சென்னை, கோவை, திருப்பூர், கடலூரில் ஆயுத பூஜை நிறுத்தக் கோரிக்கை மனு!
சென்னை: அரசு அலுவலகங்களில் (காவல் நிலையங்கள் உட்பட), ஆயுத பூஜை போன்ற மத நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எதிராக, அரசாணையும் நீதிமன்றத் தீர்ப்புகளும் இருக்கும் நிலையில், அதை மதிக்காமல் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்-15 அன்று காலை 11 மணிக்கு, சென்னை காவல் ஆணையரிடம், சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், தோழர்கள் ஏசு குமார், நாகராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர்: அக்-15 இரவு 7 மணி அளவில் கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா அவர்களைச் சந்தித்து அரசு அலுவலகங்களிலும், அரசுப் பள்ளிகளிலும் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும் அரசு ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் ஆயுத பூஜை நடைபெறுவதை தடுத்து நிறுத்தக் கோரி கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக கழகப் பொறுப்பாளர் பெரியார் சிவா மனு அளித்தார்.
கோவை: அக்-14 அன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதச்சார்பற்ற அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த பண்டிகைகள், வழிபாடுகள் நடத்தக்கூடாது என்கிற அரசின் ஆணைகளைப் பின்பற்ற வலியுறுத்தி கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: அக்-19 திங்கள் அன்று “ஆயுத பூஜை” எனும் பெயரில் அரசு அலுவலகங்களான காவல் நிலையங்கள், அரசுப் பள்ளிக் கூடங்கள் என அனைத்து இடங்களிலும் குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகளைத் தடுக்கக் கோரியும், இந்திய அரசியல் சட்ட சாசனம் கூறும் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும் அரசு ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் நடைபெறும் ஆயுத பூஜை நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக
மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் மாவட்டத்தலைவர் முகில்ராசு தலைமையில் மனு வழங்கப்பட்டது. மாநகரச் செயலாளர் மாதவன், தெற்கு பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகர அமைப்பாளர் முத்து, தமிழமுதன் (மார்க்சிய திராவிடப் பேரவை), தோழர்கள் இனியன், குணா, ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 22102026
