ஜூலை 8ஆம் தேதி மாவட்டங்களில் கழகம் ஆர்ப்பாட்டம் ‘சமஸ்கிருதத்தை எட்டாவது பட்டியலிலிருந்து நீக்குக!”
மேட்டூரில் கூடிய செயலவைக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
- மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய்.அய்.டி.களிலும் மத்திய பாடத் திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளி களிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது.
- சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும்.
- அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாக அறிவித்திருக் கிறது.
- ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது.
- இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை.
- அது பேச்சு மொழியாகவும் இல்லை.
- எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டதாக எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை.
- கண்டுபிடிப்புகள் வந்த பிறகு சமஸ்கிருத நூல்களிலேயே இருக்கிறதே என்று கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது.
- சமஸ்கிருத மொழியில் இந்தியாவில் ஒரு பத்திரிக்கைகூட வெளிவரவுமில்லை.
- சில ஆயிரம் பேர் மட்டுமே அறிந்திருப்பதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்ய்ப்பட்டுள்ள மொழி சமஸ்கிருதம்.
- எனவே அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அதிகாரப்பூர்வ மொழியாக வைத்திருப்பதையே மறுபரிசீலனை செய்து சமஸ்கிருதத்துக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை நீக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்து கிறது.
நடுவண் அரசின் சமஸ்கிருதத் திணிப்புகளை எதிர்த்தும், எட்டாவது அட்டவணையிலிருந்து சமஸ்கிருதத்தை நீக்கக் கோரியும் 08-07-2016 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது
பெரியார் முழக்கம் 30062016 இதழ்