Tagged: சமஸ்கிருத திணிப்பு

திவிக வரவேற்கிறது இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு ஆதரவு’...

ஜூலை 8ஆம் தேதி மாவட்டங்களில் கழகம் ஆர்ப்பாட்டம் ‘சமஸ்கிருதத்தை எட்டாவது பட்டியலிலிருந்து நீக்குக!”

ஜூலை 8ஆம் தேதி மாவட்டங்களில் கழகம் ஆர்ப்பாட்டம் ‘சமஸ்கிருதத்தை எட்டாவது பட்டியலிலிருந்து நீக்குக!”

மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய்.அய்.டி.களிலும் மத்திய பாடத் திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளி களிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது. சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாக அறிவித்திருக் கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. அது பேச்சு மொழியாகவும் இல்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டதாக எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை. கண்டுபிடிப்புகள் வந்த பிறகு சமஸ்கிருத நூல்களிலேயே இருக்கிறதே என்று கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது. சமஸ்கிருத...

நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் சென்னை 03012017

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழாவில் மாபெரும் கருத்தரங்கம் திரு மா சுப்பிரமணியன் MLA அவர்கள் தலைமையில் 03012017 மாலை 5.00 மணிக்கு சென்னை நீலாங்கரை சுகன்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சமஸ்கிருத திணிப்பு என்னும் தலைப்பிலும், சுப.வீ அவர்கள் நீட் தேர்வு என்ற தலைப்பிலும், கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பிலும் நீண்டதொரு கருத்துரை வழங்கினார்கள்

சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்! கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்! கழகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்டிருக்காத போது, சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது. எனவே ஆட்சி மொழிப் பட்டியலி லிருந்து அதை நீக்கக் கோரியும், மத்திய அரசு அய்.அய்.டி., சி.பி.எஸ்.ஈ., பள்ளிகளில் சமஸ்கிருத்தைப் பாடமாக திணிப்பதைக் கண்டித்தும் கல்வி உரிமையை பொதுப் பட்டியலிலிருந்து நீக்கி மீண்டும் மாநில உரிமைப் பட்டியலுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும், கடந்த 8 ஆம் தேதி தமிழகம் முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அது குறித்த செய்திகளின் தொகுப்பு:   சென்னையில் கல்வியில் மத்திய பா.ஜ.க. அரசின் சமஸ்கிருததிணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழிபட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08.07.2016 வெள்ளிக்கிழமை காலை 10  மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரியல் சிந்தனையாளர் வாலாசா வளவன் (மா.பெ.பொ.க), கண்ணன் (மக்கள் விடுதலை), தந்தை பெரியார்  திராவிடர் கழகத்தின் சார்பில்...

மேட்டுபாளையத்தில் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! நடுவண் அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு 09.07.2016 அன்று மாலை 5 மணிக்கு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார், முன்னிலை- கள்ளகரை சுந்தரமூர்த்தி கண்டன உரை- தோழர்கள் நிர்மல்குமார், பன்னீர்செல்வம், சுதாகர் இயற்கை நல் வாழ்வு சங்கம், தோழர்மூர்த்தி தலைவர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , sdpi நகர தலைவர் பாருக்அப்துல, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய நகர தலைவர் பீர் முகமது, நே்ருதாஸ், கலந்துக்கொண்ட தோழர்கள் கிருஷ்ணன், கணேஷ், இனியவன், அலெக்ஸ்,விஷ்ணுபிரசாந்த், தேவபிரசாத், வசந்தகுமார், தேவா ஆகியயோர் கலந்துகொண்டனர் முருகேஷ் நன்றி தெரிவித்தார்

சமஸ்கிருத திணிப்பை மோடி அரசு கைவிடவேண்டும் – மன்னார்குடி திவிக ஆர்பாட்டம்

மன்னார்குடி ஜூலை 9 மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துக்கள் ஏராளம் இருப்பதாக கூறி, ஐஐடிகளிலும், மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும், சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அலுவல் மொழிகள் பட்டியலில் எட்டாவது மொழியாக சமஸ்கிருதத்தை அறிவித்துள்ளது. இவற்றை கைவிட வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மனிதநேய ஜனநாயகட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜகபர்சாதிக், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சேக்தாவூத், தொகுதி தலைவர் முகமது அலி தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறுநீலகண்டன், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாடசி சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தொகுதி துணை செயலாளர்...

சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும்,மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் 08-.07.2016 அன்று மாலை 4 மணிக்கு ,மயிலாடுதுறை.,சின்னக்கடை வீதி,நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. நகர அமைப்பாளர் G.R..செந்தில் குமார் தலைமை தாங்கினார்.மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் பேராசியர் ஜெயராமன் அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் சபீக் அகமது SDPI கட்சி, அப்துல் கபூர்,மனித நேய மக்கள் கட்சி.சுப்பு.மகேஷ்,தமிழர் உரிமை இயக்கம். வழக்குறைஞர் சங்கர்,கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்.வேலு.குணவேந்தன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பு அருகிலுள்ள நகராட்சி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்  வே.சதா தலைமை தாங்கினார். தோழர்கள் தமிழ் மதி, சூசையப்பா, நீதி அரசர், தமிழ் அரசன், மஞ்சுகுமார், ஸ்டெல்லா, விஸ்ணு, ஜாண்மதி, மற்றும்கழக தோழர்கள், ஆதரவாளர்கள், மக்கள்அதிகாரம் அமைப்பினர், சமூகநீதிக்கான சனநாயக பேரவை அமைப்பினர், மதிமுகவினர் கலந்துக்கொண்டு மத்திய அரசைக் கண்டித்து எதிர்ப்பு முழக்கம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

சமஸ்கிருத திணிப்பு துண்டறிக்கைக்கான செய்திகள்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 08.07.2016 அன்று மாவட்ட தலை நகரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை வாசகங்கள். ———————————————————- மத்திய அரசே ! சமஸ்கிருதத்தை திணிக்காதே ! அலுவல் மொழிகள் பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கு ! • மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய் .அய் .டி.களிலும் மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது. • சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப்பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். • அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ்.சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாகஅறிவித்திருக்கிறது. • ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. • இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. • அது பேச்சு மொழியாகவும்...