தி.க. பொருளாளர் கோ. சாமிதுரை முடிவெய்தினார்

 

திராவிடர் கழகப் பொருளாளர் மானமிகு கோ. சாமிதுரை (81), 9.11.2013 அன்று சென்னையில் முடிவெய்தினார். தி.மு.க. தலைவர் கலைஞர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரது உடல், சொந்த ஊரான கல்லக்குறிச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடந்தன. தி.க. தலைவர் கி.வீரமணி இறுதி மரியாதை செலுத்தினார். வழக்கறிஞரான

கோ. சாமிதுரை, வழக்கறிஞர் தொழிலைவிட்டு, முழு நேரம் திராவிடர் கழகத் தலைமைக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...