம் பேச முடியும் என்றும் ‘இந்து’வின் ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகள் குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றன. 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் நடந்த நேரத்தில்கூட ராஜபக்சே தரப்பு நியாயங்களை எழுதிக் கொண்டிருந்த ஏடுதான் ‘இந்து’...

பல்லாயிரம் தமிழர்கள் திரண்டனர்; ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்பட்டது

பல்லாயிரம் தமிழர்கள் திரண்டனர்; ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்பட்டது

ஈழத்தின் இறுதிப் போரில் உயிர்துறந்த பல்லா யிரம் மக்களின் நினைவாக தஞ்சையில் முள்ளி வாய்க்கால் முற்றம் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில்  எழுப்பப்பட்டுள்ளது. நெஞ்சை உலுக்கும் படுகொலை காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட் டுள்ளன. ஈழத் தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 20 தமிழினப் போராளிகளின் சிலைகளும், தமிழ் வளர்த்த அறிஞர், பேராசிரியர் படங்களும் இடம் பெற்றுள்ளன. காவல்துறை கெடு பிடிகளால் நீதிமன்ற அனுமதியோடு திட்டமிட்டதற்கு இரண்டு நாள் முன்னதாக முற்றம் திறக்கப்பட்டது. 7, 8, 9 தேதிகளில் தமிழக முன்னணித் தலைவர்கள், கலைத் துறையைச் சார்ந்தவர்கள், உணர்வாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தன. உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்த இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பழ. நெடுமாறன், இந்த முற்றத்தை தமிழர்களுக்கு சமர்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் விழாவில் திரண்டிருந்தனர். கலைநயத் துடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களும், ஓவியங் களும் உணர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது என பலரும் தெரிவித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர்...

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும் என முக்கியக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் இராமதா°, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ராமதா° : “நாட்டின் பாதுகாப்புக்காக அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொளத்தூர் மணியை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து பா.ம.க. தொண்டர்கள் 134 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு 4 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது மற்ற அரசியல் கட்சிகள் இதனைக் கண்டித்திருந்தால் இப்போது கொளத்தூர் மணி மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்காது. தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். உடனடியாக கொளத்தூர்...

சேலம் கழகச் செயலவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் : வன்முறை போராட்ட வடிவம் உடன்பாடானதல்ல!

சேலம் கழகச் செயலவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் : வன்முறை போராட்ட வடிவம் உடன்பாடானதல்ல!

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை 5.10.2013 அன்று சேலத்தில் செயலவைத் தலைவர் க. துரைசாமி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் கூடியது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன: பெரியார் கொள்கைகளை பெரியார் வழியில் மக்களிடம் கொண்டு செல்வதையே இலட்சிய மாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். அந்த அடிப்படையில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஈழ விடுதலை, தமிழின உரிமைகளுக்காக தொடர்ந்து இயக்கங்களையும் பரப்புரைகளையும் நடத்தி வருகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறைக்கு எதிரான, வன்முறை சார்ந்த போராட்ட வடிவங்கள் கழகத்திற்கு உடன்பாடானது  அல்ல. இத்தகைய, கழகத்தின் உடன்பாடு இல்லாத, போராட்ட முறைகளை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சென்னை, சேலத்தைச் சார்ந்த 7 தோழர்களும் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் மீது கழக சார்பில் விசாரணை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும். சேலம் வழக்கில் கழகத்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

சேலம் வருமான வரித் துறை அலுவலக வளாகத்தில் சாக்குகளில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை நனைத்து கொளுத்தி வீசிய குற்றச்சாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கிருஷ்ணன், அருண்குமார், அம்பிகாபதி ஆகியோர் கைது செய்யப் பட்டனர். இதே வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் காவல்துறை இணைத்து கைது செய்தது. 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடன் அனைவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124(ஏ), 120(பி), 307, 285 உடன் தமிழ்நாடு பொதுச் சொத்து பாதிப்புச் சட்டப் பிரிவு 3(1), 1908 ஆம்ஆண்டின் எரிபொருளால் ஆபத்து களை உண்டாக்கக்கூடிய சட்டத்தின் பிரிவு 3, ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, அருண் ஆகியோர் அயராது செயலாற்றுகின்றனர். சென்னையில் மயிலை, மந்தைவெளி அஞ்சலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச் சாட்டில்  கைது...

மண்ணை மணந்த மணாளர் பெரியார்

மண்ணை மணந்த மணாளர் பெரியார்

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம் பெற்றுள்ள தமிழக தலைவர்களின் படங்களில் பெரியார் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் கேட்ட தோழர்களிடம், ‘தமிழகத் தலைவர்கள் – தமிழுக்காக உழைத்தவர்கள் – தமிழ் எழுத்தாளர்கள் – தமிழ்ப் பேச்சாளர்கள்’ என்ற நான்கு வகைப்படுத்தலிலும்  பெரியார் எதிலும் இடம் பெறவில்லை என்று அமைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்ட தாம். பெரியாருக்கு சான்றிதழ்களை வழங்கும் உரிமைகளை இவர்களே கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விழாவில் பேசிய மருத்துவர் இனியன் இளங்கோ, தனது உரையிலேயே பெரியார் புறக்கணிப்பை சுட்டிக் காட்டியிருக்கிறார். பெரியார் பேச்சு-எழுத்து பற்றி ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ வ.ரா. என்று அழைக்கப்படும் ராகவ அய்யங்கார், ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, திரு.வி.க. ஆகியோரின் கருத்துகளை இங்கு பதிவு செய்கிறோம். வ.ரா. எழுதுகிறார் “தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்; சுவாமியைக் குப்புறப் போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைக் காட்டிலும் பழுத்த நாத்திகன் வேறு எவருமே இருக்க முடியாது....

