வாசகர்களிடமிருந்து
டி எம் நாயரின் அற்புதமான பேச்சு நீதிக்கட்சியை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான டாக்டர் டி எம் நாயர், 1917ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் நிகழ்த்திய உரை வரிக்கு வரி அர்த்தம் பொதிந்தது. எல்லாரும் மதிக்கும் என்னை கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான், “ஏடா, நாயர்’ என்று கேவலமாகவே அழைப்பார்கள் என்ற வரிகளைப் படித்தபோது கண்ணீர் வந்தது. நீதிக்கட்சி தலைவர்களிலேயே நாயர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார். நான் படித்த ஒரு வரலாற்றுச் செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1904ஆம் ஆண்டு நாயர் சென்னை நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “சென்னை பார்த்தசாரதி கோயில் குளத்துக்கு வரி இல்லாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று தீர்மானத்தை நீதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவராக பிறகு உருவாகிய சர். பிட்டி தியாகராயர் கொண்டு வந்தபோது நாயர் அதை எதிர்த்தார். “கோயில் வருமானத்திலிருந்து வரி செலுத்தித் தண்ணீர் பெறுவதுதான் முறை; இல்லை என்றால் மற்ற கோயில் குளத்திற்கும் வரி...