எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாக்கள்
சென்னை: மாவட்டக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 17 – 2026 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நங்கநல்லூர், மயிலாப்பூர், சேத்துப்பட்டு, தியாகராய நகர், கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய இடங்களில் பெரியார் சிலைகளுக்கு சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். சூளைமேடு, பச்சையப்பாஸ் கல்லூரியின் பின்புறத்தில், வடசென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வ. வேலுவின் முயற்சியில் கழகக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி கொடியேற்றினார். தோழர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன் – சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன் – ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆ.வ.வேலு – இராவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, மாவட்ட அமைப்பாளர் இளவரசன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ், மயிலை தோழர்கள் சுகுமார், மனோகர், சிவா, பகுதி அமைப்பாளர்கள் எம்ஜிஆர் நகர் துரை, சைதை சிவா, முழக்கம் உமாபதி, ராஜன், விஜயன், மாணவர் கழக வடசென்னை மாவட்ட அமைப்பாளர் குடிஅரசு, ஏசு குமார், சு. பிரகாஷ், லீலா, குறளரசி, திரிபுரசுந்தரி, சிகாமணி, புகழேந்தி, சுரேஷ், திருவல்லிக்கேணி செந்தில், வேளச்சேரி செந்தில், அசோக், தமிழ்ச்செல்வன், கொரட்டூர் ராஜேந்திரன், சித்தார்த்தன், மோகன், பரதன், ஜேம்ஸ், வீரா, நிரஞ்சன், அஜித், நாகேந்திரன், பிரபாகரன், கனிகா செல்வன், காவை இளவரசன், கார்த்தி ராஜேந்திரன், நங்கநல்லூர் வெங்கடேசன், திருவல்லிக்கேணி லட்சுமணன், தாமரை, ராயப்பேட்டை சுரேந்தர், பல்லாவரம் சுரேந்தர், புழுதிவாக்கம் அருண், ஓம்பிரகாஷ், வேலழகன், வீரமணிகண்டன், வேளச்சேரி ராஜா, மருத்துவர் கணேஷ், நங்கை சுகுமாரன், தினகரன், மயிலை உதயா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.என். துரை ஆகிய தோழமைகளும் பங்கேற்றனர்.
கோவை: மாநகர கழகத்தின் சார்பில் அன்று சதீஷ் தலைமையில் சிவானந்த காலனி பவர் ஹவுஸ், ஹலோ சத்தியமூர்த்தி தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பும், சிவராசு தலைமையில் சவுரிபாளையம் டிட்டோ ஸ்டுடியோ முன்பும், நிலவழகன் தலைமையில் உப்பிலிபாளையம் பகுதியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இறுதியாக தோழர்கள் அனைவருக்கும் நிலவழகன் இல்லத்தில் தேநீர் வழங்கினார்.
திருச்சி: மாவட்டக் கழகம் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற வன அலுவலர் பெரியாரின் பெருந்தொண்டர் கோவிந்தசாமி தலைமையில், ஓய்வு பெற்ற வன அலுவலர் மனோகரன் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தோழர் லதா ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் தோழர்கள் இந்திரா, சத்யா, டார்வின் தாசன், குணராஜ், மணிகண்டன்,சர்மிளா, முருகானந்தன், பிரியதர்ஷன், அசோக், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் விளையாட்டுப் போட்டிகள்
சிவகங்கை மாவட்டக் கழகத்தின் சார்பில், இரண்டு முக்கிய நிகழ்வுகளாக எழுச்சியுடன் நடத்தப்பட்டது. காரைக்குடி மாநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அபிநயா மாலை அணிவித்தார். மாவட்டச் செயலாளர் பெரியார் முத்து, மாவட்டத் தலைவர் முத்துக்குமார், தோழர்கள் ரமேஷ், இளங்கோவன், நதியா, வினோத் ராஜா, அன்பரசு, திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இயக்கத் தோழர் இளங்கோவன் இல்லத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, திமுக தலைமைக்கழகப் பேச்சாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக ஒன்றியச் செயலாளர் டாக்டர் கே.எஸ். ஆனந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில், பெரியார் முத்து, சமதர்ம குடியரசு கழகத்தின் அம்பேத்கர் பிரியன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள்.
திமுகவைச் சார்ந்த கவுன்சிலர் காளீஸ்வரன் மற்றும் திமுகவின் பல்வேறு நிலை பொறுப்பாளர்கள், தமிழக மக்கள் முன்னணி மணிமாறன், எழுத்தாளர்.முனைவர் மோகன், குடியிருப்பு நல சங்கத் தலைவர் கண்ணன், செயலாளர் குணசேகரன் மற்றும் தோழர்கள் பழனிச்சாமி, அருள்ஜோதி, அன்பு, சசிக்குமார், சுசீலா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நிறைவாக சரவணன் நன்றி கூறினார். காரைக்குடி பனந்தோப்பு பகுதியில், 5-வது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சிறப்புப் பரிசாக கழக வெளியீடுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை மாநகர அமைப்பாளர் ரமேஷ் செய்தார்.
திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் காலை 9.30 மணியளவில் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் சரஸ்வதி, தோழர். ஸ்ரீஜா ஆகியோர் மாலை அணிவித்தனர். முழக்கங்களை மாநகரத் தலைவர் தனபால் முழக்கமிட தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்தனர். உறுதிமொழியை தமிழ்நாடு மாணவர் கழகம் பல்லடம் தேன்மொழி வாசித்தார். நிகழ்வில் கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து, தெற்குப் பகுதி அமைப்பாளர் ராமசாமி, பல்லடம் சண்முகம், ஹரிஷ் குமார், ரூபா, காளியம்மாள், ராஜசிங்கம், இனியவன், ரவி , சுபாஷ், குணா ,ராஜ்குமார், மதன், பெரியார் பிஞ்சு இராவணன், கருணாநிதி, ஸ்டாலின், சிபிஎம் திருப்பதி ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 24092026