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ திராவிடர் விடுதலைக் கழகம், ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி உழைக்கும் மக்களை, மாணவர்களை, பெண்களை, ஆதரவாளர்களை, தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடைகளைத் திரட்ட  வேண்டும். இப்படி 10 ரூபாய் நிதி திரட்டும் இயக்கத்துக்கு ஒவ்வொரு தோழருக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.10,000/-. நிதி திரட்டுவதோடு ஒவ்வொரு தோழரும் 5 புதிய தோழர்களை இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். ‘நண்பர்களை தோழர்களாக்குவோம்; தோழர்களை இயக்கமாக்குவோம்’ என்ற குறிக்கோளோடு 10 ரூபாய் நிதி சேர்ப்புத் திட்டம் தொடங்குகிறது. இதற்கான நன்கொடை சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. கழகத்தின் பொருளாளர் இரத்தினசாமி அவர்களுடன்  தோழர்கள் தொடர்புகொண்டு இதற்கான நன்கொடை ரசீதுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேலம் சிறையில் உள்ள நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இத் திட்டத்தில் தோழர்கள் முனைப்போடு களமிறங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார். தோழமை அமைப்புகளின்...

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

நிதிகேட்டு வருகிறோம்: ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

தமிழர் சமுதாயத்தின் விடிவெள்ளியாம் பெரியார் கொள்கைகளுக்காக கொளத்தூர் மணி தலைமையில் செயல்படும் இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். திராவிடர் விடுதலைக் கழகம் – ஜாதி-தீண்டாமைக்கு எதிராக களமிறங்கிப் போராடுகிறது. மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் தனியார் தொழில்துறைகளில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக இயக்கங்களை நடத்துகிறது. அரசு நிறுவனங்கள் மதச்சார்பற்றதாய் செயல்பட போராடுகிறது. இராஜபக்சேயின் இனப்படுகொலை போர்க் குற்றங்களுக்கு எதிராய் நீதி கேட்டு நிற்கிறது. மரணதண்டனைக்கு எதிராகவும் மக்கள் விரோத கூடங்குளம் அணுமின் திட்டங்களுக்கு எதிராகவும், பறிக்கப்படும் தமிழர் வாழ்வுரிமைகளுக்காகவும் தோழமை அமைப்புகளோடு களமிறங்கி செயலாற்றுகிறது. பெண்ணடிமைக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மக்களைச் சந்தித்து கருத்துகளை பரப்புகிறது. மனித உரிமைகளுக்கும் அடக்குமுறை சட்டங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டை 12 ஆண்டுகளாக நடத்து வதோடு, பெரியாரிய சிந்தனைகளை நூல்களாகவும் வெளியிட்டு பரப்பி வருகிறது. தொய்வில்லா களப்பணியில் தொடர்ச்சியாக நிற்கும் திராவிடர் விடுதலைக்...

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

  திராவிடர் கழகப் பொருளாளர் மானமிகு கோ. சாமிதுரை (81), 9.11.2013 அன்று சென்னையில் முடிவெய்தினார். தி.மு.க. தலைவர் கலைஞர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது உடல், சொந்த ஊரான கல்லக்குறிச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடந்தன. தி.க. தலைவர் கி.வீரமணி இறுதி மரியாதை செலுத்தினார். வழக்கறிஞரான கோ. சாமிதுரை, வழக்கறிஞர் தொழிலைவிட்டு, முழு நேரம் திராவிடர் கழகத் தலைமைக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியார் முழக்கம் 14112013 இதழ்

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

கட்சியின் சின்னத்தை – அரசின் சின்னமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.                – மினி பேருந்தில் இரட்டை இலை இடம் பெற்றிருப்பதை        எதிர்த்து மு.க. °டாலின் வழக்கு! நியாயமான கோரிக்கை! அப்படியே, கட்சியின் கொடியைப் போலவே தேசியக் கொடியையும் உருவாக்கியிருக்கும் காங்கிர° கட்சியையும் இந்த வழக்கில் சேர்க்கலாமே! சி.பி.அய். அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்று கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.- செய்தி நல்லதாப் போச்சு! தடைவிதிக்காதிருந்தால் கவுகாத்தி உயர்நீதிமன்றமே சட்டபூர்வமானது அல்ல என்று சி.பி.அய். வழக்குப் பதிவு செய்திருக்கும்! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்று வருத்தம் தெரிவித்து, ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் சுருக்கமான கடிதம். விளக்கம் எதுவும் எழுதவில்லை.             – செய்தி அதுவரை நல்லது. இலங்கை அரசு மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நல்லாட்சி நடத்துவதற்கு வாழ்த்துகிறேன் என்று எழுதிவிட்டால் வீண் வம்பு! இலங்கை இராணுவத்தின் ‘கொலைக் களங் களை’ அம்பலப்படுத்திவரும் சேனல்-4 தொலைக்...