Tagged: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு விடுதலை இராசேந்திரன்

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவின் – அங்கீகரிக்கப்பட்ட மொழி களில் ஒன்று சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தையும்  இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கலாம் என்று கூறியதற்காக அம்பேத்கரை ‘இந்துத்துவவாதி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியாக ‘சமஸ்கிருதம்’ மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் ‘இந்துத்துவா’ கொள்கை.  ஆர்.எஸ்.எஸ்சுக்கு தத்துவார்த்த நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (க்ஷரnஉh டிக கூhடிரபாவள) நூலில் இதை கோல்வாக்கரே எழுதியிருக் கிறார். அம்பேத்கர் – இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட பல்வேறு மொழிகளில் சமஸ்கிருதமும் இருக்க லாம் என்றார். இரண்டுக்கும் மலையளவு வேறு பாடுகள் உண்டு; இந்த உண்மையை மறைக்கிறார்கள். சமஸ்கிருதம் எல்லோருக்கும் பொதுவான மொழியாக இருந்ததாம். அது மக்கள் மொழியாம்; இந்த நூலில்  எழுதியிருக்கிறார்கள். அப்படி இருந் திருக்குமானால்...

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

மோடி ஆட்சி அய்.நா.வில் அம்பேத்கர் விழா எடுத்தது ஏன்?

நியூயார்க்கில் அய்.நா.வின் தலைமையகத்தில் ஏப்.13 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகம், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தது. “ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் முன்னெடுப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து அம்பேத்கரின் பிறந்த நாளுக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும் அய்.நா.வின் வளர்ச்சித்திட்ட அதிகாரி யுமான ஹெலன் கிளார்க், கருத்தரங்கில், ‘அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளம்’ என்று பேசியிருப்பது அம்பேத்கரின் சமூக விடுதலை இலட்சியத்துக்கு சூட்டப்பட்ட மணிமகுடமாகும். ஹெலன், அய்.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலகளாவிய அடையாளமாக அம்பேத்கர் உயர்ந்து நின்றாலும், அவர் வாழ்ந்து உழைத்துப் போராடிய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை கவலையுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.  2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுதும் ஏழ்மை,...

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

இந்து பார்ப்பனிய மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். “இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று அறிவித்த அவரை ‘இந்துத்துவ’ ஆதரவாளராக சித்தரிக்க சங் பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ‘இந்து’ மதம் ஒரு மதமல்ல; அது ஒரு சமூகமும் அல்ல; இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்பு என்கிறார் அம்பேத்கர். பொருளாதாரச் சார்பாகப் பார்த்தாலும், ஜாதி நன்மை தரக்கூடியதல்ல. ஜாதி ஏற்பாட்டினால் மக்கள் சமூகம் விருத்தியடைய முடியாது; விருத்தியடையவு மில்லை. எனினும் ஜாதியினால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜாதி, இந்து சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதன்முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்தியச் சுதேசிகளையும் பிரித்துக் காட்டும் பொருட்டு முகம்மதியர் இந்தியச் சுதேசிகளை இந்துக்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே...

மன்னார்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்தவேண்டும் அம்பேத்கர் 125வது பிறந்த நாளில் திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை. மன்னார்குடி ஏப். 15. புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்டசெயலாளர் இரா.காளிதாசு கூறியது, புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அரசு சார்பில் முழுஉருவ வெண்கல...

தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

தூத்துக்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! அண்ணல் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணலின் சிலைக்கு தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன் மாலை அனிவித்தார். அதற்பிறகு தோழர்கள் சாதி ஒழிப்பு முழக்கங்களை விண்ணதிர முழங்கி அண்ணலுக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், மாவட்ட து.தலைவர் பால்ராசு, மாவட்ட து.செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன், தோழர்கள் கோ.அ.குமார், செல்லத்துரை மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள் கருத்தரங்கம் மன்னார்குடி 18042016

புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள் கருத்தரங்கம். நாள் : 18.04.2016 திங்கள் மாலை 6 மணிக்கு இடம் : சிட்டி ஹால்,மன்னார்குடி. ”ஜாதி மறுப்பு திருமணங்களும்,ஆணவ படுகொலைகளும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் உரையாற்றுகிறார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா வேலூர்

14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சியோடு நடத்தப்பட்டது. நிகழ்வு ஜாதி ஒழிப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் அவர்களின் நன்றி உரையாற்றினார் களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள்

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சேலம் மேற்கு

திராவிடர் விடுதலைக் கழக சேலம்  மேற்கு மாவட்ட சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளான இன்று 14.4.16 காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமையில் கழக தோழர்கள் மேட்டூர் அச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருப்பூர்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அறிஞர் அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாள் விழா ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு 14042016 காலை 10 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நடைபெற்றவுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது. கவிஞர் கனல்மதி அவர்கள் ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை கூற கூடியிருந்த தோழர்கள் திரும்பசொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி, மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளைசாமி,தோழர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள்,குழந்தைகள் ஆகியோர் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்சியின்போது இன்று பிறந்த நாள் காணும் கழக தோழர் சங்கீதா -தனபால் இணையரின் மகள் யாழினி...